Blogger Widgets

Total Page visits

Saturday, March 23, 2013

உன் நட்பு

நம்பிக்கையில் வளர்ந்து
நாடித்துடிப்பில் கலந்துபோன
இனிமையான நட்பு

உனக்கும் எனக்கும் இடையில்..
உனக்கும் எனக்கும் ஒரே எண்ணம்தான்

நான் சொல்ல முனையும்போது
நீ முடித்து வைப்பாய் வாக்கியத்தை…

தோல்விகள் வரும்போது
தோள் கொடுப்பாய் சாய்ந்துகொள்ள
தோல்விகளை விரட்டும்-உன் நட்பு

கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவாய்
அது மனதில் தட்டச்சு செய்துவிட்டு
மௌனமாய் சந்திக்கும் என் உதடுகளை…

வானம்தான் நட்பு என்றால்
அதை அலங்கரிக்கும்
நட்சத்திரங்கள்- நம் நட்பு

நினைக்க மறப்பதில்லை
நிரந்தரமாய் பிரிவதில்லை
பிரியா விடைகொடுத்தாலும்
மனசுக்குள் பயணிக்கும்- நம் நட்பு

நட்புக்கு ஈடு இணை எதுவுமில்லை
அதனால்தான் தேடுகின்றோம்
இணையதளத்திலும் இருந்திடுமென்று…

உன்னை சந்திக்கும் இடத்தில்
கடந்த காலமும் நிகழ் காலமும்
பரிமாரப்படுகின்றன நமக்குள்
அங்கே துளிர்த்து நிற்கும் - நம் நட்பு.

அழகை பார்த்து வருவதில்லை நட்பு!
வயதை பார்த்து வருவதில்லை நட்பு !
ஆண்,பெண் ,பார்த்து வருவதில்லை நட்பு!
மொழி பார்த்து வருவதில்லை நட்பு !
மதம் பார்த்து வருவதில்லை நட்பு!
நாடு பார்த்து வருவதில்லை நட்பு !
தானாக வருவது நட்பு !
என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாதது நட்பு !
ஒருவரை ஒருவர் பார்க்காமல் வரும் நட்பு ! மிக பலம் வாய்ந்தது

Received in mail from my friend

No comments: