Blogger Widgets

Total Page visits

Wednesday, March 13, 2013

ட்ராப் பாக்ஸ்

பெரும்பாலானவர்கள் ட்ராப் பாக்ஸ் என்பது  இணையத்தின்மூலம்நேரடியாக தேக்கிவைக்கவைக்க உதவும ஒருகாலிநினைவகம் என்றே தவறாக எண்ணுகின்றனர் ஆயினும் அதன்மூலம் பின்வரும் ஏராளமான பயன்களை பெறமுடியும்

1 செல்லிடத்து பேசி அல்லது வேறுஎந்தவொரு சாதனத்தின்மூலமும் இதனை எளிதாக அனுகிடமுடியும்

2 தொடக்கத்தில் நமக்கு 2 ஜிபி காலி நினைவகத்தை இலவசமாக வழங்குகின்றது அதன்பின் நாம் இந்த ட்ராப்பாக்ஸ் தளத்தில் சேர்த்திடும் நண்பர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு நண்பரின் சேர்க்கைக்கும் 500 எம்பி காலி நினைவகத்தை நம்முடைய கணக்கில் சேர்த்து வழங்குகின்றது இவ்வாறு அதிகபடசம் 16 ஜிபிவரை காலிநினைவகத்தை நமக்கு இலவசமாக வவங்குகின்றது

3 ட்ராப்பாக்ஸின் வாடிக்கையாளர் மென்பொருளானது நம்முடைய கணினியில்  இதற்கென தனியான மடிப்பகத்தை உருவாக்கி  கொள்கின்றது நம்முடைய கோப்பினை இழுத்துசென்று இன்த மடிப்பக்ததில் விட்டால் போதும்  தானாகவே ட்ராப்பாக்ஸானது இந்த கோப்புகளை இதனுடைய இணைய பக்கத்தி்கு மேலேற்றி கொள்கின்றது

4  Windows, Mac, Linux எனஎந்தவொரு இயக்கமுறைமையிலும்   ஏன் ஸ்மார்ட் போன்களில் கூட அதற்கான சிறப்புவகை பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தி கொள்ளமுடியும்

5 கோப்பின் அளவை பற்றி கவலைபடாமல் இதில் பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும்

6 எந்த இடத்திலிருந்தும் எந்த கணினி மடி்ககணினி ஸ்மார்ட் போன் போன்று எந்த சாதணத்திலிருந்தும் இதனைஅனுகிடமுடியும்

7 இந்த ட்ராப் பாக்ஸில் தவறுதலாக அழித்துவிட்ட கோப்பினை முப்பது நாட்களுக்குள் கவலையில்லாமல் அதனை மீட்டெடுத்துவிடமுடியும்

8 ஒரு கோப்பினை பல்வேறு திருத்தங்களை செய்துகொண்டிருப்போம் அப்போது இவ்வாறு திருத்துவதற்கு முந்தைய கோப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணிடும்போது உடன் முந்தைய கோப்பின் பதிப்பை மீட்டெடுக்கமுடியும்

9 இந்த ட்ராப்பாக்ஸை பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இணைய இணைப்பு விடுபட்டாலும் தொடர்ந்து பண்புரிந்தபின் மீண்டும் இணைய இணைய இணைப்பு கிடக்கும்போது நாம் செய்த பணி நிகழ்நிலை படுத்தி கொள்ளும்

10 நம்முடைய நண்பர்களுடன் குறிப்பிட்ட கோப்பினை மடிப்பக்ததிலுள்ள கோப்புகளை எளிதாக அவர்களுக்கென தனியாக இந்த ட்ராப்பாக்ஸில் கணக்கு இல்லையென்றாலும் பகிர்ந்து கொள்ளமுடியும்

11 அவ்வாறே நண்பர்கள் குழுவாகவும் பகிர்ந்து கொள்ளமுடியும்

12 நம்முடைய இணைப்பின் கற்றை அளவு அதாவது அகல்கற்றையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அதற்கேற்ப இதனை பயன்படு்ததி கொள்ளமுடியும் அவ்வாறே கோப்பினை பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது இணையஇணைப்பு துண்டிக்கபட்டு பின் இணைப்பு கிடைத்திடும்போது விடுபட்ட இடத்திலிருந்து பணி தொடர்ந்து நடைபெறும்

13 இது திறமூல பயன்பாடாக இருப்பதால் நாம் விரும்பும் சேவையை அதற்கான சேவை வழங்குனர்மூலம் இதில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

No comments: