மொபைல் ரிங்டோன்கள் கவனச் சிதறல்களுக்கு காரணமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு
கூறுகிறது. மொபைல்களில் பிடித்த பாடல்களை ரிங்டோனாக வைப்பது அனைவரும்
அறிந்த விஷயம். இன்றைய நவநாகரீக உலகில் இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால்
இந்த ரிங்டோன் கவனக் குறைவை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன்
பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக
அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
சில மாணவர்களை வைத்து பரிசோதனை செய்தனர். மாணவர்களை குறிப்பிட்ட பாடம் தொடர்பாக தேர்வு எழுத வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 30 நொடிகள் ரிங்டோன் கேட்ட பிறகு தேர்வு எழுத வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சாதாரணமாக தேர்வு எழுதியதைவிட ரிங்டோன் கேட்டபிறகு தேர்வு எழுதியதில் பல குளறுபடிகள் இருந்தன. தெளிவாக எழுதவும் இல்லை.
முதலில் எழுதியதில் உள்ள தெளிவைவிட 25% சதவிகிதம் குறைவாக இருப்பதை காட்டி
இருக்கிறது, இந்த ஆய்வு. இதன் மூலம் ரிங்டோன்களால் ஏற்படும் கவண குறைவு
மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
இதனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிங்டோன்களை தவிர்த்து சைலன்ட்
மோடில் மொபைலை வைத்து இருப்பது கூட நல்லது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கவனத்தை குறைக்கும் இது போன்ற விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது
அவசியமாகிறது.
No comments:
Post a Comment