Blogger Widgets

Total Page visits

Saturday, March 30, 2013

ஜிமெயிலில் புதிய Compose வசதி

கூகிள் தளம் வழங்கும் மிகச்சிறப்பான வசதி ஜிமெயில். ஜிமெயில் பல்வேறுபட்ட வசதிகளை நமக்கு அளிக்கிறது. தற்பொழுது புதியதாக புதிய Compose வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

உங்களுடைய ஜிமெயிலைத் திறந்தவுடன், இந்த வசதியைப் பற்றிய அறிவிப்பு வரும்.
அதில் அந்த வசதியைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தையும் மேலதிக விபரங்களைப் பெறுவதற்கு Learn More என்ற இணைப்பையும் வழங்கியிருப்பார்கள்.

சரி. இந்த புதிய Gmail Compose வசதியினால் என்ன பயன்?

நாம் ஜிமெயில் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே புதியதாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைப்போம். அப்போது Compose பட்டனை அழுத்தி புதிய மெயிலை தட்டச்சிடுவோம். அப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் இமெயில் தானாகவே மறைந்து Compose விண்டோ திறந்துகொள்ளும்.

இனி அவ்வாறில்லாமல், மெயிலைப் படித்துக்கொண்டிருக்கும்பொழுதே புதிய இமெயிலை தட்டச்சிட்டு அனுப்பலாம்.

புதிய New Gmail Compose வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

உங்களுடைய மின்னஞ்சலை நீங்கள் திறந்த உடன் இவ்வாறானதொரு விண்டோ உங்களுக்குத் தோன்றும். அதில் நீங்கள் Continue என்பதைக் கொடுத்தால் இவ்வசதியை நீங்கள் செயல்படுத்தலாம்.

அடுத்து Compose பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு இவ்வாறானதொரு புதிய New Message என்ற தலைப்பில் அமைந்த பெட்டித் திறக்கும்.

Gmail's new compose and reply experience

அதில் Recipient என்பதில் கிளிக் செய்தால் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி தட்டச்சிடும் பெட்டி To தோன்றும். அதற்கு நேர் எதிராக இருக்கும் CC, BCC என்பதை கிளிக் செய்து தேவையான மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட முடியும்.
அடுத்து Subject என்பதில் கிளிக் செய்து எதுகுறித்த மின்னஞ்சல் என்பதை குறிப்பிடலாம்.
அதற்கு அடுத்து உள்ள பெட்டியில் தகவல்களை தட்டச்சிட்டு கீழிருக்கும் Send என்பதை கிளிக் செய்வதன் மூலம் வேண்டிய நபருக்கு மின்னஞ்சலை அனுப்ப முடியும்.
Text Format செய்ய A என்பதில் கிளிக் செய்து வேண்டிய பார்மட் செய்துகொள்ளலாம்.

அதற்கு அடுத்து பேப்பர் கிளிக் போன்றுள்ள ஐகானில் கிளிக் செய்து (Attach Files) மின்னஞ்சலுடன் கோப்புகளையும் இணைத்து அனுப்ப முடியும்.
அதற்கு அடுத்துள்ள + குறியில் மௌஸ் குறியை வைக்கும்பொழுது முறையே photos, links, emoticons, and Google Calendar events போன்ற வசிதிகளைப் பயன்படுத்த முடியும்.

insert files using drive


மீண்டும் பழைய Compose Mode - க்குத் திரும்புவது எப்படி? 

இப்புதிய வசதி தேவையில்லை என நீங்கள் நினைத்தால் இறுதியாக உள்ள கீழ்நோக்கி அம்புக்குறியின் மீது கர்சரை வைத்தால் ஒரு கீழ்விரி மெனு விரியும். அதில் முதலில் உள்ள Temporarily switch back to old compose என்பதனைத் தேர்வு செய்வதன் மூலம் மீண்டும் பழைய Compose Mode-ஐப் பெற முடியும்.

Thanks Good Morning by மனோ.

No comments: