நம் நட்பு..!
'நீ' , 'நான்' என்று அன்றிருந்தோம்,
அதை 'நாம்' என்றாக்கியது நம் நட்பு..!
உடலும் உயிருமாக நாம் இணைந்தோம்,
இனி என்றும் வற்றாது நம் அன்பு..!
என்றும் ஓய்வின்றி பேசி மகிழ்ந்தோம்..
வாடும் பூவையும் மலர்விக்கும் நம் சிரிப்பு..!
நெடும் சாலையும் குறுக நாம் நடந்தோம்..
தினம் தேய்ந்திடினும் உடன் நடக்கும் நம் செருப்பு..!
பல சரிவுகள் வந்திடினும் பிரியாமல் நின்றோம்..
சிறு சண்டையிலும் மனதில் முளையாது வெறுப்பு..!
இன்பமோ.. துன்பமோ.. புகழோ.. இகழோ.. பகிர்ந்தோம்..
இதுவல்லவா.. தன்னலமில்லா நட்பின் சிறப்பு..!
பிரிவென்பதை மறந்து நட்பில் பிணைந்தோம் ..
ஒருவேளை பிரிவென்று வந்தால்? பெற்றோம் பதைப்பு..!
வான் போல விரிந்த நம் நட்பு..
வானவில் போல மறையுமா?!
எங்களது இந்த ஆச்சரியக்குறி ..
முற்றுப்புள்ளியாவது கேள்விக்குறிதான்!
ஆனால்..
நட்போ..
காலத்தால் பிரிவொன்று வந்திடினும் அழியாது..
செழிப்பாக வளரும்!
எனவே..
" பிரிவென்றும் இல்லை நம் நட்பில்..
சரிவென்றும் இல்லை நம் அன்பில்..
மீறி வந்திடினும்.. பிரிவென்பது.. நம் இறப்பில்..!"
received in mail from my friend
No comments:
Post a Comment