நாம்
தொழில்நுட்பத்தின் வயதில் இருக்கிறோம். உலகத்தை, கிராமமாக தொழில்நுட்பம் சுருக்கி இருக்கிறது.
நாம் ஒரு கிராமத்தில் இருக்கிறோம். நான் அதை ஒரு குடும்பமாக பார்க்க விரும்புகிறேன்.இதை
ஒரு குடும்பமாக பார்க்க விரும்புவதே என் கனவு. இந்த உலகம் மிகுந்த கலாச்சாரங்கள்,மரபுகள், மொழிகள் மற்றும்
மதங்களை கொண்டிருப்பது அதிர்ஷ்டமாகும்.
புத்திசாலி மக்கள் என்ன செய்வார்கள் என்று தெரியுமா? அவர்கள் எப்பொழுதும் வேறு பாட்டையும் பன்முகத்தன்மையையும்
கொண்டாடுவார்கள்.
முட்டாள்கள்
சண்டையிட்டு கொண்டு
போரை உருவாக்குவார்கள், இல்லையா? இந்த உலகத்தில் என்ன செய்ய வேண்டுமெனில்,மக்களுக்கு
கல்வி வழங்க வேண்டும்.மக்கள் ஏன் அறியாமையிலும், முட்டாள்தனத்திலும் இருக்கிறார்கள்
? அவர்களுடைய பார்வையை விசாலமாக்க வாய்ப்பு இருக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு பரந்த கண்ணோட்டத்தில்
வாழ்க்கையை கொடுப்பதே வாழும் கலையின் குறிக்கோள்; ஒவ்வொரு கண்ணீரையும் புன்னகையாகவும்,கோபத்தை
கருணையாகவும், வெறுப்பை நிபந்தனையற்ற அன்பாகவும் மாற்றுவதேயாகும். அப்படிப்பட்ட
வன்முறை, நோய், துக்கம் மற்றும் வறுமை அற்ற உலகை காண்பதற்கு நாம் கை கோர்ப்போம்.
முதலில்,
நாம் பெரியதாக கனவு காண வேண்டும். நான் பள்ளியில் சிறுவனாக இருந்த போது, இப்பொழுதும்
ஒரு சிறுவனாகத் தான் இருக்கிறேன் - என்னுடைய குடும்பம் உலகம் முழுவதும் இருக்கிறது
என்று நண்பர்களிடம் கூறி இருந்தேன். அவர்கள் என் அம்மாவிடம் வந்து எங்களுக்கு லண்டனில்,
ஜெர்மனியில், பிரான்சில், அமெரிக்காவில் உறவினர்கள்
இருக்கிறார்களா என்று கேட்பார்கள்? அதற்கு என் அம்மா இல்லை என்பார்.என் அம்மா என் காதை
பிடித்து, "ஏன் இந்த பொய்யை சொல்கிறாய்"என்று கேட்பார். என் அம்மா
"அவன் எப்பொழுதும் பொய்யே சொல்ல மாட்டான், ஆனால்,அவனுக்கு உலகம் முழுவதும் உறவினர்களும்,குடும்பமும்
இருக்கிறதென்றும், அவனுக்கு உலகம் முழுவதும் மக்களை தெரியும் என்று இதை ஒன்றை தான்
மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்கிறான்" என்று சொல்வார்.
உங்களுக்கு
என்ன வேண்டும்? தபால் வில்லை, நாணயம் அல்லது ரூபாய் நோட்டு? கவலைபடாதே உனக்கு நான்
அனுப்பி வைக்கிறேன்.எனக்கு உலகம் முழுவதும் எல்லோரும் இருக்கிறார்கள்" என்று
என்னுடைய நண்பர்களிடம் சொல்வேன். நான் இதை சொன்னேன் எனில் நம் எல்லோரிடத்திலும் மிக ஆழத்தில்,
எல்லோரையும் இணைக்கும் ஏதோ
ஒரு சக்தி இருக்கிறது.
பல்கேரியாவுக்கு
இது என்னுடைய இரண்டாவது பயணம் ஆகும். நான் ஏற்கனவே நிறைய மாற்றங்கள், நிகழ்ந்திருப்பதை
பார்க்கிறேன். உள்கட்டமைப்பு உயர்ந்து பொருளாதாரம் முன்பை விட நன்றாக உள்ளது. அது இன்னும்
நன்றாக இருக்கும். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம்
ஆகிய ஆழமான வேர்கள் இருக்கின்றன. இழக்காதீர்கள். இளைஞர்கள் தங்கள் வேர்களை பாதுகாக்க
வேண்டும், தங்கள் பார்வையை விசாலமாக்க வேண்டும்.ஆகையால்,இன்று பெரிய பேக்பைபர் நிகழ்ச்சியை
நிகழ்த்த காரணம் இதுதான். பழைய கலாசாரம் மற்றும் மரபுகளை ஊக்குவிற்பதே இதனுடைய நோக்கமாகும்.சில
பல்கேரியன் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இந்திய வந்திருக்கிறார்கள். அவர்களின்
நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது என்பதை இங்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்.
ஆகையால், மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். இது தான் ஞானம்.வன்முறை இல்லாத சமூகம், நோய் இல்லாத உடம்பு. குழப்பம் இல்லாத மனம், தடுப்பு இல்லாத புத்தி,துக்கம் இல்லாத ஆன்மா, பேரதிர்ச்சி இல்லாத நினைவு,மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, இவைகள் ஒவ்வொருவரின் பிறப்புரிமை. வாழும் கலை அமைப்பு அதன் தன்னார்வ தொண்டர்களும் இதை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மக்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வர இங்கு நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் இரவு பகலாக, அலுப்பின்றி வேலை செய்பவர்களை நான் வாழ்த்துகிறேன்.
நான்
இங்கு மகிழ்ச்சியாக இருக்க ஐந்து குறிப்புகள் அல்லது ஐந்து ரகசியங்களை கொடுப்பேன். ஒரு தடவை,
புத்திசாலி ஒருவர் ஒரு கோட்டை வரைந்து, இந்த கோட்டை அழிக்காமல்,தொடாமல் சிறிதாக்க வேண்டும்
என்று அவருடைய மாணவர்களை கேட்டார். நீங்கள் எப்படி செய்வீர்கள்? நீங்கள் அதை தொடாமல்
சிறிதாக்க வேண்டும்.ஒரு புத்திசாலி மாணவன் அதற்க்கு கீழே ஒரு பெரிய கோட்டை வரைந்தான்.
ஆகையால், தானாகவே அந்த கோடு சிறிதாகியது. இதிலிருக்கும் பாடம் என்னவெனில், உங்களுடைய
கஷ்டம் பெரியதாக தோன்றினால்,உங்கள் கண்களை தூக்கிப் பாருங்கள் ஏனெனில் நீங்கள் உங்களை
மட்டுமே கவனிக்கிறீர்கள். உங்கள் கண்களை உயர்த்தி உங்களை விட மோசமான கஷ்டத்தில் இருப்பவர்களை
பார்பீர்களேயானால், உங்களுடைய கஷ்டங்கள் நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரியதாக இல்லை
என்பதை உடனே உணர்வீகள்.
உங்களுக்கு
பிரச்சினைகள் இருப்பதாக நினைத்தால், பெரிய பிரச்சினைகள் உடையவர்களை பாருங்கள். உடனே,
என்னுடைய பிரச்சினை மிகவும் சிறியது, என்னால் சமாளிக்க முடியும் என்னும் தைரியம் உங்களுக்கு
உண்டாகும். எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதின் முதல் கருத்து என்ன வெனில், உலகத்தில்
பெரிய பிரச்சினை உள்ளதை பாருங்கள். உங்களுடைய பிரச்சினை சிறியதாக தோன்றும். அதை சந்திப்பதற்கான
அல்லது தீர்பதற்கான ஆற்றலும் நம்பிக்கையும் பெறுவீர்கள். இன்னும் எளிய வார்த்தைகளில், தேவை
இருப்பவர்களுக்கு சேவை செய்யுங்கள்.
இரண்டாவது உங்களுடைய சொந்த வாழ்க்கையை
பாருங்கள். கடந்த காலத்தில், உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. அவைகள் அனைத்தும்
வந்து சென்று விட்டன. இதுவும் கடந்து போகும் மற்றும் இதிலிருந்து வெளிவருவதற்கான ஆற்றலும்
திடமான நம்பிக்கையும் இருக்கிறது என்பதை அறியுங்கள். உங்களுடைய கடந்த காலத்தை பார்பதாலும்
புரிந்து கொள்வதாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும்.
மூன்றாவது மிக முக்கியமானது,
மூச்சு பயிற்சி மற்றும் ஓய்வாக இருப்பதை செய்யுங்கள். நான்காவது, நாம் கோபத்தில்
"இதை நான் கொடுக்கிறேன்" என்று சொல்கிறோம் என்று உங்களுக்கு தெரியும்.
"நான் இந்த பிரச்சினையை மேலே கொடுக்கிறேன், என்னால் தீர்க்க முடியாது, அந்த இறைவன்
உதவி புரியட்டும்" என்று வெறுப்பு அல்லது கோபம் இல்லாமல் சொல்லுங்கள். உங்களுக்கு
உதவி கிடைக்கும் என்று நீங்கள் அறியுங்கள்; பிரபஞ்சத்தில் உள்ள ஒரு சக்தி உங்களுக்கு
உதவப்போகிறது.
நான்காவது, என்னவென்று நினைக்கிறீர்கள்?
அதை உங்களிடமே விட்டு விடுகிறேன். ஐந்தாவது ஒன்றை பற்றி யோசியுங்கள். நான் 25 அல்லது
30 கருத்துக்கள் வரை செல்ல முடியும், ஆனால் நீங்கள் அதை கொண்டு வர விரும்புகிறேன்.
நாம் மற்றவர்களிடம் தீர்வை எதிர்பார்க்கிறோம். நமது மனதை உள்முகமாக திருப்பினால், நமக்கு
சில யோசனைகளை மற்றும் சில தீர்வுகள் கிடைக்கும் என்பதை மறந்து விட்டோம். இதுதான் ஐந்தாவது
- தன்னிச்சையானது! தன்னிச்சையாக இருங்கள், சில நிமிடங்கள் ஆழமாக செல்லும் போது தன்னிச்சையான
இயல்பு வரும். எல்லாமே மிக சரியாக இருக்கும் போதும், நீங்கள் விருப்பபடி நடக்கும் போதும்
உங்களிடம் புன்னகை இருப்பது பெரிய விஷயம் இல்லை.ஆனால்,“எது வந்தாலும் சரி, நான் புன்னகையோடு
இருப்பேன்" என்று சொன்னால், உங்களுக்குள் இருந்து அபிரிவிதமான ஆற்றல் வெளிவருவதை
பார்ப்பீர்கள். மற்றும் பிரச்சனைகள் ஒன்றுமில்லாததை போல இருக்கின்றன, அவைகள் வந்து
போகும்.
பல்கேரியாவில்
உள்ள எல்லா சிறைசாலைகளிலும் நமது தன்னார்வ தொண்டர்கள் நல்ல வேலையே முடித்திருக்கிறார்கள்
என்பதை குறிப்பிட விரும்புகிறேன். இந்த பயிற்சியை முடித்த பிறகு, நூற்றுக் கணக்கானவர்களின்
முழு வாழ்க்கையும் மற்றும் சிறையில் இருக்கும் நூற்றுக் கணக்கான மக்களின் வாழ்க்கையும்
மாறி இருக்கிறது. மிகவும் நன்றாக இருக்கிறது. இது தான் நுண்ணறிவு என்பது.ஒருவர் குற்றவாளியாக
இருப்பினும் அவரிடம் உள்ள நல்லதை வெளிக் கொணர்வதே நுண்ணறிவாகும். மோசமான குற்றவாளியிடம்
கூட,நல்லது இருக்கும். அங்கே நல்ல குணங்கள் இருக்கும். அதை நாம் வெளிக்கொணர
வேண்டும். அதற்கு நுண்ணறிவு வேண்டும். சிலரை கண்டனம் செய்வதற்கு அவ்வளவு நுண்ணறிவு
தேவை இல்லை ஆனால் கண்டனம் செய்யப்பட்டவர்களிடமிருந்து கருணையை வெளிக்கொணர சில பயிற்சிகள்
தேவைபடுகிறது.
எந்த
சுயநல நோக்கமில்லாமல், வாழ்த்துக்களுடன் சிறைகளுக்கு சென்று அவர்களின் வாழ்க்கையில்
மனித மதிப்புகளை கொண்டு வந்த நமது தன்னார்வ தொண்டர்களையும் நான் உண்மையாக வாழ்த்துகிறேன்.
முட்டாள் மக்கள், எல்லோரையும் அரக்கர்கள் மற்றும் கெட்டவர்கள் என்று வர்ணம் பூசுவார்கள்,
பக்தியானவர்களை கூட. கெட்டவர்கள் என்று மக்கள் சொல்வார்கள். முழு உலகமும் மோசமானது.
அது துரதிர்ஷ்டவசமானது, நல்ல சேர்க்கை அல்ல.
கடந்த
வாரம், நான் கனடாவில் இருந்த பொழுது, ஒரு தம்பதியினர் என்னிடம் வந்தார்கள், அவர்கள்
கண்ணீரோடு இருந்தார்கள்.அவர்களுடைய இளவயது மகன் தற்கொலை செய்து கொண்டான். அவனுடைய தற்கொலை
குறிப்பில், முழு உலகமும் மோசமானது என்று எழுதி இருந்தான்; அது வாழ்வதற்கு சரியானதல்ல.
நல்ல மனிதர்களுக்கு இந்த கிரகத்தில் இடமில்லை. எல்லா அரக்கர்கள் மற்றும் மோசமான மனிதர்கள்
ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அந்த இளைஞன் எந்த அளவு வலியை அனுபவித்து இருக்க வேண்டும்,
ஏனெனில் ஒவ்வொரு வரும் உங்களிடம் மற்றவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று கூறுகிறார்கள்.
அது நல்ல சேர்க்கை அல்ல. மோசமான மனிதரிடம் கூட, ஒரு நல்ல மனிதன் மறைந்து இருக்கிறான்,
அது வெளிப்பட வேண்டும். நல்லது மேலே வரும்போது எதிர்மறையானது தானாகவே மறைந்து விடும்.
இந்த பதிவு வாழும் கலை அமைப்பு வலைபக்கத்தில் இருந்து பகிரபடுகிறது
No comments:
Post a Comment