Blogger Widgets

Total Page visits

Wednesday, March 20, 2013

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல: மேம்பட்ட திறமைசாலி! – நிரூபிக்கப்பட்ட உண்மைகள்!

முன்னொரு காலத்தில் அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவிற்கு ஆளுமைத்திறன் படைத்தவர்களாக வளர்ந்திருக்கின்றனர். வீடோ அலுவலகமோ அவர்களின் பன்முகத்திறமை பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் புத்திசாலித்தனம் அவர்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. ஆனால் பெண்களை மட்டம் தட்ட நினைக்கும் ஆண்கள் பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகின்றனர். எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை உணர்ந்துள்ள ஆண்கள் அவர்களின் பெண்மையை குறிவைத்து தாக்குகின்றனர்.

இதுபோன்ற சவால்களையும் சந்தித்து வரும் பெண்கள் படிப்போ, வேலையோ எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்களை விட எந்தெந்த விதத்தில் பெண்கள் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று பத்து விஷயங்களை மனித வள மேம்பாட்டு மையம் பட்டியலிடப்பட்டுள்ளது- படியுங்களேன்!.

19 -women is better than men
தாய்மை உணர்வு

கருவை சுமக்கும் பெண் வலிமையானவளாகவும், உணர்வுகளையும், அன்பையும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிப்பவளாகவும் இருக்கிறாள். கடவுளின் சிறந்த படைப்பு பெண் என்றால் மிகையாகாது.

ஆளுமைத்திறன் அதிகம்

பெண்கள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, ஆசிரியர்களாக, விமானம் ஓட்டுபவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் சி.இ.ஒ பதவியை கூட பெண்கள்தான் வகிக்கின்றனர். அவர்களின் ஆளுமைத்திறன் அதிகம். இந்தியாவில் ருக்மணி லட்சுமிபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட பெண் தலைவர்களின் ஆளுமைத்திறன் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

பெண்கள் ஆரோக்கியசாலிகள்

இன்றைக்கு ஆண்களை விட பெண்கள்தான் 5 முதல் 10 வயதுவரை அதிகம் உயிர் வாழ்கின்றனர். உலக அளவில் 85 சதவிகித பெண்கள் 100 வயதுவரை வாழ்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆண்கள்தான் அதிக அளவில் மாரடைப்பினால் இறக்கின்றனர். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவுதான் இதற்கு காரணம் அவர்களின் உடலில் சுரக்கு ஈஸ்ரோஜன் என்ற ஹார்மோன்தான். இது ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறதாம்.

பன்முகத்திறமை அதிகம்

இயற்கையாகவே பெண்கள் பன்முகத்திறன் படைத்தவர்கள். பிரச்சினைகளை எளிதில் கையாளுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். அன்னையாகவும், மனைவியாகவும் அதே சமயத்தில் அலுவலகத்தில் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து தங்களில் திறமையை நிரூபித்துள்ளனர்.

பெண் சிறந்த மேலாளர்

மிகப்பெரிய நிறுவனங்களில் மேலாளர்களாக பதவி வகிக்கும் பெண்கள் அந்த நிறுவனத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஹிலாரி கிளிண்டன், சாந்தா கோச்சர், இந்திராநூயி, உள்ளிட்ட பெண்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை திறமையாக நிர்வாகித்து நிரூபித்துள்ளனர்.

மகிழ்ச்சியான மனநிலை

பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. கணவர் குழந்தைகளிடம் மகிழ்ச்சியோடு சமாளிக்கின்றனர். தன்னுடன் பணிபுரிபவர்கள், அலுவலக உயரதிகாரிகள் ஆகியோருடன் இதே மகிழ்ச்சியான மனநிலையுடன் தான் பேசுகின்றனர். ஆண்களின் சந்தோசம் பணம் சார்ந்தது. ஆனால் பெண்களின் சந்தோசம் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்கின்றது நீல்சன் நிறுவனம்.

வசீகரிக்கும் அழகு

பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அது கடவுள் கொடுத்த வரம். பதின்பருவ பெண் ஒருவித அழகு என்றால் குழந்தை பேற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு அழகுடன் கம்பீரமும் அதிகரிக்கும். எதிர்காலத் தலைமுறையை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டோம் என்ற கர்வத்தில் பெண்களுக்கு அழகு கூடுமாம்.

எதையும் சமாளிப்பார்கள்

பெண்கள் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவுதான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

தீர்க்கதரிசனம் அதிகம்

பெண்கள் ஆலோசனை சொல்வதில் சிறந்தவர்கள். அவர்கள் எதையும் தீர்க்கதரிசனத்துடன் அணுகுவார்கள். அதனால்தான் பெண்புத்தி பின்புத்தி என்ற பழமொழியே உருவானது. ஆனால் இந்த பழமொழியை சில தவறாக சொல்லி வருகின்றனர். எதையும் லாஜிக் ஆக யோசிப்பதில் பெண்கள் கில்லாடிகளாம்.

பெண்கள் சுகாதாரமானவர்கள்

ஆண்களை விட பெண்கள் சுகாதாரமானவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆண்கள் பணிபுரியும் இடத்தில் பத்து முதல் இருபது சதவிகித பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பெண்கள் பணிபுரியும் சூழல் சுகாதாரமாக இருந்ததாம். தவிர அவர்கள் ஆரோக்கியமான உணவையே உட்கொள்கின்றனர். அதனால்தான் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த பதிவு ஆந்தை -  ரிபோர்ட்டர் என்னும் வலை பதிவில் இருந்து பலரும் படித்து பயன் பெற பகிரப்டுகிறது. 

No comments: