தமிழகத்தில் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போ திறக்கப்படும்? உளவுத்துறை அறிக்கை அரசிடம்!!
இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்,
தமிழகத்தி்ல் மூடப்பட்டிருக்கும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற
அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறியியல்
கல்லூரிகளை திறப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படுகிறது.
அரசு சார்பிலோ, கல்லூரிகள் சார்பிலோ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று
வரை வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும், தற்போது மாணவர்களின் போராட்டம்
கொஞ்சம் குறைந்துள்ள நிலையில், மூடப்பட்டிருக்கும் கல்லூரிகள் தொடர்பான
அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்ற பேச்சு அரசு தரப்பில் அடிபடுகிறது.
அதேநேரத்தில் கல்லூரி நிர்வாக தரப்பில், “கலை அறிவியல் கல்லூரிகள் நாளை
திறக்கப்படுமா?” என்ற கேள்விக்கு யாரும் தெளிவான பதில் கூறுவதாக இல்லை.
அனேகமாக இம் மாதம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுவிட்டு
ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம் என்ற பேச்சு சில
கல்லூரி நிர்வாக மட்டத்தில் கூறப்படுகிறது.
அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், “தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள்
போராட்டம் குறித்து உளவுத்துறை போலீஸார் தகவல் சேகரி்த்து அரசுக்கு அளித்து
வருகின்றனர். போராட்டங்கள் ஓரளவு முடிவுக்கு வந்த பிறகுதான் அரசு இதில்
முடிவு எடுத்து அறிவிக்கும்“ என்று கூறியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பேராசிரியர் பி.காளிராஜ்,
“பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து நாளை தமிழக அரசுடன் கலந்து ஆலோசனை
செய்துவிட்டு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்யும்” என்று
கூறியுள்ளார்.
உளவுத்துறை போலீஸார் என்ன அறிக்கை கொடுத்திருக்கிறார்களோ, அதை வைத்தே
முடிவு எடுக்கப்படும். கல்லூரிகளை திறக்கலாம் என்ற விதத்திலேயே உளவுத்துறை
அறிக்கை இருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment