கூகுள் தேடுபொறியை உருவாக்கி இன்டர்நெட் உலகின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரிவின் தலைவராக தமிழரான
சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கூகுள் நிறுவன தலைவர் லேரி பேஜ் தனது இணையதளம் மூலம் இத்தகவலை வெளியிட்டார். தற்போது ஸ்மார்ட் போன், டேப்லட் பிசி போன்றவற்றில் பிரபலமான ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கும் ஆன்ட்ராய் ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக காரணமாக திகழ்ந்தவரும்,
அந்த பிரிவின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றியவருமான ஆண்டி ராபின் அந்த பொறுப்பிலிருந்து விலக உள்ளார். ஆண்டி ராபின் இடத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ''தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் புதியனவற்றை உருவாக்குவதில் அபார திறமை கொண்டவர். அதற்கு உதாரணம் ''கூகுள் குரோம்''. 2008ம் ஆண்டில் மக்கள் மேலும் ஒரு பிரௌசர் தேவைதானா என்று நினைத்தனர். ஆனால் இப்போது குரோம் பிரௌசரை பல லட்சக்கணக்கா னோர் பயன்படுத்துகின்றனர்.
அதன் வேகம், எளிமை, பாதுகாப்பு தன்மை போன்ற காரணங்களால் அது பலரை கவர்ந்துள்ளது. தனது அயராத உழைப்பின் மூலம் குரோம் பிரௌசர் உருவாக முக்கிய பங்காற்றிய சுந்தர், ஆன்ட்ராய்ட் பிரிவுக்கு தலைமை வகிப்பார். ராபினைப் போலவே தொடர்ந்து தளராத உழைப்பு இவர் வழங்குவார்'' என்று பேஜ் குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சை காரக்பூர் ஐஐடியில் 1993ம் ஆண்டு உலோகவியலில் பொறியியல் முடித்தார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பையும், வார்டன் ஸ்கூல் ஆப் பிசினசில் நிர்வாகவியலும் படித்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
No comments:
Post a Comment