Blogger Widgets

Total Page visits

Wednesday, March 20, 2013

மனவலிமை - விவேகானந்தர்

நம் அனைவரிடத்தில் தற்போது மன வலிமை மிக குறைந்து விட்டது.. நம் சக சந்தோசம் மற்றும் துக்கத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வது இல்லை. எதாவது ஒரு சின்ன கஷ்டம் ஏற்பட்டு விட்டால் நம் மீதே வெறுப்பு ஏற்படிகுறது. வாழ்கையின் விரக்தியின் ஓரத்திற்கே நம் சென்று விடுகிறோம். நான் பொதுவாக கான்பூரில் இருக்கும் போது தினமும் ஆட்டோ க்ராபில் வரும்  ஒவ்வொரு பூக்கள் பாடல் கேட்டு தான் என் பணி ஆரம்பிப்பேன். அதற்கான காரணம் கான்பூரில் தற்போது, மற்றும்( இனிமேல் படிக்க போகும்) நண்பர்கள் நன்றாக அறிவார்கள்.

என் தந்தை என்னை தினமும் எதாவது ஒரு விவேகானந்தர் பொன் மொழி படிக்க சொல்லுவார். நான் படித்து முடித்ததை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

* மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி துன்பப்படுவோருக்கு உதவுவது ஒன்று தான்.

* மனதை ஒருமுகப்படுத்துவது தான் கல்வியின் அடிப்படை லட்சியமாகும்.

* வெற்றி பெறுவதற்கு விடா முயற்சியும், தளராத மனவுறுதியும் தேவை. நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு வெற்றி நோக்குடை யவர்களாக வாழுங்கள். வெற்றிக்கான ரகசியம் இது தான்.

* தான் என்னும் ஆணவத்தையும், பேராசையையும் அடக்கும் போது பெரும் வெற்றிகளைப் பெறமுடியும். அரும்பெரும் செயல்களைத் தியாகத்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

* சுயநலம் ஒழுக்கக்கேட்டினை விளைவிக்கும். சுயநலமின்மையோ நல்லொழுக்கத்தைத் தரும்.

* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம் ஆகும். ஆன்மிக ஈடுபாட்டினால் மட்டுமே மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மை வெளிப்படும்.
 
மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.

* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.

* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை வழியில் நடந்தால் நம்முடைய இடர்ப்பாடுகளின் அளவு குறைந்து விடும் அல்லது மட்டுப்பட்டு விடும்.

* ஒரு திட நம்பிக்கையைக் கடைபிடித்து வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்களை சரித்திரம் காட்டுகிறது. அதே நம்பிக்கையைச் சற்று விரிவுபடுத்தினால் அது கடவுள் நம்பிக்கையாகி விடும்.

* கடவுள் என்பவர் நம் எல்லோரையும் இணைக்கும் சக்தி. கடவுள் மீது நம்பிக்கை கொள்வது சமூகத்தின் நன்மைக்காகவே. கடவுளை நம்புபவன் உலகத்தை நேசிக்கிறான்.

* கடவுள் கடல் போன்றவர். நாம் கடவுளைத் துணைக்கு அழைத்தால், அந்தக் கடலளவு சக்தியில் ஒரு துளியை மட்டுமே பயன்படுத்துகிறோம். அந்த ஒரு துளியை முழுமையாகப் பயன்படுத்தக்கூட, கடவுள் பற்றிய பூரணநம்பிக்கை இருந்தால் தான் முடியும். 
 

No comments: