Blogger Widgets

Total Page visits

Tuesday, March 26, 2013

பயர்பாக்ஸ் ஸுமிங் (Zooming) நிறுத்த

பயர்பாக்ஸ் பிரவுசரில் இணைய தளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதனைப் பெரிதாக்கிப் பார்க்கலாம். இதனால் வரிகள் பெரிதாகவும், காட்டப்படும் தள அளவு சிறியதாகவும் மாறும் அல்லது அதிக அளவில் தளப் பக்கத்தைக் காண, சிறியதாக்கலாம்.இதற்குக் கண்ட்ரோல் கீ அழுத்தி, அதனுடன் + கீ அழுத்தினால், பக்கம் பெரிதாவதையும், – கீ அழுத்தினால் சிறியதாக மாறுவதையும் காணலாம். மீண்டும் தொடக்க நிலைக்குக் கொண்டு வர கண்ட்ரோல் கீயுடன் 0 (பூஜ்யம்) கீயினை அழுத்த வேண்டும். 

இந்த கீ தொகுப்புகள் எல்லாம் நமக்கு உதவுகின்றன. ஆனால், இவற்றை நாம் சில வேளைகளில் நாம் அறியாமலேயே அழுத்தி விடுகிறோம். அப்போது ஏன் அழுத்தப்பட்டது என எரிச்சல் அடைவோம். இந்த கீ தொகுப்பு செயல்படு வதனையே நிறுத்திவிட்டால் என்ன என்று தோன்றும். ஆனால் அதற்கான நேர் வழியை பயர்பாக்ஸ் தரவில்லை. சுற்று வழியில் இதனை மேற்கொள்ளலாம்.

பயர்பாக்ஸில் உள்ள பிரிபரன்ஸ் பைலில் இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். இந்த பைல் உங்களின் பயர்பாக்ஸ் பிரவுசரின் இயக்கத்திற்கான திறவு கோல் என்பதால், இதில் மாற்றத்தினை ஏற்படுத்தும் முன், சேவ் செய்து கொள்வது நல்லது.

இனி அட்ரஸ் பார் சென்று, அங்கு about:config என டைப் செய்து என்டர் செய்திடவும். எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். அங்கே நான் கவனமாய் இருப்பேன் என்பதற்குI’ll be careful, I promise!  என்பதில் கிளிக் செய்து தொடரவும்.

அடுத்து செட்டிங்ஸ் பட்டியல் ஒன்று காட்டப்படும். இந்த பக்கத்தின் மேல் பகுதியில் Search
  என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் zoom  என டைப் செய்திடவும். இப்போது பட்டியல் சிறியதாகச் சில ஆப்ஷன்களை மட்டும் காட்டும். இதில் நமக்கு zoom.maxPercent  மற்றும் zoom.minPercent  என்ற இரண்டு பிரிவுகளில் வேலை உள்ளது. 

இதில் நாம் ஸூம் செய்திடும் அளவு தரப்படும். 300 மற்றும் 30 என இரு அளவுகள் காட்டப்படும். அதாவது நாம் 300 சதவிகிதத்திற்கு மேல் ஸூம் செய்திட முடியாது. 30% க்குக் குறைவாகச் சிறியதாக ஆக்கவும் முடியாது. இந்த இரண்டையும் 100 என மாற்றிவிட்டால், சிறியதாகவும், பெரியதாகவும் மாற்ற முடியாது. இணையப் பக்கங்கள் எப்படி உள்ளனவோ அப்படியே காட்டப்படும். இனி செட்டிங்ஸில் டபுள் கிளிக் செய்து வெளியேறவும். 

பயர்பாக்ஸ் பிரவுசரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும். அப்போது தான் நாம் ஏற்படுத்திய மாற்றம் அமலுக்கு வரும்.
 

No comments: