Blogger Widgets

Total Page visits

Thursday, March 14, 2013

கை விசிறி எடுங்க., காற்று இனி வராது ! மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம்

மத்திய மின்தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், காற்றாலை, நீர்மின் உற்பத்தி குறைந்ததாலும், தமிழகத்தின் மின் பற்றாக்குறை, 2,200 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. இதனால், வரும் நாட்களில் மின் தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் முன்னோட்டமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்க துவங்கி விட்டது.

மின் உற்பத்தியை விட, தேவை அதிகரித்ததால், 2008 மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. பற்றாக்குறை சமாளிக்க, 2008 செப்.,1 முதல், கடந்த ஆறு ஆண்டுகளில் நாள் தோறும், ஐந்து மணிநேரம் முதல் அதிகபட்சம், 16 மணிநேரம் வரை மின்தடை நடைமுறைக்கு வந்தது. கோடைகாலம் துவங்கிய நிலையில், ஏ.சி., ஃபேன் உபயோகம் அதிகரிப்பதால், 11 ஆயிரத்து,132 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை காலை நிலவரப்படி 11 ஆயிரத்து, 462 மெகாவாட் ஆக உயர்ந்தது. காலை, 8 மணி நிலவரப்படி தமிழகத்தில் 2,223.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீர்மின் நிலையங்களில், 422 மெகாவாட், 2,970 மெகாவாட் திறன் கொண்ட தெர்மல்களில், 2,650 மெகாவாட், மேட்டூர் புது தெர்மலில், 350 மெகாவாட் என, மொத்தம், 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

மேலும், 7,132 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளில், 32 மெகாவாட் மட்டுமே கிடைத்தது. வல்லூர், நெய்வேலி, தால்சர் மற்றும் கல்பாக்கம் அணுமின்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் மின்தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 3,044 மெகாவாட் மின்சாரத்துக்கு பதில், 2,271 மெகாவாட் மட்டுமே கிடைத்தது. 774 மெகாவாட் வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் மின்தேவை காலை, 11 ஆயிரத்து,461 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தமிழக மின் உற்பத்தி நிலையங்கள் மூலம், உற்பத்தி, தனியார் மின் நிலையங்களில் கொள்முதல் செய்தது என, 7,022 மெகாவாட், மத்திய மின்தொகுப்பில் இருந்து கிடைத்த, 2,271 மெகாவாட் என மொத்தம், 9,293 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்த நிலையில், 2,198 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.

பற்றாக்குறை சமாளிக்க தமிழகத்தின் பல இடங்களில், பகலில், ஐந்து மணிநேரம், இரவில், மூன்று மணிநேரம் என, எட்டு மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டது. வரும் ஏப்ரல், மே மாதத்தில், தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, 12,000 மெகாவாட்டையும் தாண்டும் போது, மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்பற்றாக்குறை சமாளிக்கப்படுமா? தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, 11 ஆயிரத்து, 461 மெகாவாட் ஆகவும், வினியோகம், 9,293 மெகாவாட் ஆகவும் இருந்ததால், 2,198 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மின் வினியோகத்தில், மேட்டூர் புதுதெர்மலில் உற்பத்தி செய்த, 350 மெகாவாட் மின்சாரமும் அடங்கும். வரும் நாளில் மத்திய அரசு மின்தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய, 774 மெகாவாட், வடசென்னை புதுதெர்மலில் இருந்து, 600 மெகாவாட், மேட்டூர் புதுதெர்மலில் கூடுதலாக, 250 மெகாவாட் என, 1,594 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில், மின்பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். இல்லையேல் மின்தடை நேரம் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
 
Thanks Dinamalar

No comments: