Blogger Widgets

Total Page visits

Saturday, March 16, 2013

நட்பு பற்றிய பொன்மொழிகள்

*நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

*பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

*எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

*உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

*வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

*உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

*உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

*பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

*நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

*வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

*ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

*சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

*உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

*ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

*நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

*புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

*புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

*ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு.

*நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.

*உங்களை சரியான வழியில் எடுத்துச் செல்ல வந்திருக்கும் இறைத் தூதுவன்தான் நண்பன்.

*பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

*சிறந்த நண்பன்தான் நமது நெருங்கிய உறவினன்.

*புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

*காதலுக்கு கண் இல்லை. அந்த கண்களை திறந்து வைப்பது நட்புதான்.

*நண்பர்களைக் கொண்டு இரு. நண்பனாக இரு.

*நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரை அறிவாய், துக்கத்தில் மட்டுமே நண்பர்களை அறிவாய்.

*நீ கவலையில் இருக்கும்போது, முத்தம், கடிதம், அணைத்தல் என எதுவும் தராத ஒரு நிம்மதியை உன் நண்பனது அமைதி தரும்.

*நண்பர்களுக்குள் மன்னிப்புக்கும், நன்றிக்கும் இடமில்லை.

*உன் மனதிற்குள் இருக்கும் பாடலை அறிந்தவனே நண்பன். எப்போது நீ ஒரு சில வார்த்தைகளை மறக்கிறாயோ அப்போது உன் நண்பன் அந்த வார்த்தையை எடுத்துக் கொடுப்பான்.

*எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே, உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை, என் பின்னாடி நடந்து வராதே, உனக்கு முன்னோடியாக இருக்க விரும்பவில்லை, என்னுடனே நடந்து வா என் நண்பனாக.

*புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்கு தேனாகிறது.

*உண்மையான நண்பனை அறிவது மிகக் கடினம். உனக்கு சாமர்த்தியம் அதிகம்... நீ என்னை அறிந்துள்ளாய்.

*நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.

No comments: