நேற்று நன் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது, எனக்கு முன்னர் இருந்த சில பயணிகள் "மென்பொருள் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம் ஏன் ?" என்று பேசி கொண்டு இருந்தனர்.
புருவத்தை உயர்த்த வைக்கும் சம்பளத்தை இவர்களுக்கு மட்டும் அள்ளி வழங்குவது ஏன்? அரசு ஊழியர் ஒருவர் 30- ஆண்டுகள் உழைத்து சம்பாதித்தாலும் பெற முடியாத தொகையை வெறும் 5 ஆண்டுகளிலேயே (இன்னும் குறைவான ஆண்டுகளில் கூட) இவர்கள் சம்பாதித்து விடுகின்றனரே எப்படி?
கலை , இலக்கியம் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், ஏன் இந்த வேறுபாடு ..
அவர்களின் பேச்சை கேட்ட நான் அன்று முழுவதும் யோசித்த போது என் மனதில் தோன்றிய கருத்துக்கள் இவை.
ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு திறமை தேவைப்ப்படுகிறது, உதரணமாக ஆசிரியர் பணி என்றால் கற்றல், கற்பித்தல் திறன் அவசியம் ..வங்கிப்ப்பணி என்றால் கணிதத்திறம் அவசியம் .மருத்துவப்பணி எனில், பொறுமையும், நோயாளியின் உடல் நிலையை / மனநிலையை அறிந்து சிகிச்சையளிக்கும் மற்றும் செயல்படும் தன்மை அமையப்பெற்றிருக்க வேண்டும். சட்டப்பணி எனில் நல்ல பேச்சாற்றலும். வழக்கற்றாலும் இருக்கப்பெற வேண்டும். இந்திய ஆட்சிப்பணி எனில் தலைமைப்பண்பும், சமயோகித அறிவும், விரைந்து செயல்படும் தன்மையும், உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை தெரிந்து வைத்திருப்பதும், நடுநிலையுடன் செயல்படுவதும் வேண்டும். என்பனவாக தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. ஒரு பணிக்கு எதிர்பார்க்கப்படும் தகுதி மற்றொரு பணிக்கு எதிர்பார்க்கப்படுவதில்லை. உதாரணமாக, வங்கி பணியாளரிடத்தில் கணக்கு அறிவு பரிசோதிக்கப்படுகிறதே தவிர. அவரிடத்தில் கற்றல், கற்பித்தல் அறிவு எதிர்பார்க்கப்படுவில்லை. சட்ட பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதிகள், மருத்துவ பணியாளரிடத்தில் எதிர்பார்க்கப்படுவதிலலை. காரணம், இருவரின் பணிகளும் வெவ்வேறானவை. இங்கே தலைமைப்பண்போ, நடுநிலைத்தன்மையோ, கணக்கு அறிவோ பரிசோதிக்கப்படுவதில்லை. அவை தேவையில்லாதவையும் கூட, ஆனால் ஒரு மென்பொறியாளர் பணிக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து திறன்களும் அதன் தன்மைகளும் தகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

கணினி பணி என்பது, முழுக்க முழுக்க மூளையை கசக்கும் பணியே அன்றி, உடல் உழைப்பு அன்று. இவன் ஒரு பிரம்மாவைப் போல நாளும் சிருஷ்டித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு மென்பொறியாளனின் பணி அவன், எப்பொழுதும் கற்றுக்கொள்வதற்கும், உடன் பணியாற்றுபவர்களுக்கு கற்பிப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்.
குழுவுடன் பணியாற்றும் தன்மை இங்கே மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேலும், அக்குழுவை வழி நடத்திச்செல்ல தேவையான தலைமைப்பண்பை நாளடைவில் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Customer Satisfaction முதன்மையான ஒன்றாக இருப்பதினால் மருத்துவருக்கு தேவையான பொறுமையும், சரியான அணுகுமுறையும் இவனிடத்தேயும் இருந்தால் தான் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை பெற்று செழித்தோங்க முடியும். சிறந்தபேச்சாற்றலும் சொல்வன்மையும் இருந்தால் தான் வாடிக்கையாளரிடம் திறமையாக பேச முடியும். புதுப்புது திட்டப்பணிகளை (Project) பெற முடியும். முக்கியத்தருணங்களில் விரைந்து செயல்படும்மற்றும் முடிவெடுக்கும் திறன் அமையப்பெற்றிருந்தால் தான் இக்கட்டானசூழ்நிலையைலிருந்து நிறுவனத்தை காப்பாற்றமுடியும். நாளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கும் புதுப்புது தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டிருந்தால்மட்டுமே, இங்கே ஊதிய உயர்வு, மற்றும்பணிநிரந்தரம். இல்லையேனில் சில வருடங்களிலேயே நீங்கள் தூக்கியெறியப்பட்டுவிடுவீர்கள். ஆக, அவன் எப்பொழுதும் கற்றுக்கொண்டே இருக்கிறான். கற்றதை கற்பித்துக்கொண்டும் இருக்கிறான். ஒரேமாதிரியான பணி என்பது இவனுக்கு ஒரு நாளும் கிடையாது. ஒரு குயவனைப்போல, புதுப்புது பாண்டங்களை வித்தியாசமாக, முற்றிலும் மாறுபட்டதாக, முற்றிலும் வேறுபட்டதாக நாளும் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஆக பத்தாம்பசலித்தனமாக மென்பொருள் அறிஞர்களுக்கு பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது என்று கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
50- ஆண்டுகளுக்கு முன்கற்ற இலக்கியத்தைத் தான் இன்னும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர், இவர்கள் புதிதாக கற்றுக்கொள்வதும் இல்லை. கற்றுக்கொள்வதற்கான அவசியமும் இல்லை. ஆனால், மென்பொருள்துறை அப்படியல்ல. 5-மாதங்களுக்கு முன்கற்றுக்கொண்ட தொழில்நுட்பம், இன்று காலாவாதியாகி விடுகின்றனது. அல்லது, புதுதொழில் நுட்பம் வெளி வந்துவிடுகின்றது. இன்றைய கணினி உலகில், வங்கிப்பணியாளாருக்குக்கூட அவ்வளவாககணக்கு அறிவு தேவைப்படுவதில்லை. ஓரளவிற்கு பொது அறிவு (Common Sense) இருந்தால் கூட போதுமானது. கணினியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது. இப்படி, மருத்துவம், அறிவியல் என்று எல்லாத்துறைகளிலும் கணினி வந்த பிறகு, அவற்றின் மூளையாக இருந்து செயல்படும் மென் பொறியாளார்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் + மருத்துவர் + வங்கி ஊழியர் + வழக்கறிஞர் இவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தையும் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், அவனுக்கு சொற்ப சம்பளமே அளிக்கப்படுகிறது. எங்கும் நீக்க மற நிறைந்து விட்ட இறைவனைப்போல, கணினியும் இருப்பதினால் அதனை ஆட்டுவிக்கும் மென்பொறியாளனுக்கு அதிகசம்பளம் கொடுப்பது தானே நியாயம்?
இலக்கியம், வரலாறு படித்தவர்களுக்கு எளிதாக வேலை கிடைப்பதில்லை என்பதில் என்போன்ற மென்பொருளாளர்களுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. டார்வினின் பரிணாமக்கொள்கையான ”திறமையான உயிர்களே தப்பிப்பிழைக்கும் என்பதையும், காலத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் உயிர்கள்மட்டுமே இவ்வுலகில் நீடித்து நிற்கும்” என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. கணிப்பொறி அல்லாத பாடங்களை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு .
No comments:
Post a Comment