கற்பனை செய்து கொள்ளுங்கள் !
நம் முன் ஒரு பெரிய மைதானம் இருக்கிறது. ஒரு இருபது பேர் மனம் போன வாக்கில் பந்தை உதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் உதைக்கலாம் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடலாம் என்று இருந்தால் நாம் அதை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்போம் .
மாறாக , மைதானத்தின் இரு பக்கமும் 10 அடிக்கு ஒரு போஸ்ட், அதற்குள் தான் பந்தை செலுத்த வேண்டும் என்ற வரையறை ஏற்படுத்தி, அந்த வரையறையையும் 45 நிமிடங்கள் தான் என்ற நிர்பந்தத்திற்கு உட்படுத்தினால்.. விறுவிறுப்பான கால்பந்தாட்ட போட்டி எவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கும் .
ஆக , குறிக்கோள் என்ற வரையறையும் அதை இதற்குள் அடைய வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லாத வாழ்க்கை முதலில் சொன்ன மைதானத்தைப் போன்றது.. விளையாடுபவர்க்கும் அதை பார்ப்பவர்க்கும் எந்த சுவாரஸ்யமும் தராது..
குறிக்கோளை அடையும் முயற்சியில் தோல்வி கண்டால் பரவாயில்லை.. மீண்டும் முயற்சிக்கலாம்.. ஆனால் முயற்சிக்க எந்த குறிக்கோளும் இல்லை என்ற நிலைமையில் இருந்தால்..
தாத்தா சைக்கிள் - இல் சென்றார் . தந்தை மோட்டார் சைக்கிள்- இல் செல்கிறார் என்றால் , நாம் குறைந்த பட்சம் காரில் செல்கிற மாதிரியாவது குறிக்கோளை வைத்துக் கொள்ளலாமே ..
இப்படி ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியில் தான் சமூகத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது..
எப்படி?
நாம் குறிக்கோள் வைத்து வளர வளர நம் தேவைகள் வளர்கிறது.. தேவைகளை பூர்த்தி செய்ய நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் பலரின் பங்களிப்பு இருக்கிறது.. அந்த பங்களிப்பால் அவர்களுக்கு பலன் கிடைக்கிறது.. அந்த "அவர்கள்" தான் "சமூகம்"..
இவ்வாறாக குறிக்கோளை முதலில் தேர்ந்தெடுப்போம் - இது வரையறை.
பின் இதற்கு ஒரு காலக் கெடுவும் குறித்தால் - இது நிர்பந்தம்.
பின் தானாக என்ன செய்ய வேண்டும் என்ற வழி பிறக்கும்.
இதுவே வெற்றிக்கு முதல் படி ..

No comments:
Post a Comment