Blogger Widgets

Total Page visits

Sunday, August 25, 2013

வேர்ட் 2007ல் வாட்டர்மார்க்

வேர்ட்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் பலர், அதில் ஒரு வாட்டர்மார்க் அடையாளத்தை இணைப்பார்கள். டாகுமெண்ட்டிற்கு அடையாளம் தரும் வகையில் இது அமையும். நிறுவனத்தின் பெயர், டாகுமெண்ட்டினை தயாரிப்பவர் பெயர், டாகுமெண்ட்டின் தன்மை (ரகசியம், முதல் நகல், அனுமதிக்கப்பட்டது, போன்றவை) ஆகியவற்றில் ஒன்றை அமைப்பார்கள். இது டாகுமெண்ட்டின் பக்கம் முழுவதும் அமையும்படியாகவோ அல்லது டாகுமெண்டைத் தயாரிப்பவர் விருப்பப்படியோ, அதன் டெக்ஸ்ட் தன்மையைக் கெடுக்காமல் அமைக்கப்படும். இதனை வேர்ட் 2007 தொகுப்பில் எப்படி அமைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

வேர்ட் 2007 வாட்டர்மார்க் அமைக்க பல வழிகளைக் கொண்டுள்ளது. வாட்டர்மார்க் அமைக்க மாறா நிலையில், சில வழிகளைக் கொண்டிருந்தாலும், நம் விருப்பப்படியும் இதனை அமைக்கலாம். நாம் விரும்பும் டெக்ஸ்ட், எழுத்துரு, வண்ணம் என எதனை வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம்.

1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.

2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம்.

“No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம்.

படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். 

 இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.

No comments: