இந்தியாவில் நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் முதல், 20 ஆயிரம் பெண்கள்,
பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி ன்றனர். நாட்டின், 21 உயர் நீதிமன்றங்களில்,
23,792 பாலியல் பலாத்கார வழக்குகள், நிலுவையில் உள்ளன. இதனால்,
பெண்களுக்கான பாதுகாப்பும், சுதந்திரமும் கேள்விக் குறியாகவே உள்ளது.
பாதுகாப்பு இல்லாத சூழலில் தான், பெண்கள் வேலைக்குச்
செல்கின்றனர்.
சமீபத்தில், தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்
டாக்டருக்கு, பேருந்து நடத்துனரின் ஒத்துழைப்புடன், பாலியல் தொந்தரவு
நடந்தது, வேதனையான விஷயம். உடனே அந்த பெண், துணிச்சலுடன் காவல் துறைக்கு
தகவல் தந்து, ஆபத்தில் இருந்து தப்பித்தார். பெரும்பாலும், பெண்களுக்கான
சுதந்திரம் தானாகக் கிடைப்பதில்லை. இப்படி போராடித் தான், பெற
வேண்டியிருக்கிறது.பயணங்களில், பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால், அதே
சமயம் சுதாரிப்பாகவும், தனிப்பட்ட விஷயங்களை சத்தமாகவும் பேசக் கூடாது.
மொபைல் நம்பர், வீட்டு முகவரி போன்றவற்றை போனிலோ, உடன் இருப்பவரிடமோ
பகிரும் போது கவனமாக இருங்கள்.ஏனெனில், எல்லா பிரச்னைகளுக்கும் ஆரம்பப்
புள்ளியாக, இது போன்ற தனிப்பட்ட விஷயங்களை பகிரங்கமாக வெளியிடுவதே, காரணமாக
அமைகின்றன.
வேலை முடிந்து இரவு நேரத்தில் செல்ல நேரிட்டால், அலுவலக
தோழிகள் சிலருடன் தனி வாகனத்தில் செல்லலாம். இரவு நேரங்களில், தனித்த
பேருந்து பயணத்தை தவிர்த்து விடுங்கள்.நகை பறிப்பு பரவலாக இருப்பதால்,
ஆடம்பர நகைகளை தினசரி அணியாதீர்கள். பணிபுரியும் இடத்தின் அருகில் உள்ள
காவல் நிலைய தொலைபேசி எண்ணை, கூடவே வைத்திருங்கள். ரயில் பயண ஆபத்துகளில்,
99625 00500 என்ற, 24 மணி நேர, "ஹெல்ப் லைன்' எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
சூழ்நிலையை பொறுத்து, தைரியத்துடன் செயல்பட்டால், பெரும் ஆபத்தை
தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment