Blogger Widgets

Total Page visits

Friday, August 23, 2013

லுங்கி, நைட்டி அணிய தடை !!!

பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களே… நைட்டி, லுங்கி போட்டுட்டு போகாதீங்க!

குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிய தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர்கள் வாகனங்களிலும், சில பெற்றோர்கள் தாங்களாகவே அழைத்து சென்று விடுகின்றனர். சில நேரங்களில் அவசரத்தில் பெற்றோர்கள் லுங்கி, நைட்டிகள் அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

"ஒழுக்கத்தை வளர்க்கும் பள்ளிக் கூடத்தில் அதாவது, கோவிலாக கருதப்படும் பள்ளிக் கூடத்தில் பெற்றோர் லுங்கி, அரை பவுசர் ஆகியவை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு செல்லக் கூடாது. அவ்வாறு செல்வதாக புகார்கள் வந்துள்ளது.

எனவே, பெற்றோர்கள் மனம் புண்படாத வகையில் மாணவர்களின் தாயாக இருந்தால் நைட்டி அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லக் கூடாது. தந்தையாக இருந்தால் லுங்கி அணிந்து செல்லக் கூடாது. இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்
Click Here for Source Link
 

No comments: