உங்களுக்கு மென்பொருள், தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்பு போன்ற
அம்சங்களில் ஆர்வம் இருக்கலாம். ஆனால், இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு,
மேலாண்மை திறன் இல்லையெனில், கார்பரேட் உலகில் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.
இந்தியாவில், பலருக்கும்
இருக்கும் ஒரு மோகம் எம்.பி.ஏ., மோகம். இந்தியா போன்ற மூன்றாம் உலக
நாடுகளில், கார்பரேட் நிறுவனங்களில் வேலை பெறுவதற்காக, தொழில்நுட்பம்
மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேரும் ஆர்வம் எப்போதுமே அதிகமிருக்கும்.
தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தாங்கள் பணிக்கு எடுக்கும் ஒருவர்,
வெறும் மேலாண்மைத் திறனை மட்டும் பெற்றவராகவோ அல்லது வெறும் தொழில்நுட்பத்
திறனை மட்டும் பெற்றவராகவோ இருப்பதை விரும்பவில்லை. மாறாக, அந்த இரண்டு
திறன்களையும் ஒருங்கே பெற்றவரையே பணியமர்த்த விரும்புகின்றனர்.
அவர்களுக்கான சம்பளத்தையும் கேட்கும் அளவிற்கு தருவதற்கு தயாராக உள்ளனர்.
ஒவ்வொரு வணிக செயல்பாடும், வலுவான ஐ.டி., அடிப்படையை தேவையாகக்
கொண்டுள்ளன. இதன்மூலம்தான், உச்சகட்ட போட்டியில் நாம் தோற்காமல் இருக்க
முடியும். பெரியளவிலான வணிக செயல்பாட்டிற்கு, பெரியளவிலான ஐ.டி. ஆதரவு தளம்
தேவை. எனவே, இந்த உலக சூழலை உணர்ந்து, மேலாண்மை கல்வி நிறுவனங்கள்,
அதற்கேற்ற வகையில், ஒரு படிப்பை அறிமுகம் செய்துள்ளன. அந்தப் படிப்புதான்,
MBA - IT (MBA in Information Technology).
இப்படிப்பு, வணிக மேலாண்மைத் திறன்களுடன், அடிப்படை ஐ.டி. திறன்சார்
அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலாண்மை மற்றும் ஐ.டி. திறன்களை
ஒருங்கேப் பெற்று, ஒரு நிறுவனத்தின் வியூகரீதியிலான இலக்குகளின் நேர்த்தியை
அதிகரிக்கும் வகையிலான எதிர்கால வணிக தலைவர்களை உருவாக்கும் வகையில்
இப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திட்டமிடல், வடிவமைத்தல், தேர்வு செய்தல், ஐ.டி. வள ஆதாரங்களை
பயன்படுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பல விஷயங்களை இப்படிப்பு
கற்றுத் தருகிறது. மேலும், மேலாண்மை கோட்பாடுகள், டேட்டாபேஸ் மேலாண்மை
அமைப்பு, வணிக நுண்ணறிவு, நெட்வொர்க் இயக்கம், மேலாண்மை மற்றும்
பாதுகாப்பு, சிஸ்டம் பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு, மென்பொருள்
இன்ஜினியரிங் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வியூகரீதியான மேலாண்மை
உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படிப்பில் இடம்பெற்றுள்ளன.
இப்படிப்பில், வணிக அறிவைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், ஐ.டி.
கட்டமைப்பை பற்றியும், தேவைப்படும் அளவிற்கு விஷயங்களை இப்படிப்பை
மேற்கொள்வோர் கற்றுக்கொள்ளலாம். இப்படிப்பில், மேலாண்மை மற்றும் நிதி
கருத்தாக்கங்கள் பற்றிய தியரி அறிவை நீங்கள் பெறுகிறீர்கள் மற்றும் ஐ.டி.
துறையில் புதிதுபுதிதாக ஏற்பட்டுவரும் மாற்றங்களை புரிந்துகொள்ளும்
வகையிலான சூழல் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படும்.
ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும், அதேசமயம் மேலாண்மைத் திறன்
குறைவாக இருக்கும், ஏற்கனவே மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து, அதேசமயம்
தொழில்நுட்பத் திறன்கள் சற்று குறைவாக இருக்கும் நபர்கள், இந்தப் படிப்பை
தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளலாம்.
MBA - IT படிப்பின் விபரங்கள்
இரண்டு வருட முதுநிலை படிப்பான இது, மொத்தம் 4 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை தகுதிகள்
* 10+2 முடித்திருக்க வேண்டும்
* இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்களை தேர்வுசெய்யும் முறை
MAT
CAT
XAT
PGCET
ATMA
ICET
SNAP
CAT
XAT
PGCET
ATMA
ICET
SNAP
மேற்கூறிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் பெற்ற மதிப்பெண்கள், குழு
கலந்தாய்வு(GD) மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒருவரின்
செயல்பாட்டுடன் மதிப்பிடப்படும்.
MBA - IT படிப்பானது, MCA மற்றும் MSc IT ஆகிய படிப்புகளிலிருந்து
வேறுபட்டது. எம்.பி.ஏ படிப்பை பொறுத்தவரை, ஐ.டி. துறையிலுள்ள மேலாண்மை
அம்சங்களை அறிந்துகொள்வதோடு, புதிய ஐ.டி. டிரென்டுகளை எப்படி சமாளிப்பது
என்பது பற்றியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், MCA, MSc IT போன்ற படிப்புகள்
வெறும் தொழில்நுட்பம் சம்பந்தமாக மட்டுமே தெளிவாக கற்றுத் தருகின்றன. இந்த
இரண்டு படிப்புகளையும் மேற்கொள்வோர், C++, Java மற்றும் இதர ப்ரோகிராமிங்
மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
ஐ.டி. தொழில்துறை பெரியளவில் வளர்ந்து வருகிறது. அந்த ஐ.டி.
நிறுவனங்கள், தங்களுக்கான மேலாளர்களை எதிர்பார்க்கின்றன. அந்த மேலாளர்கள்,
நிறுவனத்தின் இலக்குகளை அடைய, கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள், தரத்தில்
சற்றும் குறைவில்லாமல், அதிக உற்பத்தியை தந்து, நிறுவனத்தின் இலக்குகளை
அடைய உதவக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
தொழில்நுட்ப அறிவுடன், மேலாண்மை அறிவையும் கொண்டவர்களுக்கான
வேலைவாய்ப்பு சந்தை மதிப்பு, கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.
MBA - IT படித்தவர்களுக்காக காத்திருக்கும் சில வகை பணி வாய்ப்புகள் இங்கே
கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவருக்கு சிறந்த ஐ.டி. அறிவு இருந்து, ப்ரோகிராமிங் தொடர்பான திறமைகள்
இருந்தால், MBA - IT அவருக்கு ஏற்ற படிப்பு. தொழில்நுட்பம் மற்றும்
மேலாண்மை ஆகிய இரண்டு திறமைகளும் பெற்றுள்ள நபர்களுக்கான பணி மதிப்பு
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. டாடா கன்சல்டிங் சர்வீசஸ், விப்ரோ,
இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், MBA - IT பட்டதாரிகளை பணிக்கு
எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
MBA - IT படிப்பு, தொழில்நுட்பத் துறை என்ற எல்லையை தாண்டி உங்களை
சிந்திக்க வைத்து, ஒரு நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு பேருதவி புரிய
உங்களை தயார்படுத்துகிறது.
இன்னும் என்ன யோசனை? MBA - IT படிப்பில் சேர்வதற்கான வேலையைத்
தொடங்குங்கள். இதன்மூலம் நீங்கள் இரண்டு அவதாரம் எடுக்கலாம். டெவலப்பர்கள்
மற்றும் ப்ரோகிராமர்கள் குழுவுடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம் மற்றும்
மேலாண்மை குழுவினருடன் இணைந்து ஒரு மொழியைப் பேசலாம். எனவே, ஒரு சவாலான
மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை நகர்வதை
உறுதி செய்யுங்கள்.
இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
Faculty of management studies (FMS), Delhi
Symbiosis institute of computer studies and research, Pune
Symbiosis centre for information technology, Pune
ISBR Business school, Bangalore
ISBR Business school, Chennai
ABV - Indian institute of information technology and management, Gwalior
Indian institute of information technology and management, Allahabad.
Symbiosis institute of computer studies and research, Pune
Symbiosis centre for information technology, Pune
ISBR Business school, Bangalore
ISBR Business school, Chennai
ABV - Indian institute of information technology and management, Gwalior
Indian institute of information technology and management, Allahabad.
No comments:
Post a Comment