Blogger Widgets

Total Page visits

Friday, January 18, 2013

அறிஞர்களின் பொன்மொழிகள்


Ø  நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்

Ø  செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

Ø  உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்- சாக்ரடிஸ்

Ø  ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால்,அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்-இங்கர்சால்

Ø  தாங்கள் செய்யும் தவறுகளுக்கு,அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்-கென்னடி

Ø  எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு -கிளப்டைன்

Ø  நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது-கதே

Ø  உன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர் என்றால்,நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம் -வேதாத்திரி

Ø  முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது -எமர்சன்

Ø  உண்பது எல்லோருக்கும் இன்றியமையாதது,ஆனால் புத்திசாலித்தனமாக உண்பது ஒரு கலை -லாரச் போகல்

Ø  வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடிவதில்லை, அதுபோல, வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவதில்லை -அரிஸ்டாட்டில்

Ø  உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்

Ø  எவன் ஒருவன் இயற்கையை நன்கு புரிந்து கொள்கிறானோ அவன்ன ஒருபோதும் நோய்யுள்ளவனாக இருக்க மாட்டான் - ரஷ்யப் பழமொழி

Ø  கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்

Ø  கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு;இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும் -ஹோரேஸ்

Ø  பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்

Ø  யுத்தம், பஞ்சம், தொற்று நோயால் இறந்தவர்களை விட மருந்தால் மாண்டவர்களே அதிகம் -டாக்டர் மேசன்குட்

Ø  ஒரு கீரைத் தோட்டமே எனது மருந்துப் பொடியாகும்-டால்ஸ்டாய்

Credits to from தொழிற்களம்

No comments: