Blogger Widgets

Total Page visits

Saturday, August 31, 2013

"அண்ணா பல்கலைக்கழகம் பெருமை வாய்ந்தது"

"பெருமை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன்" என விருது பெறும் நிகழ்ச்சியில் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.

சென்னையில் உள்ள "அம்பாசிடர் பல்லவா" ஓட்டல் சென்னைக்கு சிறப்பு சேர்த்தவர்களுக்கு "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" என்ற விருதினை வழங்கியது. கல்வி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களை இவ் விருதுக்காக தேர்ந்தெடுத்து விருதினை வழங்கினர்.

"டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" விருதினை, வி. சாந்தா, தலைவர், கேன்சர் இன்ஸ்டிடீயூட்,  எஸ்.எஸ். பத்ரிநாத், தலைவர் சங்கரா நேத்ராலயா, கிரிஷ் ஸ்ரீகாந்த், முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், எம். நரேந்திரா, நிர்வாக இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இ. பாலகுருசாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா, நிர்வாக இயக்குநர், சுந்தரம் பாஸ்டனர்ஸ் ஆகியோர் பெற்றனர்.

விழாவில் விருதினைப் பெற்றது குறித்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகையில், "இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் தொடங்கப்பட்டது. அந்தக் கல்லூரி கிண்டி பொறியியல் கல்லூரி, அப்படிப்பட்ட பெருமைவாய்ந்த கல்லூரிகளை உள்ளடக்கிய பெருமை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

நகரம் வளர்ச்சி அடைந்தாலும் நடைபாதையில் மக்கள் வாழ்ந்து வருவது கவலை தரக்கூடியதாக இருக்கிறது. இவர்களை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். நகரத்தின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

மேலும், "கூவம் நாற்றமெடுத்தாலும், கொசு கடித்தாலும் சென்னை நகரத்தில் வாழவே பிடித்திருக்கிறது" என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியும், "சென்னையில் தான் பிறந்தேன், வளர்ந்தேன், படித்தேன், சென்னையில் தான் நான் சாகவும் வேண்டும்" என்று முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் கிரிஷ் ஸ்ரீகாந்தும் கூறினர்.

No comments: