இன்றைய நவீன உலகில், கல்வி கட்டாயமாகிவிட்டது. அதுவும், முன்பெல்லாம்
ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமெனில், ஓரளவு எழுத்தறிவு பெற்றிருந்தால்
போதும். இந்நிலை இன்று மாறிவிட்டது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி
மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக, வேலைவாய்ப்பு என்பது சுமையாக மாறி
உள்ளது.
இன்றைய மாணவர்கள்
கம்ப்யூட்டர் முதல் விவசாயம் வரை, அனைத்து துறைகளிலும் சாதிக்க தயாராக
உள்ளனர். பாடப்புத்தக அறிவு மட்டுமல்லாமல், கூடுதல் திறமைகளை
வளர்த்துக்கொள்ளவும் விரும்புகின்றனர்.
இவ்வாறு சாதிக்க துடிக்கும் மாணவர்களை வழி நடத்துவது;
வாய்ப்புகளை உருவாக்கி தருவதுதான் பெற்றோர் கடமை. குடும்ப நிலை எப்படி
அமைந்திருந்தாலும், குழந்தைகளை பொறுத்தவரை பெற்றோர் அன்பு செலுத்த
வேண்டும். படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும்
என்று எதிர்பார்க்கின்றனர்.
பெற்றோரிடமிருந்து அன்பு, ஆதரவு, அரவணைப்பு கிடைக்காத
குழந்தைகள், அதற்காக ஏங்கி தவிப்பதோடு, தனிமையில் வாடி, வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்ற எதிர்கால லட்சியத்தை தொலைத்து விடுகின்றனர்.
குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாத பெற்றோர், அவர்கள் படிக்க
முடியாமல் பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கு காரணம், சரியாக கற்றுக்கொடுக்காத
ஆசிரியர்கள் தான் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொள்கின்றனர்.
யாருடைய தவறு?
இன்றைய சூழலில், சில குடும்பங்களில் உள்ள பெற்றோர், தங்களது
வேலையை பார்ப்பதற்கே முன்னுரிமை தருகின்றனர். குழந்தை
தனிமைப்படுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் முன், பெற்றோர்கள்
சண்டையிடுவதால், இதன் தாக்கமும் குழந்தைகள் மீது திரும்புகிறது. இதைத்
தவிர்த்து விட்டு, குழந்தைகளின் படிப்புக்கு, அவர்களது விருப்பத்துக்கு
ஏற்ப பெற்றோர் செயல்பட்டால், அனைத்து குழந்தைகளுமே சாதிப்பர்.
No comments:
Post a Comment