போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், ஒருவரிடமுள்ள சிறிய குறை கூட, அவரது
பணி வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும். பலவீனத்தை எப்படி பலமாக மாற்றுவது என
தெரிந்து கொண்டால் போதும். படிப்பிலும், பணியிலும் மட்டுமல்லாது வாழ்விலும்
சாதிக்கலாம்.
ஒரு செயலை சாதாரணமாக
எடுத்துக் கொள்ளக் கூடாது, அதே நேரம் அதி தீவிரமாகவும் செய்யக் கூடாது.
நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். முதலில் தங்களிடமுள்ள நிறை, குறைகளை
தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த செயலை முதலில் செய்ய
வேண்டும்; எதை பின்னர் செய்ய வேண்டும் என்பதை பிரித்துக் கொள்ள வேண்டும்.
உண்மையை அறியுங்கள்
போட்டி சூழ்நிலையில் செய்யும் செயலை, கவனமாகவும், தரமாகவும்
செய்ய முனைதல் வேண்டும். எதிர்மறை அம்சங்கள் அணுகாதவாறு செயல்படுங்கள்.
நேர்மறையான சிந்தனை, பாதி வெற்றியை கொடுக்கும். செயலை முடிக்க
முடியாவிட்டாலும், நேர்மறை எண்ணம் மன திருப்தியை அளிக்கும். எதிர்மறை
எண்ணமோ, விபரீத சிந்தனைகளை தூண்டும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நிறை, குறைகள் உண்டு.
அடுத்தவர் ஈடுபடும் வழியை அப்படியே பின்பற்றாது, தங்களது திறமை மீது
நம்பிக்கை வைத்து தனித்தன்மையுடன் செயல்படவும்.
இலக்கு நிர்ணயுங்கள்
ஒருவரின் செயல்பாட்டை அவரைத் தவிர, யாராலும் கட்டுப்படுத்த
முடியாது. அதுபோல தங்களின் செயல்பாட்டை தாங்கள் மட்டுமே கட்டுப்படுத்த
முடியும். அதனால் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டால் எளிதில் வெற்றி
வசமாகும்.
கற்றுக் கொள்ளுங்கள்
எப்போதும் விழிப்புடன் இருந்து, ஒவ்வொரு செயலிலும் எதையாவது
கற்றுக் கொள்ளுங்கள். ஒருவரின் அனுபவத்திலிருந்து, எண்ணற்ற பாடங்கள்
கற்றுக் கொள்ளலாம். தெரியாத விஷயத்தை அனுபவம், வயதில் சிறியவரானாலும்
கேட்டு தெரிந்து கொள்ள தயங்காதீர்கள்.
எதிரியாக பார்க்காதீர்கள்
போட்டியாளரை எதிரியாக பார்க்காமல், தங்கள் செயல்பாட்டுக்கு
காரணமான நபராக பாருங்கள். இதனால் நம்பிக்கை அதிகரித்து, செயலில் துல்லியம்
பிறக்கும். ஒரு செயலை மனதில் வைத்து செயல்படும் முன், அது குறித்து
அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை பெறவும். இந்த கருத்துகளை மனதில் வைத்து
செயல்பட்டால், எத்தகைய போட்டியாக இருந்தாலும் சாதிக்கலாம்.
No comments:
Post a Comment