வெளி நாடு செல்ல, பாஸ்போர்ட் எடுக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை
அதிகம் கொண்டது. மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக, அரசு மற்றும் தனியார்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகரித்து வருகிறது.
மேலும், தர்மபுரி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி
சதவீதத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த
பெரும்பலான மாணவர்கள் இன்ஜினியரிங் படிக்க விரும்புகின்றனர். இதனால்,
தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர் கல்வி
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக, இன்ஜினியரிங் படிக்கும்
மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள்
பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளில் வேலை செய்ய விரும்புவதோடு, வாழ் நாள்
கனவாக வெளி நாடுகளில் பணிபுரிய விரும்புகின்றனர். இதனால், கடந்த சில
ஆண்டுகளாக, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்
எடுப்பவர்களின் இன்ஜினியரிங் பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தாண்டு, ஆகஸ்ட், 20ம் தேதி வரை பாஸ்பேர்ட் கேட்டு
விண்ணப்பித்த, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில், 530 க்கும் மேற்பட்டவர்கள்
இன்ஜினியரிங் பட்டதாரிகள்.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள், தங்களது
நாட்டில் உள்ள கிளைகளுக்கு இந்திய இன்ஜினியர்களை அனுப்பதற்கு வசதியாக,
தற்போது இங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் பணிக்கும்
வரும் பட்டதாரிகளிடம் பாஸ்போர்ட் கட்டாயம், என்ற நிலையை உருவாக்கி உள்ளதால்
பாஸ்போர்ட் எடுப்பது அதிகரித்து வருகிறது.
No comments:
Post a Comment