Blogger Widgets

Total Page visits

Thursday, August 15, 2013

தலைவா படத்தை வெளியிட முதல்வர் உதவ வேண்டும் - தயாரிப்பாளர் கண்ணீர்

தலைவா படம் வெளியாகததால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படத்தை வெளியிட முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் செய்தியாளர்களிடம் கண்கலங்கியபடி முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார்.

மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், விஜய், அமலாபால் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் ரம்ஜான் தினமான ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள் தியேட்டர் அதிபர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்ந்து அரசியல் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பு, படத்திற்கு, "யு சான்றிதழ் கிடைத்தும் கேளிக்கை வரி விலக்கு நிராகரிப்பு என, படத்திற்கு தொடர்ந்து வந்த பிரச்னைகள், வியாபார ரீதியாக ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையொட்டி, படப்பிரச்னைக்கு முடிவு காண, கொடநாடு சென்றார் விஜய். ஆனால், அங்கு முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்காமல் திரும்பினார்.

இந்நிலையில் முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு தலைவா படத்தை ரிலீஸ் செய்ய உதவுவார் என விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எல்லோருக்கும் தலைவா படம் பிடிக்கும். தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாள்களில்," தலைவா படம் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் அமைதியாக காத்திருக்க வேண்டும் என விஜய் அளித்த வீடியோ வெளியானது.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில்,  கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா படத்தை தயாரித்து இருக்கிறேன். கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன். தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9–ந்தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது. ஆனால் அதேசமயம் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிறமாநிலங்களிலும், உலகநாடுகள் பலவற்றிலும் தலைவா படம் ரிலீஸ் ஆகிவிட்டது. தமிழகத்தில் படம் வெளியாகததால், திருட்டு விசிடிக்களும், இணையதளங்களிலும் படம் வெளியாகி கொண்டு இருக்கின்றன. இதனால் எனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்று, நாளைக்குள் படத்தை வெளியிடாவிட்டால் நான் பெரிய கடனாளியாகிவிடுவேன். ஆகவே முதல்வர் அவர்கள் தலையிட்டு படத்தை வெளியிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சந்திர பிரகாஷ் பேட்டியளித்த போது அவரது கண்கள் கலங்கி காணப்பட்டன.

இயக்குநர் விஜய் பேசுகையில், இந்தப்படத்தில் அரசியல் தொடர்பான சர்ச்சை காட்சிகள் எதுவும் இல்லை. அப்படி ஏதேனும் காட்சிகள் உள்ளது என யாரும் தெரிவித்தால் அதை நீக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்

No comments: