Blogger Widgets

Total Page visits

Wednesday, March 6, 2013

தோல்வி கண்டு கலங்காதிர்..

நாம் வெற்றிக்காக கடுமயாக உழைத்தாலும் ஒரு சின்ன தோல்வி வந்தாலும் துவண்டு விடுகிறோம் . புகழ் பெற்ற பலரின் வாழ்க்கைப் பாதையைப் பார்த்தால் அவர்கள் கடந்து வந்த பாதை அத்துனை எளிதாய் அமைந்து விட வில்லை.பல இன்னல்கள் இடர்பாடுகளை கடந்தே வெற்றிக்கோட்டை அடைந்து இருக்கிறார்கள்.



அவர்களில் அபிரகாம் லிங்கன் அவர்களின் வாழ்க்கை பாதை என்னை ரொம்பவே பிரமிக்க வைத்தது.லிங்கன் தன் இருபத்தேலு வயதில் குடும்பத்தை பிரிந்து பட்டனத்திற்கு வேலைக்கு சென்றார். பின் தேர்தல்களில் படிப்படியாக நின்று அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

இப்படி ஒரெ பத்தியில் வேகமாக அவர் ஜனாதிபதி ஆன கதையை படிப்பதற்கு எளிதாய் இருக்கிறது.அனால் அவர் உயர்வு அத்தனை எளிதாய் அமைந்து விட வில்லை.

பொட்டியிட்ட முதல் உள்ளுர் தேர்தலில் தோல்வி.
அவர் நடத்திய வியாபாரம் தோல்வியில் முடிந்தது.
அவர் கூட்டாளி திடிரென இறந்து விட, அவர் கடன் இவர் தலையில் ஏரியது.
கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோல்வி.
செனட்டருக்கு நடந்த தேர்தலில் தோல்வி.
துணை ஜனாதிபதிக்கு நடந்த தேர்தலில் தோல்வி.

இப்படி தோல்வி பட்டியல் ஒருபுறமிருக்க, அவர் சந்தித்த மரணப் பட்டியலும் நீண்டவை.

பிறந்த சில வயதிலெயெ தம்பி இறந்தான்.பத்து வயதிலிருக்கும் போது தாய் இறந்தாள். பின்பு காதலி இறந்தாள்.பிரசவத்தின் போது அக்கா இறந்தாள.
திருமணமாகி பிறந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு வயதில் இறந்தது. இன்னொரு மகன் 12 வயதில் இறந்தான். இன்னொரு மகன் 18 வயதில் இறந்தான்.(ஒரெ ஒரு மகன் தான் நீண்ட காலம் வாழ்ந்தான்.)

இத்தனை தோல்விகள், இத்தனை இறப்புகளை ச்ந்தித பிறகும் அவர் நிலைகுலையடையவில்லை,கலஙக வில்லை. தன்னுடைய லட்சியத்தை விடாமல் துரத்தினார்.கடுமையான போராட்டத்திலும் லிங்கன் சட்டம் பயின்றார்.

இப்படியாக தான் சந்தித்த தோல்வி தோல்விக்கெல்லாம் , பதிலடி கொடுக்கும் விதமாக ,தன் 52வது வயதில் ஜனாதிபதி தேர்தலில் குதித்து அமெரிக்க ஜனாதிபதி ஆனார் லிங்கன்.

தோல்விக்கு பிறகும் ,சோதனைக்கு பிறகும் அவர் வெற்றி பெற்றது, சோதனைகளைக் கண்டு சிறிதும் கலஙகாத அவரது மன உறுதியும், அவரது விடா முயற்சியுமே ஆகும்.

லிங்கனைப் போலவே இன்னும் ஆயிரம் உதாரணங்கள்" , நாம் பார்க்கலாம் . அவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ,   அவர்கள் தோல்வியை ஒரு படிப்பினையாக , அனுபவமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த படிப்பினையைக் கொண்டு மாற்று திட்டத்தை / வழிமுறையை யோசிக்கிறார்கள். தோல்வியிலிருந்து வெற்றிக்கான சூத்திரத்தை புரிந்து கொள்கிறார்கள்.

தோல்வியை கண்டு சிறிதும் அச்சப் பட்டதாக தெரிய வில்லை. விடா முயற்சியுடன் மேலும் மேலும் விறு கொண்டு செயல் புரிகிறார்கள். ஆக நாமும் தோல்வியைக் கண்டு இனி கலங்காமல் அவர்களின் பாதையைப் பின் பற்றலாமே..

No comments: