என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கொஞ்சம்
கோக்குமாக்கான கதை..! சிறிது தவறியிருந்தாலும் படத்தின் கதைக்களன்
முட்டாள்தனமானது என்று பெயரெடுத்திருக்கும்.. படத்தில் இருக்கும் 4
டிவிஸ்ட்டுகளே படத்தைக் காப்பாற்றியிருக்கின்றன.. இது போன்ற கேரக்டரில்
நடிக்க தற்போதைக்கு கருணாஸைவிட்டால் ஆளே இல்லை.. இது அவருக்கான படம்தான்..!
ஒரு
எழுத்தாளராக வேண்டும்.. பலர் அறிய பாராட்டப்பட வேண்டும் என்ற பெரும்
ஆசையுள்ள கருணாஸ், ‘சந்தமாமா’ என்ற பெயரில் எதையோ எழுதி தானே அதனை
அச்சிட்டு, தானே வெளியிட்டு, அதனையும் தன் செலவிலேயே விளம்பரம் செய்து
விற்பனையும் செய்கிறார்.. அப்படியும் போணியாகவில்லை.. ஒரு சந்தர்ப்பத்தில்
தான் சந்திக்கும் ஹீரோயின் ஸ்வேதாபாசு மூலமாகவும் புத்தகங்களை விற்க
முயல்கிறார். அதுவும் பலனில்லாமல் போகிறது.. இதுவரையில் அவர்
எழுதியதெல்லாம் குப்பை என்று அவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும்
எழுத்தாளர் சொல்லிவிட.. இனி அனுபவ ரீதியாக உணர்ந்து ஒரு காதல் கதையை எழுதி
பெயரெடுக்கப் போவதாகச் சொல்கிறார்.. காதலித்த அனுபவம் இல்லை என்று
தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், கருணாஸின் மனைவி ஸ்வேதாபாசுவை
காதலிப்பதாக வரும் புவன் சிக்க.. அவனை வைத்தே காதலை வளர்க்கிறார்.. அதனை
தொடர்கதையாகவும் புத்தகத்தில் எழுதி பெயரெடுக்கிறார்.. இறுதியில் மனைவியின்
காதல் என்ன ஆனது..? கருணாஸ் என்ன ஆனார் என்பதுதான் மிச்சக் கதை..!
படத்தின்
துவக்கத்தில் வரும் கருணாஸின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் காட்சிகளில்
துவங்கி, ஜெ.காந்தன் போலீஸ் ஸ்டேஷனில் அவரது புத்தகத்தைப் படித்துவிட்டு
கோபப்படும் காட்சிகள்வரையிலும் படம் காமெடியாகத்தான் செல்கிறது..! இதன்
பின்பு உருப்படியாக எழுதப் போகிறேன் என்றவுடன் வில்லங்கமாகி கதையோ திடுக்
உணர்வோடு திரும்பும்போது எப்படித்தான் கதையை முடிக்கப் போகிறார்கள் என்ற
எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்..!
கருணாஸின்
அப்பா சொல்லும் ரகசியம்.. இதனை ஹீரோயின் ஸ்வேதா சொல்லும் காட்சி.. வாரப்
பத்திரிகையின் அட்டையில் வரும் கதையின் இறுதி பாகத்தின் அறிவிப்பு..
கருணாஸ் கடைசியில் என்ன ஆனார் என்பதில் இருக்கும் சஸ்பென்ஸ்.. இவைகள்தான்
படத்தின் உயிர்நாடியான டிவிஸ்ட்டுகள்.. இதனை ஒன்றன்பின் ஒன்றாக
அவிழ்த்துவிடும் காட்சிகள் ரசனையானவை.. இயக்குநர் இங்கேதான்
ஜெயித்திருக்கிறார்..!
கருணாஸ்
வழக்கம்போலவே.. அப்பாவியான எழுத்தாளர்.. கணவர்.. நண்பன் என்ற கேரக்டருக்கு
இப்போதைக்கு இவரைவிட்டால் ஆளே இல்லை.. எழுத்தாளர் மிடுக்கு குறையாமல்
ஹீரோயினிடம் பேசிவிட்டு அவர் பேன் விக்க வந்தவர் என்று தெரிந்து
கோபப்படுவதும்.. தன்னுடைய அங்கீகாரத்துக்காக மனைவியிடம் கெஞ்சுவதும்..
பின்பு தானே சந்தேகப்பட்டு புலம்புவதுமாக ஒரு மொக்கை எழுத்தாளனை நிஜமாகவே
காட்டியிருக்கிறார்.. (எழுத்தாளர்கள் சங்கத்தினர் யாராவது கேஸ் போட்டால்
நிச்சயம் ஜெயிப்பார்கள்..!)
ஹீரோயின்
ஸ்வேதாபாசு.. ஏற்கெனவே ‘ரா ரா’, ‘மை’ படங்களில் நடித்தவர்..!
குழந்தைத்தனமான முகம்.. ஆனால் நொடிக்கொரு முறை இவர் காட்டும்
எக்ஸ்பிரஷன்கள் கவர்ந்திழுக்கிறது.. ‘யாரோ நீ’ பாடல் காட்சியில் ஸ்வேதாவை
ரொம்பவே பிடித்துப் போகிறது..! அவ்வளவு க்யூட்..! அம்மணி இன்னும் கொஞ்ச
நாள் இங்கேயே ரவுண்டு அடிக்கலாம்..! புவனாக ஹரீஷ் கல்யாண்.. ஒரு
சப்ஸ்டிடிட்யூட் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார்..! இளவரசு,
எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம் என்று பலரும் வந்து வந்து செல்கிறார்கள்..!
கல்யாணமான
பெண் என்று தெரியாத அளவுக்கான சிச்சுவேஷனையும், லவ் தோன்றுவதற்கான காரண,
காரியத்தையும் பெரிதாக கொண்டு செல்லாமல், எழுத்தாளர் பெயரெடுக்க வேண்டும்
என்ற கருணாஸின் வெறிக்கு இதனை பலிகடாவாக்கி பட்டென்று கதையின் ஒரு யூ டர்ன்
அடித்திருக்கும் இயக்குநரின் திறமையை பராட்டியே ஆக வேண்டும்..
ஆனந்தக்குட்டனின்
ஒளிப்பதிவைப் பற்றி சொல்லவே தேவையில்லை..! அவருடைய பேவரைட் இடமான
கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் ஒன்றே
போதும்.. மீடியம் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளில் அதிகம்
ரிச்னெஸ்ஸை காட்டாமல், குறைந்தபட்ச வசதிகளுடனேயே இந்தப் படத்திற்காக
உழைத்திருக்கிறார்.. பாராட்டுக்கள்..!
ஸ்ரீகாந்த்தேவாவின்
இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும், ‘யாரோ நீ’
பாடலும், ‘நாராயணா நாராயணா’ பாடலும்.. கேட்பதற்கும், பார்ப்பதற்கும்
சுவையாகத்தான் இருக்கின்றன.. ஆனால் லோ பட்ஜெட் பெஸ்ட் படத்தில் இந்தக்
குத்துப் பாடல் தேவைதானா..? ஆனாலும் ஒரு வாலிபனாக ரகசியாவை ரசிக்கவே
முடிகிறது.. இம்மாம்பெரிய உடம்பை வைச்சுக்கிட்டு அந்த பாப்பா எப்படித்தான்
ஆடுதோ தெரியலை..!?
இயக்குநர்
ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே மலையாள இயக்குநர்கள் தம்பி கண்ணந்தானம், வினயன்
ஆகியோரிடமும், வடிவுடையானிடமும் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார்..!
இந்தப் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் மொழி மாற்றம்
செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொண்ட கதைக்காகவே இவரை முதலில்
பாராட்ட வேண்டும்..!
இப்படியெல்லாம்
செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு
படத்தின் இடையிடையே பல முறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில்
சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை..!
ஸ்வேதாவின் பளிச் பதில்கள்.. சிச்சுவேஷன்கள்.. என்று அனைத்திலுமே கருணாஸ்
செய்வது தவறு என்பது மீண்டும் மீண்டும் எஸ்டாபிளீஸ் செய்யப்பட்டு
வருவதையும் கவனித்தால் இயக்குநர் திரைக்கதையில் எவ்வளவு கவனத்துடன்
இருந்திருக்கிறார் என்பது புரிகிறது..! கிளைமாக்ஸில் என்ன ஆனது என்ற
பதட்டத்தில் உண்மை தெரியும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை..!
இங்கேயும் மிகச் சிறப்பான இயக்கம்..!
புத்தகத்தை
விற்பனை செய்ய ஸ்வேதா அண்ட் கோ செய்யும் முயற்சிகள்.. அதன் தோல்விகள்..
புத்தக பப்ளிஷரின் அப்பாவித்தனம்.. செட்டப் செய்யப்பட்ட பிரஸ் மீட்.. அதன்
தொடர்ச்சியான நிகழ்வுகள் என்று சிற்சில ‘கதை’கள் இருந்தாலும் ஒட்டு
மொத்தமாக பார்க்கப் போனால் சிறந்த பொழுது போக்கு படம்தான்..! இதில்
சந்தேகமில்லை..! நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..!
இந்த பதிவு உண்மைதமிழன் வலை பக்கத்தில் இருந்து பகிரப்பட்டது .
No comments:
Post a Comment