Blogger Widgets

Total Page visits

Saturday, March 9, 2013

பிரவீண் குமாருக்கு மன்னிப்பு

"சஸ்பெண்ட்' செய்யப்பட்ட பிரவீண் குமாருக்கு, எச்சரிக்கையுடன் மன்னிப்பு வழங்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார். அவ்வப்போது களத்தில் ஆக்ரோஷமாக நடந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். கடந்த மாதம் நடந்த கார்ப்பரேட் டிராபி தொடரின் போது, அம்பயர் மற்றும் வீரரிடம் தகராறில் ஈடுபட்டார். "நோ பால்' கொடுத்த அம்பயரை தகாத வார்த்தைகளால் திட்டினார். 

களத்தில் விளையாடும் "மனநிலை' பிரவீண் குமாருக்கு இல்லை, "மேட்ச் ரெப்ரி' தனஞ்செய் சிங் அறிக்கை கொடுத்தார். 

இதுகுறித்து விசாரித்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பிரவீண் குமாரை, "சஸ்பெண்ட்' செய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனால், சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில், உத்திர பிரதேச அணிக்காக பிரவீண் குமார் பங்கேற்க முடியவில்லை. 

இதனிடையே, பிரவீண் குமாரின் விளக்கம் குறித்து, பி.சி.சி.ஐ., ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழு கடந்த சில நாட்களுக்கு முன் விவாதித்தது. முடிவில், இவர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, இச் செயலுக்காக, பிரவீண் குமாருக்கு கடும் எச்சரிக்கை விடுக்க உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதனால், விரைவில் துவங்கவுள்ள சையது முஸ்தாக் அலி டிராபி மற்றும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் பிரவீண் குமார் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது


No comments: