மொகாலி: முரளி விஜய்யுடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்க ரகானே, ஷிகர் தவான் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக காம்பிர், சேவக் இருந்தனர். இருவரும்
சமீபத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு
எதிரான மொகாலி டெஸ்டில்(மார்ச் 14-18) புதிய துவக்க ஜோடியுடன் இந்திய அணி
களமிறங்க உள்ளது.
இதன், ஒரு இடம் தமிழகத்தின் முரளி விஜய்க்கு உறுதி. இவருடன் சேர்ந்து
களமிறங்கும் மற்றொரு வீரர் யார் என்பதில் தான் இப்போது சிக்கல்
எழுந்துள்ளது. கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்காக அணியில்
சேர்க்கப்பட்டவர் இளம் வீரர் ரகானே. கடந்த 2007-08 ல் இவர் அறிமுகமானது
முதல், இப்போது வரை உள்ளூர் போட்டிகளில் இவரது சராசரி 62.04 ரன்களாக
உள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் சேவக், காம்பிர் கடைசி வரை சொதப்பிய போதும்,
திறமையான ரகானேவுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சமீபத்திய இங்கிலாந்து
தொடரில் இது தான் நடந்தது.
"மிடில் ஆர்டர்' வீரரா: சரி, தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் காம்பிர்
நீக்கப்பட்டதால், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார். ஆனால், முரளி
விஜய்யும், ஷிகர் தவானும் தான் துவக்க வீரர்கள், ரகானே "மிடில் ஆர்டர்'
வீரர் என, முத்திரை குத்தியது தேர்வுக்குழு.
இப்போது சேவக்கும் நீக்கப்பட்டார். ஆனால், முரளி விஜய் உடன் இணைந்து
துவக்கம் தரும் வாய்ப்பு, ரகானேவுக்கு கிடைக்காது போல உள்ளது. இதில் ஷிகர்
தவான் தான் முந்துகிறார்.
மீண்டும் வாய்ப்பு: கடந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பின்,
அணியில் இருந்து கழற்றி விடப்பட்டவர் இவர். இப்போது டெஸ்ட் அணியில்
அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
ஏனெனில், இந்த ஆண்டு நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் தவானின் சராசரி 51.22
ரன்கள். வடக்கு மண்டல அணிக்காக 2, துலீப் டிராபியில் ஒன்று என, மூன்று
சதங்கள் அடித்தார். தவிர, இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் 63
ரன்கள் சேர்த்தார்.
காரணம் என்ன: தவிர, முரளி விஜய், ஷிகர் தவான் சேர்ந்து உள்ளூர்
போட்டிகளில் பல முறை இணைந்தும், ஒருவருக்கு ஒருவர் எதிராகவும்
விளையாடியுள்ளனர். இந்த அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கலாம். இடது
மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களாக இந்த ஜோடி உள்ளது. இதில் ஷிகர் தவான்
சிறப்பான பீல்டரும் கூட. இதனால், ரகானே இன்னும் சில காலம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment