Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்றால் என்ன?

மெக்கானிக்கல் அமைப்புகளை, நிர்வகிப்பது, வடிவமைப்பது, உற்பத்தி செய்வது மற்றும் பகுப்பாய்வு செய்வது போன்ற பணிகளுக்காக, இயற்பியல் மற்றும் மெட்டீரியல் அறிவியல் கோட்பாடுகளை பயன்படுத்துவதே, மெக்கானிக்கல் பொறியியல் ஆகும்.

இயந்திரங்கள்(Machines) மற்றும் கருவிகளின் இயக்கம், உற்பத்தி மற்றும் வடிவமைப்பு போன்றவைகளுக்காக, வெப்பம் மற்றும் மெக்கானிக்கல் ஆற்றலைப் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவை தொடர்பான ஒரு பொறியியல் பிரிவு இதுவாகும். பொறியியல் பிரிவுகளிலேயே, மிகவும் பழமையான மற்றும் பெரிய துறையாகும் இது.

இந்த பொறியியல் பிரிவுக்கு, mechanics, kinematics, thermodynamics, materials science, and structural analysis போன்றவற்றின் புரிதல் தேவை. மேற்கூறிய ஒட்டுமொத்த விதிமுறைகளை, கணினி மயமாக்கப்பட்ட பொறியியல் மற்றும் தயாரிப்பு வாழ்க்கைச் சக்கர மேலாண்மை(Product Lifecycle Management) ஆகிய கருவிகளின் உதவியுடன், உற்பத்தி சாதனங்கள், தொழிற்சாலை உபகரணம் மற்றும் இயந்திரங்கள், சூடாக்குதல் மற்றும் குளிராக்குதல் அமைப்புகள், போக்குவரத்து சாதனங்கள், ஏர்கிராப்ட், வாட்டர்கிராப்ட்(Watercraft), ரோபோடிக்ஸ், மெடிக்கல் சாதனங்கள் மற்றும் பலவற்றை பகுப்பாய்வு செய்தல், வடிவமைத்தல் போன்ற பணிகளுக்கு, மெக்கானிக்கல் பொறியாளர்கள்(Machanical Engineers) பயன்படுத்துகின்றனர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையுடன் தொடர்புடைய பிற இளநிலைப் பட்டப் படிப்புகள் பற்றிய விபரம்

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்

ஏரோநாடிகல் இன்ஜினியரிங்

Manufacturing இன்ஜினியரிங்

இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங்

ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங்

ப்ரொடக்ஷன் இன்ஜினியரிங்

மெட்டலர்ஜி இன்ஜினியரிங்

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்

மெரைன் இன்ஜினியரிங்

இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: