Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

பொறியாளர் சங்கங்கள்

இயந்திரம் மற்றும் தொழில்புரட்சிகள் ஏற்படாத மன்னராட்சிக் காலத்தில், ஒரேவிதமான தொழிலை செய்பவர்களின் சங்கங்கள்(Guilds) இருந்தன. இவை கழகங்கள் அல்லது அமைப்புகள் என்றும் அழைக்கப்பட்டன. இந்த முறையை அடிப்படையாக வைத்து, இன்று உருமாறி இருப்பவைதான் அசோசியேஷன்கள்(Associations) என்று அழைக்கப்படும் அமைப்புகள். இவை ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தனித்தனியாக உள்ளன. இன்றைய நிலையில், உலகெங்கிலும் மொத்தம் 114 சர்வதேச அசோசியேஷன்கள் உள்ளன. பொறியயல் துறையைப் பொறுத்தவரையில், பல்வேறான அசோசியேஷன்கள் உள்ளன. IEEE அல்லது CSI அல்லது IETE போன்றவை, இந்திய பொறியாளர்கள் அறிந்த பிரபலமான அசோசியேஷன்கள். இக்கட்டுரையில், பொறியியல் சார்ந்த சில அசோசியேஷன்களைப் பற்றி அலசலாம்.

சில முக்கிய அசோசியேஷன்கள்

WIE என்ற அமைப்பு, கடந்த 2002ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. இது IEEE என்ற அமைப்பின் துணை அமைப்பாகும். இன்றைய நிலையில் இந்த அமைப்பானது, கல்லூரி மற்றும் நகரக் குழுக்களைச் சேர்த்து, மொத்தம் 79 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இந்த அமைப்பில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இதில் உறுப்பினராவதன் மூலம் ஒரு மாணவருக்கோ அல்லது மாணவிக்கோ பலவித நன்மைகள் கிடைக்கின்றன. இதன்மூலம் அந்த அமைப்பின் உலகளாவிய டைரக்டரியை அளவிடலாம். இதனால், உலகளவில் பல நாடுகளிலுள்ள முக்கிய WIE உறுப்பினர்களின்(பெண் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட) தொடர்புகள் கிடைக்கும். மேலும், பணி வாய்ப்பு விபரங்களைக் கொண்ட மாதாந்திர WIE செய்தி மடல், உள்ளூர் குழு நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் போன்ற பல விஷயங்களைப் பெறலாம்.
மாணவ உறுப்பினர்கள், WIE நடவடிக்கைகளிலும் பங்கேற்கலாம். நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ப்ராஜெக்ட்களிலும் பணியாற்றலாம். இவைத்தவிர, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல், 8ம் வகுப்பிற்கு மேலுள்ள மாணவர்களுக்கான பலவித நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இவைப்பற்றி அதிகத் தகவல்களை அறிந்துகொள்ள www.ieee.org என்ற இணையதளம் செல்க.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(IET) என்ற அமைப்பு, IEE மற்றும் IIE என்ற அமைப்புகளை இணைத்து உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் மொத்தம் 37 நாடுகளில், தனக்கென 1.5 லட்சம் உறுப்பினர்களை IET கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த அமைப்பிற்கு மொத்தம் 3,800 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடைய உறுப்பினருக்கு, பள்ளியை விட்டு நீங்கும் காலகட்டத்திலிருந்து, பணி ஓய்வு பெறும் காலம் வரையிலும் வழிகாட்டும் நோக்கத்தை இந்த அமைப்புக் கொண்டுள்ளது என்று அதன் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கிறார். அதில், வேலை தேடுதல் மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய வழிகாட்டுதல்கள் போன்றவையும் அடங்கும்.

மேலும், வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஆய்வு தலைப்புகள், பல சிறந்தப் புத்தகங்கள், ஜர்னல்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றை வெளியிடுவதுடன், 120க்கும் மேற்பட்ட மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வருடாவருடம் இந்த அமைப்பு நடத்துகிறது. மேலும், துறைப் பற்றி வழங்கப்படும் ஆயிரக்கணக்கான லெக்சர்களை, IET  TV மூலம் பெறலாம்.

பிரிட்டனில் வழங்கப்படும் 1000க்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகள் IET -ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, தங்களின் துறை தொடர்பாக நீடித்த மேம்பாட்டை அடைவதற்காகவே மக்கள் IET போன்ற அமைப்புகளில் இணைகிறார்கள் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இதில் உறுப்பினராவதற்கு முன்பாக, திறன் அளவீடு மற்றும் நேர்காணல் போன்ற சில தேர்வுமுறைகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நடத்தப்படுகின்றன.

IET -ல் உறுப்பினர் விபரங்கள்

ICT Technician - ITI தகுதி(இந்திய அளவில்)

பொறியியல் Technician - 2 முதல் 3 வருடங்கள் பணி அனுபவம் மற்றும் அடிப்படை I.T திறன்கள்
Incorporated பொறியாளர் - இளநிலைப் பட்டம் மற்றும் நடுநிலை அனுபவம்
Chartered பொறியாளர் - நல்ல பல்கலை அல்லது கல்லூரியிலிருந்து இளநிலைப் பட்டம், முதுநிலையிலான அனுபவமும் சிறிது வேண்டும்.

இந்தியாவிலுள்ள சில முக்கிய பொறியியல் சங்கங்களின்(Associations) விபரங்கள்

IEEE - www.ieee.org


Institution of Engineers - www.ieindia.info

IETE - www.iete.org


ASME - www.asme.org



இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: