Blogger Widgets

Total Page visits

Wednesday, June 5, 2013

அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்ஜூன்

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப்பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள் வேலை வாய்ப்பு தரும் கல்வி படிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால், தனியார் கல்லூரிகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில், பி.ஏ., - இதழியல் மற்றும் தொடர்பியல், பாதுகாப்பு துறை படிப்பு, பி.எஸ்சி., - எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நுண்ணுயிரியல், விசுவல் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ். டபிள்யூ., - சமூக சேவை உள்ளிட்ட, 398 புதிய பாடப்பிரிவுகளை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய பாடப்பிரிவுகளுக்கு அரசாணை, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழக அங்கீகாரத்தை பெற்ற பின், ஜூன் இறுதி வாரம் முதல் மாணவர் சேர்க்கை துவங்கும்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலர், பிரதாபன் கூறியதாவது: வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய பல அரிய படிப்புகள், அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதி கல்லூரிகளிலேயே வழங்கப்படுகின்றன. வசதி படைத்த மாணவர்கள், இக்கல்லூரிகளில் எளிதில் சேர்ந்து விடுகின்றனர். 

ஏழை மாணவர்களுக்கு, இப்படிப்புகள் எட்டாக்கனியாகி விடுகிறது. அரசு கல்லூரிகளில், இப்படிப்புகளை துவங்குவதன் மூலம், ஏழை மாணவர்கள் பயன் பெற முடியும். இவ்வாறு, பிரதாபன் கூறினார்.

 இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து இங்கு பகிரப்படுகிறது

No comments: