Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

மரைன் இன்ஜினியரிங் என்றால் என்ன?

மரைன் இன்ஜினியரிங் என்பது, கடல்சார் கட்டமைப்பு மற்றும் அறிவியல் தொடர்பான ஒரு பொறியியல் பிரிவாகும். மரைன் இன்ஜினியர்கள், ஒரு கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மைக்கு முழு பொறுப்பாகிறார்கள். Steam turbines, gas turbines and diesel engines போன்ற ஒரு கப்பலின் சாதனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு இவர்களுடையது. மேலும், கட்டுமானம், இயக்கம் மற்றும் இன்ஜின் அறை பராமரிப்பு போன்ற பணிகள் இவர்களுக்கு முக்கியமானவை. மரைன் இன்ஜினியரிங் பாடமானது, ஆன்த்ரோபாலஜி, ஆர்க்கியாலஜி, சோசியாலஜி மற்றும் மனிதனின் கடல் சம்பந்தமான இன்னும் சில துறைகளுடன் தொடர்புடையது.

மரைன் இன்ஜினியரிங் தொடர்பாக வழங்கப்படும் சில பாட வகைகள்

* Diploma in Marine engineering
* Bachelor of engineering in Marine engineering
* Bachelor of technology in Marine engineering
* Bachelor of technology in naval architecture & ocean engineering
* Master of technology in air armament
* Master of engineering in Marine engineering
* Master of technology in Marine engineering
* Master of technology in ocean engineering and naval architecture

இப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்

இளநிலைப் படிப்பு

இளநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் ஒருவர், கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களோடு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேசமயம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமெனில், JEE போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்பின் காலகட்டம் 4 வருடங்கள்.

முதுநிலைப் படிப்பு

மரைன் தொடர்பான முதுநிலைப் படிப்பில் சேர்பவர்களுக்கு, பி.இ/பி.டெக் அல்லது வேறு ஏதேனும் சமமான பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்ட தகுதி இருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பின் காலஅளவு 2 வருடங்கள்.

இத்துறையில் வழங்கப்படும் சில சிறப்புநிலை(specialisation) படிப்புகள்

* Maritime commerce
* Marine refrigeration
* Command and control system
* Weaponry and weapon systems
* Navigation systems and equipment
* Marine renewable energy research
* Autonomous underwater vehicle research
* Information, communication systems and equipment
* Offshore extractive and infrastructure (cable laying)

வேலை வாய்ப்புகள்

இந்திய அளவில், சிறந்த வேலைவாய்ப்புக்காக, மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் ஒரு சில முக்கிய படிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கான வேலை வாய்ப்புகள் ஏராளம். Marine engineer, Ocean engineer and Naval architect போன்ற பணி நிலைகளுக்கு, தனியார், கல்வி, கார்பரேட் மற்றும் அரசுத் துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அபரிமித வேலைவாய்ப்புகள் உள்ளன. நவீன உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் நேவிகேஷன் போன்ற அம்சங்களால் இந்தப் பணியின் தன்மை மேம்பட்டுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது. மரைன் இன்ஜினியரிங்கில், environmental protection, offshore oil recovery, marine metals and corrosion, renewable energy, remote sensing, naval architecture, defense, underwater vehicles, global climate monitoring and marine transportation போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கவை.

இத்துறை பொறியாளர்களுக்கான சில பணி நிலைகள்

* Pumpman
* Harbor master
* Chief engineer
* Third engineer
* Fourth engineer
* Second engineer
* Marine engineering officers
* Junior (fifth) engineer
* Navy weapon engineering officer

ஊதியம்

அதிக சம்பளம் கிடைக்கும் துறைகளில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி நிலையில் உள்ள ஒரு பொறியாளர், மாதம் ரூ.30000 முதல் ரூ.40000 வரை பெறலாம். அனுபவம் மற்றும் விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, ஒருவர் பெறும் ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.

இந்திய மெர்சன்ட் நேவியில் பணிபுரியும் ஒரு பொறியாளர் கவர்ச்சிகரமான சம்பளம் பெறுகிறார். வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு மரைன் பொறியாளருக்கு NRI தகுதி கிடைக்கிறது. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் பெறும் ஊதியமும் அபரிமிதமானது.

எங்கே படிக்கலாம்?

மரைன் இன்ஜினியரிங் படிப்பை, நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, தனியார் அளவில், கடல்சார் அறிவியலுக்கான ஆர்.எல் கல்வி நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பிற்கென்று, தென்னிந்தியாவில் இருக்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே, இத்துறை தொடர்பாக கீழ்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

BS (Marine engineering) - 4 years(residential)
BS (Nautical technology) - 4 years(residential)
Graduate mechanical engineers - 1 year (residential)
Ship's electircal officers and engineers - 6 months (residential)

சிறந்த ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ரம்மியமான சூழல் போன்றவை இக்கல்வி நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்.

இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: