பொறியியல் அகடமிக் பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 3 நாட்கள் நிறைவடைந்த
நிலையில், வழக்கம்போலவே, இ.சி.இ., பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு
செய்துள்ளனர். 1,612 மாணவர்கள் இப்பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை, 1,317
மாணவர்களுடன், மெக்கானிக்கல் பிரிவு பெற்றுள்ளது. மூன்றாமிடத்தை, கணிப்பொறி
அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பெற்றுள்ளது. 884 மாணவர்கள் இப்பிரிவை
தேர்வு செய்துள்ளனர். ஆட்டோமொபைல் துறையை 103 பேர் தேர்வு செய்துள்ளனர்.
சிவில் பிரிவை 608 மாணவர்களும், ஐ.டி., பிரிவை 476 பேர் தேர்வு
செய்துள்ளனர். பாரம்பரிய பிரிவுகள் சாராத, இதர பொறியியல் பிரிவுகளை
மொத்தமாக 824 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில் தமிழ் வழிக் கல்வி
பிரிவுகளில், சிவில் பிரிவை 1 மாணவர் மட்டுமே தேர்வு செய்துள்ளார்.
மெக்கானிக்கல் பிரிவை இதுவரை யாரும் தேர்வு செய்யவில்லை.
அண்ணா பல்கலையில், அகடமிக் பிரிவு பொறியியல் கலந்தாய்வு துவங்கி, 3
நாட்கள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 6,940 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
ஜுன் 23ம் தேதி முடிவடைந்த
நிலவரப்படி, அண்ணா பல்கலை மற்றும் பல்கலை துறைகளில் மொத்தம் 1,602
மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரி மற்றும்
மண்டல மையத்தில் 66 மாணவர்கள் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 2,633 மாணவர்களும், சுயநிதி
பொறியியல் கல்லூரிகளில், 2,639 மாணவர்களும் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
காலியிடங்கள் என்று பார்த்தால், 3 நாட்கள் கவுன்சிலிங் முடிவடைந்த
நிலையில், அனைத்து பிரிவினரையும் சேர்த்து, மொத்தமாக 1 லட்சத்து 87
ஆயிரத்து 291 காலியிடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment