பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும், மறுபக்கம்
நுழைவுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி மாணவர்கள் இடையே பரபரப்பை
ஏற்படுத்தும் காலம் இது.
எப்போதுமே படிப்பாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி
மாணவிகளுக்கே முதல் இடம். ஏனெனில் எதிலும் பொறுப்பாக படிப்பார்கள், வேலை
செய்வார்கள் என்பதுதான் காரணம்.
அதற்கேற்ப பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்,
அதில் முதல் இடங்களைப் பிடித்த மாணவிகளின் எண்ணிக்கையும் அமைந்துவிட்டது.
அதுமட்டுமல்லாமல், ஆண்டு தோறும் மாணவர்களை, விட மாணவிகளே அதிக விழுக்காடு
தேர்ச்சி ஆவதும், ஏதோ மாணவர்கள் முட்டாள்கள் என்றும், மாணவிகளே அறிவாளிகள்
என்று எண்ணத்தை மனதில் வேரூன்ற வைத்துவிட்டது.
ஆனால் இது உண்மையா? இல்லை என்பதே ஆழமாக சிந்திக்கும் சிந்தனையாளர்களின் கருத்தாகும்.
அறிவு என்பது வெறும் புத்தகத்தைப் படித்து அதனை மனப்பாடமாக விடைத்தாளில்
எழுதுவது மட்டும் அல்ல, அதையும் தாண்டி பரந்து விரிந்து உள்ளது.
இந்த இடத்தில்தான் மாணவர்களிடம், மாணவிகள் தோல்வி அடைந்து
விடுகிறார்கள். பள்ளிப் படிப்பு வரை படித்து எழுதி அதிக அளவில் தேர்ச்சி
பெறும் மாணவிகள், அடுத்து வரும் பல்வேறு தேர்வுகளில் குறைந்த அளவில்
தேர்ச்சி பெறக் காரணம் என்ன?
இதற்கு உதாரணமாக இந்த வாரம் வெளியான ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு
முடிவில் தமிழகத்தில் சுமார் 227 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்
மாணவர்கள் 200 பேர், மாணவிகள் வெறும் 27 பேர்தான். இதற்குக் காரணம் என்ன?
போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் மாணவிகளை விட,
மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறக் காரணம் என்ன? அவர்களது அறிவுத்
திறன்தான்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் பொதுத் தேர்வுகளில் அதிக அளவில்
தேர்ச்சி பெறுவதை வைத்துக் கொண்டு, மாணவர்களை மதிப்பிடக் கூடாது என்பதுதான்
உண்மை.
No comments:
Post a Comment