வாழ்க்கையில் வெற்றி பெறுவது நம் ஒவ்வொருவரின் மனதில்
எழும் எண்ணங்களை பொறுத்தது. அனைவருமே வெற்றியாளராக வர வேண்டும் என்றுதான்
விரும்புவார்கள். ஆனாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளராக
முடிசூட்டுகின்றனர். இதற்கு தோல்வியாளர்களிடமிருந்து, வெற்றியாளர்கள் சில
விஷயங்களில் தனித்து நிற்பதால் தான் வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.
* தோல்வியடைபவர்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என
நினைப்பார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் அல்லது எதை செய்யக்கூடாது என
நினைக்கிறார்களோ, அதனை செய்வார்கள். வெற்றியாளர்கள் எதை செய்ய
நினைக்கிறார்களோ அதனை செய்து முடிப்பார்கள். அதே போல செய்ய வேண்டாம் என
முடிவெடுத்தால் கண்டிப்பாக அதை செய்யமாட்டார்கள்.
* தோல்வியாளர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்னையை பார்ப்பார்கள் ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு பிரச்னைகளையே வாய்ப்பாக பார்ப்பார்கள்.
* தோல்வியாளர்கள் மனதில் தோன்றுவதை செய்வர். ஆனால் வெற்றியாளர்கள் நன்கு திட்டமிட்டு செயலாற்றுவர்.
* தோல்வியாளர்கள் அடுத்தவர்கள் வழிமுறைகளை
நிராகரிப்பார்கள். ஏனெனில் ஏற்றுக்கொண்டால் அவர்களை விட நாம் தாழ்ந்தவராகி
விடுவோம் என்று எண்ணுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் அடுத்தவர்களின்
வழிமுறைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஏனெனில் அதிலிருந்து அவர்கள் புதிதாக
கற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள்.
* தோல்வியாளர்கள் முதல் தோல்வியிலேயே அம்முயற்சியிலிருந்து வெளிவந்து விடுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள் ஒவ்வொரு
தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றுவார்கள்.
தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுக்களாக மாற்றுவார்கள்.
* தோல்வியாளர்களிடம் விடாமுயற்சி இருப்பதில்லை. வெற்றியாளர்கள் தங்களது கனவு நனவாகும் வரை முயற்சி செய்வார்கள்.
* தோல்வியாளர்கள் வெற்றியாளர்களை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஆனால் வெற்றியாளர்கள், வெற்றி பெற்ற ஒவ்வொருவரையும் பாராட்டுவார்கள்.
* தோல்வியாளர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பர். வெற்றியாளர்கள் வேலையையும், ஓய்வையும் சரி சமமாக எடுத்துக்கொள்வார்கள்.
* தோல்வியாளர்கள் கனவு காண்பர். ஆனால் அதனை
செய்யமாட்டார்கள். வெற்றியாளர்கள் தங்களது கனவு நிறைவேற என்னவெல்லாம்
தேவையோ அதனை செய்து முடிப்பதிலேயே எப்போதும் குறியாக இருப்பர்.
* தோல்வியாளர்கள் அடுத்த அடிக்கு நகர மாட்டார்கள்.
ஏனெனில் அடுத்தது என்னாகுமோ என்ற பயம் அவர்களை சூழ்ந்திருக்கும்.
வெற்றியாளர்கள் தங்களது எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விட்டு அடுத்த
கட்டத்துக்கு செல்வதையே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.
* தோல்வியாளர்கள் ஒரு விஷயத்தை முடியாது என்பார்கள். ஆனால் வெற்றியாளர்கள் சாத்தியத்திற்கு முடிவே இல்லை என்பார்கள்.
* தோல்வியாளர்கள் வாழ்க்கையில் தங்களை சுற்றி எவ்வித
எதிர்ப்போ, துன்பமோ இருக்கக் கூடாது என நினைப்பார்கள். ஆனால்
வெற்றியாளர்கள் தங்களது எண்ணம் நிறைவேறுவதற்கு என்னவெல்லாம் தடையாக
இருக்கிறதோ அதனை முறியடித்து முன்னேறுவதையே விரும்புவர்.
என்ன நீங்கள் வெற்றியாளரா இல்லை தோல்வியாளரா என்பதை
தெரிந்து கொண்டீர்களா... வெற்றியாளர்களாக இருப்பின் உங்களது செயலை
தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள், இல்லை யென்றால் வெற்றியாளர்களாக
மாறுவதற்கு முயற்சியுங்கள்.
No comments:
Post a Comment