மென்பொருள் துறையில் புதிதாக வேலை தேடுபவர்கள் ஏதாவது கோர்ஸ்
செய்திருக்க வேண்டுமா??? சர்டிபிகேஷன் எந்த அளவிற்கு உதவும்.
பொதுவாக புதிதாக வேலை தேடுபவர்கள் எதிலும் வல்லுனர்களாக
(Specialisation) இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் எதுவும்
கோர்ஸ் செய்திருக்க வேண்டுமென்றோ, சர்டிபிகேஷன் செய்திருக்க வேண்டுமென்றோ
அவசியமில்லை.
எனக்கு கம்ப்யூட்டர் எதுவும் தெரியாது. சொல்லி தரவும் நண்பர்கள் இல்லை.
வீட்டில் கம்ப்யூட்டரும் இல்லை. ஆனால் எப்படியாவது மென்பொருள் துறையில்
நுழைய வேண்டும் என்றிருப்பவர்கள் கோர்ஸ் செல்வது தவறில்லை.
மேலும் காலேஜில் படிப்பவர்கள், சரியாக சொல்லி தர ஆளில்லை
என்றிருப்பவர்கள், வகுப்பில் ஒருவர் அல்லது இரண்டு பேர் சென்று
மற்றவர்களுக்கு சொல்லி தரலாம்.
எங்களுக்கு காலேஜில் C சொல்லித்தந்த ஆசிரியர் வகுப்பில் கேட்ட முதல்
கேள்வி, “Who is developed by C?”. ஆனால் அவர் கேட்க நினைத்த கேள்வி “Who
developed C?” அவர் சொல்லி கொடுத்து நாங்கள் புரிந்து கொண்டு…. வேணாம்
விடுங்க.
அதனால் நாங்கள் Unix, C, C++ கோர்ஸ் சென்றோம்… ஓரளவு நன்றாகவே தெரிந்து கொண்டோம்… அந்த கோர்ஸ் சென்றது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.
நான் சொல்வது இதுதான்… புதிதாக வேலைத் தேடுபவர்கள் அந்த துறையில்
வல்லுனர்களாக வேண்டும் என்று அவசியமில்லை. ஓரளவு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து
படித்தாலே போதும். சர்ட்டிபிகேஷன் பெரிதாக உதவும் என்ற நம்பிக்கையும்
எனக்கில்லை.
எதை படித்தாலும் நன்றாக புரிந்து படியுங்கள். மற்றவர்களுக்கு தெரிந்ததை
சொல்லிக் கொடுங்கள். தெரியாததைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வேறு
வழியில்லை என்றால் கோர்ஸ் செல்வது தவறில்லை. கோர்ஸ் சென்றாலும் முடிந்தவரை
நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.
மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படாதீர்கள். பெரும்பாலானா
கம்பெனிகள் உங்களுக்கு என்ன தெரியும் என்பதையே பார்க்கின்றன. மதிப்பெண்
முறையைக் கோண்டு ஒரு சில கம்பெனிகளே தெரிந்தெடுக்கின்றன. அதுவும் முதல்
சுற்றுக்கே இன்றைய நிலையில் அரியர் பேப்பர்கள் இல்லாமல் இருந்தாலே போதும்.
நம்பிக்கையோடு உழையுங்கள்… இறைவன் உங்களுக்கு துணை புரிவான்..
இந்த தகவல் வெட்டிப்பயல் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது.
No comments:
Post a Comment