Blogger Widgets

Total Page visits

Sunday, June 2, 2013

உலகின் டாப் 100 பட்டியலில் 16 இந்திய சாப்ட்வேர் கம்பெனிகள்


உலகின் டாப் 100 சாப்ட்வேர் கம்பெனிகள் பட்டியலில் இன்போசிஸ், டிசிஎஸ் உள்பட 16 இந்திய கம்பெனிகள் இடம் பெற்றுள்ளன. 

உலக அளவில் முன்னணியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் பற்றி, சர்வதேச நிறுவனமான பி.டபிள்யூ.சி குளோபல் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. ஆய்வு அறிக்கையில் உலகின் டாப் 100 சாப்ட்வேர் நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளது. மேலும், சர்வதேச சாப்ட்வேர் சந்தையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆய்வு அறிக்கை விவரம் வருமாறு:

சர்வதேச சாப்ட்வேர் சந்தையில் சீனாவே முதலிடத்தில் உள்ளது. ஓராண்டில் இதன் சாப்ட்வேர் வர்த்தகம் 27,380 லட்சம் அமெரிக்க டாலராக உள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 11,740 லட்சம் டாலர் வர்த்தகத்துடன் 2வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 10,150 லட்சம் டாலர் வர்த்தகத்துடன் 3வது இடத்திலும், பிரேசில் 9,450 லட்சம் டாலர் வர்த்தகத்துடன் 4வது இடத்திலும் உள்ளன. 7,970 லட்சம் டாலர் வர்த்தகம் கொண் டுள்ள இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. 

இந்தியாவை சேர்ந்த 16 சாப்ட்வேர் கம்பெனிகள், டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சாப்ட்வேர் சேவை மற்றும் வருவாய் அடிப்படையில், ஜியோடெசிக் 14வது இடத்திலும், ஆன்மொபைல் 21வது இடத்திலும் உள்ளன. சுபெக்ஸ் 26வது இடத்திலும், இன்போசிஸ் 27வது இடத்திலும், டிசிஎஸ் 29வது இடத்திலும் எப்டி இந்தியா 35வது இடத்திலும் டாலி சொல்யூசன்ஸ் 39வது இடத்திலும் உள்ளன. 

இதே போல், கிரேன்ஸ் சாப்ட்வேர்(44), இன்போடெக்(60), நியூஜென் சாப்ட்வேர்(62), ராம்கோ சிஸ்டம்ஸ்(64), பெர்சிஸ்டென்ட்(65), கேஎல்ஜி சிஸ்டெல்(71), போலரிஸ் சாப்ட்வேர்(72), எஜுகோம்ப் சொல்யூஷன்ஸ்(85), டெலிடேட்டா டெக்னாலஜி(89) ஆகியவையும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2000ம் ஆண்டில் 100க்கு அதிகமான சாப்ட்வேர் நிறுவனங்கள் இருந்தன. 2013ல் இந்த எண்ணிக்கை 2,400 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி நாளேடுகளின் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது 

No comments: