Blogger Widgets

Total Page visits

Monday, June 3, 2013

வாழ்வில் ஜெயிக்க வைப்பது எது?

மாணவர்களே, வாழ்வில் ஜெயிப்பதற்கு, வெறும் படிப்பு மட்டும் போதாது. பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், ஒழுக்கம், நடத்தை பண்புகள், போன்றவையே வாழ்வில் ஜெயிக்க வைக்கிறது.

வாழ்வில் ஏற்படும், குறைகள், தோல்விகள், பிரச்னைகள் ஒவ்வொன்றும், நமக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புகள் என கருதுங்கள். என்னால் முடியும் என்ற மந்திரமே சாதனையின் திறவுகோல். ஒரு செயலை செய்யும் முன், "ஐயோ, அதெல்லாம் முடியாது" என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் சாதிக்க மாட்டார்கள், நம்மையும் சாதிக்க விடமாட்டார்கள்.

எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் நபர்களை, நண்பர்களாக கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வாக அணுகும் திறன் நமக்கு உண்டாகும்.

* இலக்கை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் சிந்தனையை இலக்கை, நோக்கியே செயல்படுத்துங்கள்.

* இலக்கு நிறைவேறுவதை, கற்பனையில் பாருங்கள்.

* நாம் செய்வது, உறுதியாக நடக்கும் என நம்புங்கள்.

* எந்த விஷயத்தையோ, பிரச்னையையோ, சிறப்பாக கையாளுங்கள்.

* பேசும் முன், பின் விளைவுகளை யோசியுங்கள்.

* நான் பெரியவன், தான் சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* சில நேரங்களில் சங்கடமான சூழ்நிலைகள் நேரும் என்பதை உணருங்கள்.

* நான் சொல்வது தான் சரி, செய்வதுதான் சரி என பிறரிடம் வாதிடாதீர்கள்.

* கேள்விப்படும் செய்திகளை, அப்படியே நம்பி விடாதீர்கள்.

* பிறருக்கு மரியாதை கொடுத்து, இதமான சொற்களை பயன்படுத்துங்கள்.

* பேச்சிலும் நடத்தையிலும், அடக்கத்தை பயன்படுத்துங்கள்.

* பிரச்னை ஏற்படும் போது, மற்றவர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்காமல், நீங்களே முதலில் பேசுங்கள்.

இந்த பதிவு தினமலர் இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.

No comments: