கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்… இனி விஜய் குரல் கொடுப்பார்… திரிஷா கொடுப்பார்… நயன்தாரா கொடுப்பார்,,,, நமீதா கொடுப்பார்.
காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே, எங்கே போனது உங்கள் குரல்?
அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே, எங்கே போனது உங்கள் குரல்?
முல்லை பெரியாரில் மூச்சுமுட்டித் தவித்தோமே,
எங்கே போனது உங்கள் குரல்?
பல தடுப்பணைகளைக் கட்டிப் பாலாற்றைக் காயவைத்தானே, அப்போது எங்கே போனது உங்கள் குரல்?
“என்னை வாழவைத்த தமிழக மக்கள்”
என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது திரு ரஜினி அவர்களே, உங்களை
வாழவைத்த இந்த மக்கள் இன்று நீரில்லாமல் சாகிறார்களே, வயலெல்லாம்
காய்கிறதே, ஒரு வார்த்தையாவது காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று கேட்கும்
துணிவு உங்களுக்கு உள்ளதா?
தமிழ்நாட்டில் இதுவரை விவசாயம்
பொய்த்துபோனதால் 10ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
கர்நாடகாவிடம் தண்ணீரைத் தாருங்கள் என்று எந்த நடிகரிடமிருந்து ஒரு குரலும்
வரவில்லை.
சேவை வரிக்கு எதிராக மட்டும் குரலிருக்கு, எங்கள் விவசாயிக்கு ஆதரவாக எங்கே உங்கள் குரல்?
காவிரிப் பிரச்சனை வந்தால் கர்நாடக நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்,
முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள், ஆனால், தமிழ்நாடு நடிகர்கள் மட்டும் வாயே திறப்பதில்லை,ஏன்?
படத்தில் மட்டும் தங்கச்சி, அம்மா
செண்டிமென்ட் மக்களை ஓடி ஓடிக் காப்பாத்தறது, இங்கே தண்ணீர் இல்லாமல்
செத்தால்கூட எந்த நடிகனும் வாயைத் திறப்பதில்லை.
தமிழன் மட்டும் இவர்களை வாழவைக்கவேண்டும், ஆனால் இவர்கள் குரல் கூட கொடுக்கமாட்டார்கள்.
கமலுக்கு வந்தால் மட்டும் இரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
நன்றி- தமிழச்சி.
No comments:
Post a Comment