இன்று நாம் பெரிதும் பயன்படுத்தும் FaceBook/Wordpress போன்ற தளங்கள் PHP எனும் கணினி மொழியால் எழுதப்பட்டவைகள்.
உங்களுக்கு PHP தெரிந்திருந்தால், உங்களால்
ஒரு Youtube போன்ற தளத்தை சொந்தமாக நிறுவ இயலும்.. உங்களால் அடுத்த புதிய
முகநூலைக் கூட வடிவமைக்க முடியும்.
யாரால் PHP படிக்க இயலும்?
உங்களுக்கு C மற்றும் HTML தெரிந்திருந்தால் PHP படிப்பது மிகவும் எளிது.
நான் ஒரு கல்லூரி மாணாக்கன்., எனக்கு இது தேவையா?
ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடம் தோறும்
தேர்ச்சி பெற்று Fresher ஆக வேலை தேடிக்கிளம்புகிறார்கள். ஒரு வேலை
நீங்கள் PHP கற்று, ஒரு சிறிய OpenSource Package நிரலாக்கம்
செய்திருந்தால், நீங்கள் ஒரு அனுபவமிக்கவர் (Expereinced Candidate) என
அறியப்படுவீர்கள்.
எனது கல்லூரிப் பருவத்தில் தான் நானும் PHP படித்தேன். அது என்னை campus interview இல் தேர்ச்சி பெற உதவியது.. இது என் சுய அனுபவம்.
சுய வேலைவாய்ப்பு?
PHP படிப்பதால் உங்களால் சுயமாக ஒரு தணியாள் (Freelancer) அல்லது நிறுவனமாக முன்னேற முடியும்.
வேலை வாய்ப்பு ?
ஆர்வமுடன் கற்க்கும் அனைவருக்கும் கண்டிப்பாக வேலை வாய்ப்பு உள்ளது.
இந்த பதிவு செல்வா ஓர் உலகம் எனும் வலை பக்கத்தில் இருந்து பகிரப்படுகிறது .
No comments:
Post a Comment