Blogger Widgets

Total Page visits

Friday, May 31, 2013

மாணவர்களே தேர்வு நேரத்தில்.....

மாணவர்களே பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை.....

மாணவர்களே தேர்வு நேரத்தில் மற்ற மாணவருடன் உன்னை ஒப்பிட்டுக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்று நீனைக்காதீர்கள், அதனால் உன் திறமையை முழுமையாக செலுத்தி உன்னால் படிக்க முடியாது. அவன் நன்றாக படித்திருக்கிறானே நாம் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

மேலும் தேர்வு சமயத்தில் நாம் தான் படித்து விட்டோமே, ரிலக்ஸாக இருக்கலாம் என்று நினைத்து, டிவி, செல்போன், சினிமா போன்றவற்றில் ஆர்வம் செலுத்தாதீர். அவை எல்லாம் நீ படித்ததைக் கெடுத்துவிடும்.

உன்னைவிட நன்கு படிப்பவர்களிடமிருந்து ஊக்கத்தைப் பெறு. அவர்கள் எவ்வாறு நன்கு படிக்கிறார்கள் என்பதைக் கற்றுக் கொள். உன் படிக்கும் திறன் மற்றும் உன் நினைவாற்றலைக் கெடுக்கும் யாரிடடும், எதனிடமும் தொடர்பு கொள்ளாதே.

தேர்வு நேரத்தில் திடீரென சில டென்ஷன்கள் வருவதுண்டு.... தேர்வில் நாம் படித்தது, வருமோ, வராதோ என்ற பயம், பயத்தால் தூக்கமின்மை, அதனால் சோர்வு, படிக்கும் போது அதை நினைத்து டென்ஷன், மற்ற மாணவர்களுடன் பகிரும் போது, அது தவறு இது தவறு என்று உன் ஆர்வத்தை சிதற செய்தல் போன்ற தடையூறுகள் உண்டாகலாம்.

மாணவர்களே எத்தனை தடையூறுகள் வந்தாலும் உன் மனதின் வலிமையும், புத்திக் கூர்மையும் அளவற்றது. உன் முழு திறமையில் ஒரு பங்கு இருந்தாலே போதும், உன்னால் நல்ல தேர்வை எழுத முடியும். தன்னம்பிக்கையோடும், தெளிவான மனதோடும் வரவிருக்கும் தேர்வைத் தைரியமாக எதிர்கொள்.....வெற்றி உனக்கே.

இந்த தகவல் தினமணி  இணையத்தளத்தில் இருந்து பகிரப்படுகிறது.  

No comments: