Blogger Widgets

Total Page visits

Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Thursday, September 19, 2013

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்த.

ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கம்பயூட்டர், லேப்டாப்களில் பயன்படுத்த பயன்படுகிறது இந்த மொன்பொருள். இந்த மென்பொருள் windows, mac இயங்குதளங்களில் இயங்கக்கூடிய கட்டமைப்பை பெற்றுள்ளது.


இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் வைத்துக்கொண்டால், ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தக்கூடிய கேம்ஸ், மெசேஜிங் அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களையும் கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியும்.

உதராணமாக ஆண்ட்ராய்ட் போன்களில் எத்தனையோ புத்தம் புதிய கேம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்ட் மென்பொருள் இயங்கூடிய சாதனங்களில் அவற்றை விளையாடி மகிழ்வோம். அந்த கேம்களையே கம்ப்யூட்டரில் விளையாட நினைப்போம். அவ்வாறு விளைவாடுவதற்கு நேரடியாக ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் கம்ப்யூட்டரில் நிறுவ முடியாது.


கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை நிறுவம் பயன்படும் ஒரு முக்கியமான மென்பொருள்தான் இந்த Blue Stacks. இந்த மென்பொருளைப் போல வேறு சில மென்பொருள்களும் இருக்கின்றன. என்றாலும் இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானதும், இலவசமானதுமாகும்..



ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை bluestacks மென்பொருள் மூலம் பயன்படுத்துவது எப்படி?

முதலில் புளூஸ்டாக் மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்களுடைய கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

அடுத்து உங்களுக்குத் தேவையான ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்யப்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவ, புளூஸ்டாக் மென்பொருளைத் திறந்து அதில் உள்ள search box -ல் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பெயரைக் கொடுத்து சர்ச் செய்ய வேண்டும்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனின் சரியான பெயரை கொடுத்து தேடினால் அந்த அப்ளிகேஷன் புளூஸ்டாக் மென்பொருளில் காட்டும். காட்டுகிற அந்த ஆண்ட்ராய் அப்ளிகேஷன் மீது கிளிக் செய்தால் தானாகவே அந்த அப்ளிகேஷன் ரன் ஆகத்தொடங்கிவிடும்.

அல்லது நீங்கள் தரவிறக்கம் செய்த ஆண்ட்ராய்ட் மென்பொருளின் மீது ரைட் கிளிக் செய்து ஓப்பன் வித் ப்ளூஸ்டாக் என்பதைத் தேர்ந்தெடுக்க அந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இன்ஸ்டால் ஆகிவிடும்.

Wednesday, March 13, 2013

முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ?

உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா ?? அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா ?? உங்கள் கோப்புகள் அனைத்தையும் பத்திரமாக ஓர் இடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டுமா ?? அப்படியாயின் தொடர்ந்து படியுங்கள் . 

JustClod என்னும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள அணைத்து கோப்புகளையும் மிகவும் பாதுகாப்பாக இணையத்தில் சேர்த்து வைக்க உதவுகிறது.

ஒரு முறை சேமித்து விட்டால் நீங்கள் பாத்து வருடம் கழித்து திரும்ப பார்க்கும் பொது கூட அதனை கோப்புகளும் மிகவும் பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் .அது மட்டும் அல்ல உங்கள் கைபேசி மூலம் எங்கு இருந்தும் உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் , பகிர்ந்துகொள்ளலாம் .சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது உங்கள் இணையக்கணினி போன்றது .

இதன் சிறப்புகள்
  • இலவசமாக அனைத்துக் கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளும் வசதி 
  • ஐ போன் , ஆண்டரோய்ட் , விண்டோஸ் போன்ற அணைத்து கைபேசி மூலமும்  உங்கள் கோப்புகளை பார்வையிடலாம் .
  • மிக இலகுவாக உபயோகிக்கும் வசதி .

இதனை எப்படி உபயோகிப்பது என்பதை பார்வையிடலாம்

முதலில் இந்த இணையத்திற்குச் செல்லவும்
உங்கள் பயனர் பெயர் , மின்அஞ்சல் , கடவுச் சொல் போன்றவற்றை பதிவு செய்யவும் .

பின்பு கீழே இருப்பது போன்றும் பகுதியில் download  app என்னும் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் .
தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிய பின் கீழே உள்ளவாறு தோன்றும் விண்டோவில் உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்து உள் நுழையவும் .பின்பு உங்களுக்கு வேண்டுமான கோப்புகளை எளிதாக சேமித்துக் கொள்ளவும் .
 
 
 

Sunday, March 10, 2013

புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய



கணணியில் பயன்படுத்தப்படும் பல்லூடகக் கோப்புக்களை(Multimedia) இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட மென்பொருட்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அதற்கிணங்க தற்போது Mac Blu-ray Player எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது அப்பிளின் மக் இயங்குதளத்திலும், விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.

மேலும் மிகச்சிறந்த பயனர் இடைமுகத்தைக் கொண்ட இந்த மென்பொருளானது அதி உயர் துல்லியமான காட்சிகளை உருவாக்கவல்லது.
அத்துடன் movie, video, audio, music, photo போன்றனவற்றில் அடங்கும் அனைத்து வகையான கோப்புக்களையும் இயக்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
தரவிறக்க சுட்டி

கணிணியில் வெற்று போல்டர்களை எளிமையாக அழிக்க RED மென்பொருள்

பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணிணியில் பல வெற்று போல்டர்கள் (Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும். இவை கணிணியின் ஹார்ட் டிஸ்கில் பல இடங்களில் இருக்கலாம். கணிணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று போல்டர்கள் அழிக்காமலே விடப்படுகின்றன. சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.

கணிணியில் உள்ள வெற்று போல்டர்களைத் தேடவும் அதனை உடனடியாக அழிக்கவும் உதவுகின்ற ஒரு மென்பொருள் தான் RED (Remove Empty Directories). இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. இதனை நிறுவிய பின்னர் தேவையான டிரைவைத் தேர்ந்தெடுத்து Scan Drive என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் குறிப்பிட்ட டிரைவில் உள்ள வெற்று போல்டர்கள் எல்லாமே பட்டியலிடப்படும். Delete பட்டனைக் கொடுத்தால் அனைத்து போல்டர்களும் அழிந்துவிடும்.


அழிக்கப்படும் போல்டர்கள் Recycle bin க்கே செல்லும். அடுத்ததாக Empty Recycle bin  கொடுத்தால் கணிணியிலிருந்தே நீக்கப்படும். இதன் Settings பகுதியில் நேரடியாக நீக்குவது, Hidden Folder களைச் சோதித்தல், எந்த மாதிரி போல்டர்களை நீக்கக் கூடாது போன்ற அமைப்புகளைக் கையாள முடியும்.


இம்மென்பொருளின் ஒரே குறை என்னவென்றால் தேவைப்பட்ட போல்டர்களைத் தேர்வு செய்து அழிக்க முடியாது. எல்லா வெற்று போல்டர்களுமே ஒரே கிளிக்கில் அழிக்கப்படும். அதனால் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் டிரைவ் / சி டிரைவ் (C Drive) பகுதியைச் சோதிப்பதைத் தவிர்ப்பது நலம்.

Friday, March 1, 2013

எப்படி Torrentன் ஊடாக ஒரு Fileஐ Download செய்வது



Dear Friends



Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை web server  இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.

Seeds, Leechers என்றால் என்ன ?

நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்

Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்

Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?

முதலில் μTorrent  என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்

பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்

அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents  இல் Downloads என்ற folder  இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download  பண்ணி முடிக்க முடியும்.

Seeds கூடிய File களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொண்டு தேடினால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு விடை கிடைக்கும் இதில் உள்ள S என்பது Seeds ஐயும் L என்பது Leechers ஐயும் குறிக்கிறது நீங்கள் Seeds கூடியதைக் கண்டு பிடிப்பதற்கு S இன் மேல் Click பண்ணினால் Seeds  கூடியது முதலாவதாகவும் Seeds குறைந்தது படிப்படியாக குறைந்து செல்லும் (Descending Order) ஒழுங்கில் அடுக்கப்படும். இதிலிருந்து Seeds கூடியயதைக் கண்டு பிடிக்கலாம்

சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments  ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.