சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தொழில் நிர்வாகவியல் துறைத் தலைவர் தி.பார்வதிநாதன்.
மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் பெற்றோரும், மாணவர்களும் பின்பற்ற வேண்டியவை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்:
பெற்றோரின் கவனத்திற்கு:
- குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை கல்லூரியில் உங்கள் பிள்ளை படிக்கும்
பாடத்தின் துறைத் தலைவரைச் சந்தித்து உங்கள் பிள்ளையின் வருகைப்பதிவு,
கல்வி, ஒழுக்கம் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இந்த முறையினைப்
பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் நினைப்பது நிறைவேறும். தந்தை நேரில்
வரமுடியவில்லையெனில், தாய் அவசியம் வந்து விபரங்கள் கேட்டுத் தெரிந்துக்
கொள்ள வேண்டும்.
- பஸ்சிலோ, ரயிலிலோ உங்கள் பிள்ளை கல்லூரிக்கு படிக்க சென்றால், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
- விடுதியிலோ, தனி அறையிலோ தங்கிப் படித்தால் மாதம் ஒருமுறை நேரில் வந்து கண்காணிக்க வேண்டும்.
- தந்தை வெளிநாட்டில் இருந்தால் தாய் நேரில் வந்து விபரங்களை
தெரிந்துக் கொள்ள தயங்கலாம். அவ்வாறு தயங்குபவர்கள் கல்லூரி
முதல்வருக்கோ, துறைத் தலைவருக்கோ கடிதம் எழுதி தெரிந்துக் கொள்ளலாம்.
- கல்லூரிக் கட்டணம், படிப்புச் செலவுகளுக்கான கட்டணத்திற்கு பணம்
கொடுக்கும் அதற்கான ரசீதை பிள்ளைகளிடமிருந்து கேட்டு வாங்குங்கள்.
ரசீதுகள் அனைத்தும் படிப்பு முடியும்வரை பாதுகாக்கப்பட வேண்டும். தனியாக
ஒரு நோட்டுப் புத்தகத்தில் ரசீது எண், தேதி முதலிய விபரங்களை குறித்து
வைப்பது நல்லது.
- அன்பு காரணமாக தேவைக்கு அதிகமாக பிள்ளைகளுக்கு பணம்
கொடுக்காதீர். படிப்பு செலவுக்கென திடீரென்று பணம் கேட்டால் விசாரித்து
கொடுக்கவும்.
- கல்லூரியில் போன் வசதி இருப்பதால், பிள்ளைகளுக்கு மொபைல் போன்
வாங்கி தர வேண்டாம். ஒரு வேளை வாங்கி கொடுத்தால் கல்லூரிக்கு எடுத்துச்
செல்ல அனுமதிக்காதீர். காரணம் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும்.
- கல்லூரிக்கு செல்ல டூவீலருக்கு பதில் சைக்கிள் வாங்கி கொடுங்கள்.
- ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
- அரசு கல்வி உதவித்தொகை பெற ஜாதி சான்றிதழ், வருகைப்பதிவு
சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை முக்கியம்.
இவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்.
- நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களிலும் பிள்ளைகளை ஈடுபட
செய்யுங்கள்.உதாரணமாக வங்கியில் பணம் போடுதல், எடுத்தல், போஸ்ட் ஆபீஸ்
பணிகள், ரயில் முன்பதிவு செய்ய அழைத்துச் செல்லுங்கள்.
- நூலகத்திற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் உலக நடப்புகள் குறித்து பொது அறிவு வளரும்.
- பிள்ளைகளிடம் பழகும் நண்பர்களின் பின்னணி குறித்து தெரிந்துக்
கொள்ளுங்கள். காரணம் அவர்களின் செயல்பாடுகளே உங்கள் பிள்ளைகளிடம்
வெளிப்படும்.
- கம்ப்யூட்டர் அறிவு முக்கியம். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.
- தினமும் மாலையில் 2 மணி நேரம் விளையாட்டு, தேகப் பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள்.
- ஓராண்டிற்குரிய கல்லூரி வேலை நாட்கள் 180 நாட்கள். ஒரு செமஸ்டருக்கு 90 நாட்கள். மீதியுள்ள 185 விடுமுறை நாட்களில் நீங்கள் செய்துவரும் தொழில் அல்லது பயன்தரத்தக்க தொழில் மற்றும் கூடுதல் கல்விப் பயிற்சிகளில் உங்கள் பிள்ளையை ஆரம்பம் முதலே ஈடுபடச் செய்யுங்கள்.
மாணவர்களின் கவனத்திற்கு:
- நீங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பினை விருப்பத்துடனும் அதிக
ஆர்வத்துடனும் படியுங்கள். விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால், கிடைத்த
பாடங்களில் திறமைகளை வெளிப்படுத்துங்கள்.
- ஒரு நல்ல ஆங்கிலம் - தமிழ் அகராதியினை கல்லூரியில் சேர்ந்த 10
நாட்களில் வாங்கி விடுங்கள். அதை தினமும் பயன்படுத்துவதன் மூலம் உங்கள்
கல்வி மேம்படும்.
- கல்லூரிக்கு சைக்கிள், டூவீலரில் வரும்போது கவனமாக வரவேண்டும்.
அடுத்தவருடன் பேசிக்கொண்டோ, மொபைல் போனில் பேசிக் கொண்டோ ஓட்டுவது
தவறு.
- பஸ் படிக்கட்டு பயணம் கூடாது.
- ஒழுக்கமான கல்வியே வாழ்க்கை உயர வழிவகுக்கும்.
- ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். முதல் 3 மாதங்கள்
முயற்சியும், பயிற்சியும் எடுத்தால் எளிதில் பேசலாம். தினமும் ஒர
மணிநேரமாவது இதற்கு ஒதுக்குங்கள்.
- நூலகங்களில் நல்ல நூல்களை தேர்வு செய்து படியுங்கள்.
- தமிழ், ஆங்கில மொழிகளோடு அன்னிய மொழிகளையும் முடிந்தால் கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அந்த இலவச கையேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் தினமலர் வலை பக்கத்தில் இருந்து பக்கிரப்படுகிறது.
No comments:
Post a Comment