Blogger Widgets

Total Page visits

Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Monday, October 27, 2014

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்!


எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது , ஏனெனில் அவர்கள் வியாபாரிகள் , அவர்கள் , மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும் ,மேலோட்டமாய்  அரிப்பெடுக்க வைக்கவும் , அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள் , அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும் , ஆழ்ந்த சிந்தனையும்  ,தெளிந்த படைப்புகளையும்  எதிர்பார்ப்பது "சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட  போய் ,கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி " அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல் , நகை , நட்டு , துப்பல் , தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் .

முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு  இருக்கிறது  ? ஒரு விஷயத்தை பொத்தாம்பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா , அல்லது ஆழமாய் ,அகலமாய் , புத்தகங்கள் , இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா ? நம்மின் அறிவுக்  குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும் , அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும் , அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை ? இப்படி சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது , திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி  அவர்கள் கல்லா கட்ட முடிகிறது . ஒரே ஒரு ஹீரோ இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது ! மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம்  நீங்கள் அல்ல ,அதற்கான தீர்வும்  உங்களிடம் இல்லை  என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும் , வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க , கை தட்டித் , தட்டிக் , காசுக்கு வசனம் பேசுற  எல்லாத்தையும் தலைவனா ,  வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு , இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு  கண்ல ஏக்கத்தோட திரியறீங்க !சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத்துறையிலிருந்தும் , மற்ற எந்தத்  துறையிலிருந்தும் வரலாம் , வரவேண்டும் . ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள்  அல்ல,

சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம் : தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது , தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல் , விளைநிலங்களை விற்றுக்  கட்டிடக் கூலியாய் பெருநகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான் . யார் காரணம் ? கார்ப்பரேட்களா , கொக்காகோலாவா ,பெப்சியா ? அல்லது எல்லையே இல்லாமல் , குடிக்க , கட்ட , விவசாயம் செய்ய ,தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக்கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா  . நம் நதி ,நீர்நிலைகளை மாசுபடுத்த , ஏரிகளைத் தூரத்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப்புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா ? நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் , ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக்கடியிலயும் , வயக்காட்டுக்கடியிலயும்  ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா ! ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் , அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைதட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு , 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும் , மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ , இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு , பீட்சா சாப்டுட்டு , டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப்பணியாற்றிட்டு , உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும் .

சரி விஷயத்துக்கு வருவோம் !தமிழகத்தின் நீர்த்தேவைகள் எங்கு , எப்படிப் பூர்த்தியாகிறது ?மழை எது ? நதி எது ? குளம் எது?அணை எது?  கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன ?


தமிழ்நாட்டில்   3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின்  போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும்  ,வட கிழக்குப் பருவமழையின்  போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை)   அதிகபட்ச மழையையும் ,(ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது .சாதாரண சூழ்நிலைகளில்  945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .

தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சிலபல வற்றாத ஜீவநதிகளையும் (பாலாறு , செய்யாறு , பொன்னியாறு ,காவேரி , மெய்யாறு , பவானி  , அமராவதி , வைகை , சிற்றாறு , தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல் , சுருளி ,குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது .
முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் , ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள் , அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும் , அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர் , இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடிமரம்மத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது . ஆறு குளம் கண்மாய்களைத்  தூர்வாற , மக்கள் காசுகேட்காமல் (free labour )வேலை செய்தனர் , இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான   திட்டம் இருந்தும் , நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக்கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்தபின்பும் , நிழலில் நின்றுகொண்டு , வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன் தானே நீ , தமிழா !

ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது . ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல , பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம், குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு , எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு , இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம் , குடிமக்களும் , உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம் . நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல , வெறும் தண்ணிதான் . எல்லாப் பயலும் , இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத்  தண்ணி ஊத்துனாத்  தெரியவா போகுதுன்னு , தண்ணி மட்டுந்தான்   ஊத்தியிருக்கானுங்க , ஒரு பயலும் பால் ஊத்தல . இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு , நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற ! மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும் , நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா  !

வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது , அதனால் தான் , அணைக்கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி , கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து , கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன் , இன்று இந்த நீர்நிலைகளை மாசுபடுத்தவும் , பிளாட் போடவும்  , ஆக்கிரமிப்புச் செய்வதும்  யார் தமிழா ? கொக்ககோலாவா ? இல்லை சக தமிழனா ? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து , விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே ? எப்படி , விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும் , விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும் தானே , அட இஸ்ரேலை விடு தமிழா ! இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா ? 1989இல் குடிகாரக் கிராமமாக , வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா ?பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில் , மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு , நீர்மேலாண்மைக்காக , 52 நீர்ச்சேமிப்புக் குளங்கள் , 2 பொசிவுக் குளங்கள் (percolation  tanks ) , 32 கல் வரப்புகள் (stone bunds ) , 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது , கோடிகள் தேவைப்படவில்லை தமிழா ,வெறும் தன்னார்வத் தொண்டும் , சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது . யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை , எதிரியை வெளியில் தேடவுமில்லை .பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள் .
1995 ல்  வருடாந்திர மழை  சுமார் 15 அங்குலம் மட்டுமே , தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா !  முதல் பருவமழைக்குப்  பின், நீர்ச் சேமிப்பால் , பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால் , கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை .
நீர் மேலாண்மை அவர்களைப்  பல பயிர்கள் அறுவடை  செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்தவெளிக்  கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன . இன்று, 15-40 அடியில்  தண்ணீர் தரும்  294 திறந்தவெளிக்  கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது .
1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக  இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ , தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது . இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும் , உறுப்பினர்களும் , இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள் .
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி : தெஹெல்கா )

மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே , அதனால் தான் நம் அட்டைக்கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ள போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது , அடப் பதர்களா , கண் திறந்து பாருங்கள் , இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன , பாலைவன ராஜஸ்தானில் , தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட , மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி , மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை , ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி , கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து , தமிழனுக்கு , அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க .

அது எதுக்குப்பா தமிழா , அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த்தூக்கத்தக் கலைக்கல , ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது .

Balisana,Bhaonta ,Kolyala, Darewadi,Devgaon,Gandhigram,Guriaya, Jhabua, Mahudi,Mandalikpur ,  Mangarol, Melaghar, Moti morasal,Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur,Rozam,Sayagata , Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம் , பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா ,
ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு , உன்னிலிருந்து பிறந்த கலைக்கடவுள்கள் உன்ன மாதிரித் தான இருப்பாங்க தமிழா , அதுக்கெதுக்கு  ரத்தக் கொதிப்பும் பக்கவாதமும் ஒருசேர வந்த மாதிரிக் கோழை  வழியக்  , கொக்ககோலா விளம்பரத்துக்கு வந்த தம்பி இப்போ அதே கம்பெனிய எதுத்துப் பேசலாமான்னு , கேணத்தனமா ஒரு கேள்வியக் கேக்குற ? கேட்டு உனக்குப் புத்தி சுவாதீனமில்லன்னு நீயே வெளிக்காட்டிக்கிற !


சரி தமிழா , தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு , நான் கிளம்பறேன் , நம்ம கரைவேட்டி அண்ணன் ஜோக்குல வருமே அந்தத் தம்பி ! ஆங் !!! கோகுல் தம்பி அதுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ தமிழா ,இதெல்லாம் என்னன்னு , அட அதாம்பா நம்ம கூகுள் தம்பி ... 

1. Rooftop rainwater harvesting 

(ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில்  இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் .
இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் , நான்கு மாத காலத்தியத்  தேவைகளுக்குப் போதுமானது )

2. Storm water run-offs management using swales.

3. Creating More Permeable surfaces .

4. Ridge To Valley Approach .

5.Farm ponds

அப்புறம் தமிழா , இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன் , நமக்குத் தேவை வசனமா , விவேகமான்னு  இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே , அந்த சூடப் போட்டுக்க தமிழா ..


இதெல்லாம் போக , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத்  தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும் , ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification ,(இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது ) DSR (Direct Seeding of Rice ) முறை , Micro Irrigation , Crop rotation , Crop Diversification , Organic Farming , Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு , கழுத்து நரம்பு புடைக்காம , பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா !

முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை , நமக்குள்ளேயே தான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன , நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும் , பஞ்ச! டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை , திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து , தீர்வுகள் அறிந்து , அதைச் செயல்படுத்தி , நமக்கு நாமே உதவினால் ஒழிய , நமக்கு உய்வில்லை என்பதை உணர் ! அட்டைக்கத்திகளை நம்பி நேரம் , பணம் விரயமிடாமல் , உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர்தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு , மக்கள் தலைவர்கள் ,ஒவ்வொரு பஞ்சாயத்திலும் , மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள்  . அவற்றை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா !

முன்குறிப்பை வலியுறுத்தும் ஒரு சிறு பின்குறிப்பு : இந்தப் பதிவை படித்துவிட்டு , "நீ நடிகர் விஜய்க்கு எதிரானவனா ? முருகதாசிக்கு எதிரானவனா ? சினிமாக் கலைஞர்களுக்கு  எதிரியா என்று மொண்ணைக் கேள்விகள் கேட்போரின் , ட்ரோல் செய்ய முயற்சிக்கும் அறியாப்பதர்களின் ,  வால்கள் ஓட்ட நறுக்கப்படும் ,  உள்நாட்டு , பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ்விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல , அவர்களைவிட பெரிய குற்றவாளி , அடிப்படைப் புரிதலற்ற , அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு . தமிழகத்தின் தண்ணீர் தேவையைத் தீர்க்க,  விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும் , தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே  ஒரே உறுதியான வழி . "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை , நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால் தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும் . கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள் , நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி !

அலெக்ஸ் பால் மேனன் தனது வலைப்பதிவு பக்கத்தில் 'கத்தி' படத்தையொட்டிய அனுபவத்தை முன்வைத்து எழுதிய பதிவு இது. | முழுமையான பதிவுக்குhttp://alexmenon.blogspot.in/2014/10/blog-post.html

Saturday, October 4, 2014

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?

ஓர் ஆட்டோ வாசகம்: நீ வாழ பிறரைக் கெடுக்காதே. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிறது சதுரங்க வேட்டை வெற்றிகரமான 10- ம் நாள் போஸ்டர், ஏமாறாதே...ஏமாற்றாதே கேப்ஷனுடன். ஏமாற ஒருவன் தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை ஏமாற்றுவதில் தப்பில்லை என்பதை அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகொண்டிருக்கும் மக்களிடம் அதன் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சேர்க்கும் படம் பேசப்படுகிறது.  
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் இறுதியில் தர்மம் வெல்லும். இது நமக்கு வழங்கப்பட்ட பாலபாடம். தர்மம் வெல்லும் என்பதெல்லாம் போலீஸ் விஜயகாந்த் சுவரில் கால் வைத்து சுற்றி அடியாட்களை அடித்த காலம். இப்போது சூது கவ்வும். அவ்வளவுதான். 
 
நான் என்பது  சுயநலம். நாம் என்பதே பொதுநலம். நாலு பேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் சரிதான் என்று நாயகன் பேசிய வசனத்தை இன்று வேறொரு நாயகன் வேறு மாதிரிப் பேசுகிறான். தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை என்கிறான். இப்போது நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. அது போகோ சேனலின் சோட்டாபீம் வாழும் டோலக்பூர் நகரில் மட்டும் மிச்சமிருக்கிறது. கைதட்டி ரசிக்கும் குழந்தைகள் போகோ சேனல் மட்டும் பார்ப்பதில்லை, பிற சேனல்களையும் பார்க்கிறார்கள். உள்ளங்கையில் உலகம் வைத்து நடைபோடும் இன்றைய தலைமுறை எதை கற்றுக்கொள்கிறது. 
 
உருவாக்கத்தில் மிரட்டல், திரைக்கதை அட்டகாசம் எல்லாம் ஓ.கே. தமிழ் சினிமா தன் அடுத்த கட்டத்தை அடைகிறது என்ற உற்சாக தோள் தட்டலுடன் பல விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அளவில் பேசப்படும் படைப்புகள் தரும் இயக்குநர்கள் தங்கள் படைப்புகள் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள். ' நாங்கள் ஒன்றும் உலகில் நடக்காத ஒன்றை சொல்லவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் ப்ரச்னைகளைத்தான் பேசுகிறோம்' என்னும் இயக்குநர்களே...எல்லாம் சரிதான். ஆனால் நாம் தவறான உலகில் வாழ்கிறோம் என்பதான பிம்பத்தை உங்கள் படங்கள் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது என்பதை உணர்கிறீகளா? 
 
 
நான் ஒருவன் மிகச்சரியாய் இருப்பதால் இந்த உலகம் சுபிட்சமடையப் போவதில்லை, எனவே நான் நன்றாக இருக்க தவறுகள் புரிகிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்னும் 'நான்' படத்தின் கதாநாயகன் நமக்கு சொல்வது என்ன? கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். இந்த உலகத்தினை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்பதைத்தானே. 
 
கேமரா. இசை, நடிப்பு, வசனம். திரைக்கதை என்று எல்லா இடங்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டிய ஆரண்ய காண்டமும் கடைசியில் எது தேவையோ அதுவே தர்மம் என்று பல கொலைகளுடன் மனிதர்களின் துரோகத்தினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. நாம் கற்பனை செய்ய முடியாத உலகுக்குள் நம்மைக் கொண்டு சென்று பயமுறுத்தி ரசிக்க வைத்த பீட்ஸாவும் இறுதியில் இதுவே சொல்கிறது.
 
 
 
சினிமா பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை...அதுபோல் சினிமா பார்த்து யாரும் திருந்தவும் போவதில்லை என்றெல்லாம் மொட்டை சமாதானம் சொல்லி விலக முடியாது இயக்குநர்களே... நூறாவது நாள் படம் பார்த்துதான் நான் 9 கொலைகளையும் செய்தேன் என்ற ஜெயப்ரகாஷ் நம்மில் ஒருவனாய் வாழ்ந்து வந்தவன்தான். 'நான் ஏமாறவில்லை. அவன் என்னை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் தந்தேன்.' என்பதெல்லாம் ரசிக்க நன்றாக இருக்கும். நிஜமாய் ஏமாந்தவனின் துயரத்தினை ஒருபோதும் ஆற்றாது. கெட்டவன் இறுதியில் அழிவான். நல்லவன் வாழ்வான் என்ற ஒன்லைன் ஸ்டோரிக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கடைசியில் கருத்து சொல்லும் ஷங்கர் போன்றவர்கள். சொல்லிவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?
 
- கணேசகுமாரன்.    
-நன்றி சினிமா விகடன் 

Sunday, November 3, 2013

ஆரம்பம் விமர்சனம்

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படும் பேராசையால்தான் இந்தியாவில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. மேற்படி இவர்களது உதவிகள் இல்லாமல் தீவிரவாதிகள் இங்கு திடுக்கிடும் சம்பவங்கள் நடத்த முடியாது... எனும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன் திரைப்ப(பா)டம் தான் அல்டிமேட்ஸ்டார் அஜீத்தின் ''ஆரம்பம்''!

எம்.எஸ்ஸி., கோல்டு மெடலிஸ்ட் ஆர்யா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மீடியாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உடன் படிக்கும் டாப்ஸியை ஒருதலையாக காதலிக்கிறார். படிப்பு முடிந்ததும் டி.வி. நிருபர், தொகுப்பாளினி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... டாப்ஸி மீது லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ் ஆர்யாவுக்கு. சென்னையில் படிப்பு முடித்து மும்பைக்கு வேலைக்கு போகும் ஆர்யா, அங்கு உடன் படித்த நயன்தாரா, டாப்ஸியால், அல்டிமேட் அஜீத்தின் நட்பை பெறுகிறார். ஆர்யாவின் நட்பை தப்பாக்கி அவர் கையாலேயே பிரபல டி.வி. சேனல் ஒன்றை செயலிழக்க செய்யும் அஜீத், அடுத்து ஆர்யாவின் கணிப்பொறி திறமை மூலம் சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது காசுக்கும் குறி வைக்கிறார். கூடவே போலீஸிலும், அரசியலில் பெரும் பதவியிலும் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பாடுகளுக்கு கட்டம் கட்டுகிறார். இது ஏன்.? எதற்கு..? என்று நம்மை மாதிரியே புரியாமல், ஒரு கட்டத்தில் அஜீத்-நயன்தாரா கோஷ்டியை போலீஸில் மாட்டிவிடும் ஆர்யா-டாப்ஸி ஜோடி அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வருந்துகின்றனர்.

காரணம், அஜீத் ராணா(த்ரிஷாவின் காதலரே தான் இதில் அஜீத்தின் நண்பராக கெஸ்ட் ரோலில் கொஞ்சநேரம் வருகிறார்...) இருவரும் வெடிகுண்டை செயலழிக்க செய்யும் மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள். உயிர் நண்பர்களான இவருவரும், ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்கின்றனர். மயிர்கூச்செரிய செய்யும் அந்நிகழ்வில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிநாட்டினரை இருவரும் உயிர் சேதம் இல்லாமல் காபந்து செய்தாலும், ஒரு தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு அஜீத் கண் எதிரேயே ராணா உயிர் துறக்கிறார். அவரது உயிரிழப்புக்கு காரணம் தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுகள் மட்டுமல்ல..., அவர் அணிந்திருந்த தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டும் தான் என கண்டு அதிரும் அஜீத், அந்நிகழ்வால் தனது உயர் அதிகாரிகள் தொடங்கி, மத்திய உள்துறை அமைச்சர் வரை பகைத்து கொள்கிறார். அதனால் தன் நண்பனின் உயிரை இழந்து, தன் உயிரை துச்சமென மதித்து இந்திய கெளரவத்தை காப்பாற்றிய அஜீத்துக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு பதவியும் பறிக்கப்படுகிறது. அதில் வெகுண்டெழும் அஜீத், ராணா குடும்பத்தில் எஞ்சிய நயன்தாரா மற்றும் நியாயமான போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் உள்ளிட்ட வில்லன் கோஷ்டியை எப்படி பழிதீர்க்கிறார்? ஆர்யா - டாப்ஸியின் காதல் என்னவாயிற்று? நயன்-அஜீத்தின் உறவு என்ன? சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணத்தை அஜீத்-ஆர்யா என்ன செய்தனர்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ''ஆரம்பம்'' படத்தின் பிரமாண்டமான மீதிக்கதை!

'அல்டிமேட் ஸ்டார்' அஜீத், ஏ.கே.எனும் அசோக்காக வழக்கம் போலவே தனக்கு ஈடு இணை யாரும் இல்லை எனும் அளவில் முதல் பாதியில் பொல்லாதவராகவும், இரண்டாம் பாதியில் போலீஸாகவும் பொளந்து கட்டியிருக்கிறார். பலபேரை ஏமாற்றி அவங்க இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணம் எனும் சுவிஸ் வங்கி கருப்பு பணத்திற்கு அவர் கொடுக்கும் 'பன்ச்' டயலாக்கில் தொடங்கி, க்ளைமாக்ஸில் ''சில சமயம் பழிவாங்கிதான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்...'' என பேசும் 'பன்ச்' டயலாக் வரை ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தத்தில் அதிர்கிறது. மற்ற ஹீரோக்கள் மாதிரி தான் மட்டுமே 'பன்ச்' டயலாக் பேசும்படி ஸ்கிரீன்பிளேவை இயக்குநர்களிடம் சொல்லி வடிவமைக்காமல் ஆர்யா, நயன்தாரா, அந்த ஊழல் அமைச்சர், அமைச்சரின் துபாய் அழகு பெண் உள்ளிட்ட எல்லோருக்கும் 'பன்ச்' டயலாக் வழங்கியிருக்கும் அஜீத்துக்கு ஒரு 'ஹேட்ஸ் ஆப்' சொல்லியே தீர வேண்டும்.

அஜீத் மாதிரியே அர்ஜூன் எனும் ஆர்யாவும் பொளந்து கட்டினாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை ஆர்யாவை வைத்து இயக்குநர் தீர்த்து கொண்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது! மாயா எனும் நயன்தாரா, அனிதா எனும் டாப்சி நாயகியரில் தொடங்கி 'ஆடுகளம்' நரேன், கிஷோர், கிருஷ்ணா என ஒவ்வொரு நட்சத்திரமும் பலே தேர்வு! பலே நடிப்பு!!

'ஆரம்பம்' படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் மூன்று இடங்களில் வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கும், அஜீத்துக்கும் என்ன சம்மந்தம்?, அதேமாதிரி போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.கே. அஜீத் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாதது எப்படி? உள்ளிட்ட சில பல வினாக்களுக்கும், படத்தின் ஆரம்ப காட்சிகளில் டாப்சியை கவர 'குண்டு' ஆர்யா, குறும்பு எனும் போர்வையில் செய்த கோமாளித்தனங்கள் கொஞ்சம் இருட்டடிக்கப்பட்டிருந்தது என்றால் ''ஆரம்பம்'' மேலும் அமர்க்களமாக இருந்திருக்கும். ஆனாலும் ஓம் பிரகாஷின் பிரமாண்டமான ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜாவின் பிரமாதமான இசை, விஷ்ணுவர்தனின் ஹாலிவுட் பட நிகர் ஆக்ஷ்ன் டைரக்ஷ்ன் எல்லாம் சேர்ந்து அஜீத்தின் ஆரம்பத்தை கோலாகலமாகவும், குதூகலமாகவும் ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், ஆக்ஷ்ன் படங்களில் ''ஆரம்பம்'' - ''அபாரம் - அபூர்வம்''!!

Sunday, October 27, 2013

ராஜா ராணி விமர்சனம்

‘மெளன ராகம்’ படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம்! மணிரத்னம், ‘ராஜா ராணி’ படத்தை பார்க்காமல் இருப்பது இப்படத்தின் இயக்குநர் அட்லீக்கும், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் நன்மை பயக்கும்.

காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

Thursday, October 24, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்‌’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா விமர்சனம்

ஹாலிவுட் படங்களை அப்பட்டமாய் காப்பியடித்துவிட்டு அப்படி ஒரு ஹாலிவுட் படம் வந்ததா.?! நான் பார்க்‌கவே இல்லையே... என உலகறிந்த உண்மையின் மேல், முழு போஸ்டர் ஒட்டி மூடிக்கொண்டுத் திரியும் நம்மூர் இயக்குநர்களுக்கு மத்தியில், நம்மூர் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் காதல் கதையை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘ரெளத்திரம்’ கோகுல்! அவருக்கு அதற்காக ஒரு ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லியே ஆக வேண்டும்! வித்தியாசம் என்றால் விஜய்சேதுபதியா? விஜய்சேதுபதி என்றால் வித்தியாசமா.?! என தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் தொடர்ந்து கேட்க வைத்து வரும் விஜய்சேதுபதி, இந்தப்படத்திலும் அதுமாதிரி ஒரு பெரும் முயற்சிக்காக, இயக்குநர் கோகுலின் பக்கபலமாக நின்று பக்கா படமாக ‘‘இதற்குத்தா‌னே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’’ படத்தை கொண்டு வந்திருப்பதற்காக விஜய்க்கும் ஒரு டஜன் ‘ஹேட்ஸ் ஆப்’ சொல்லலாம்! இனி கதைக்கு வருவோம்!

ஒரு குறைந்த வருவாய் பிரிவினருக்கான அரசு குடியிருப்பில் எதிர் எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியும், குமுதா எனும் ‘அட்டக்கத்தி’ நந்திதாவும். சின்னவயது முதலே தெரியும் என்பதால் சுமார் மூஞ்சி குமாருக்கு, குமுதா மீது லவ் என்றால் லவ் அப்படி ஒரு ஒன்சைடு லவ்! ஆனாலும் சுமார் மூஞ்சி விஜய்சேதுபதியின் குடியாத, விடியாத தருணங்களால், குமாரை பார்த்தாலே குமுதாவிற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. அதனால் தன் அப்பா பட்டிமன்றம் ராஜாவிடம் சொல்லி, அண்ணாச்சி பசுபதியிடம் பஞ்சாயத்திற்கு சுமார் மூஞ்சி குமாரை அனுப்பி வைக்கிறார் குமுதா. அங்கு தன் கலாட்டா காதலை ப்ளாஷ் பேக்காக சொல்லி செம மாத்து வாங்கும் விஜய் சேதுபதி, அந்த துக்கத்தை மறக்க ஆப் தேடி நட்ட நடுராத்திரியில் நண்பருடன் அலைகிறார்.

இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் மார்கெட்டிங் இளைஞர் பாலா எனும் அஸ்வினுக்கும், தனியார் நிறுவன ஹெச்.ஆர்., ரேணு எனும் ‘சுப்புரமணியபுரம்’ சுவாதிக்கும் காதல். அடிக்கடி செல்ல சண்டை போட்டுக் கொள்ளும் இருவரையும் சேரவிடாமல் தடுப்பது பாலா எனும் அஸ்வினின் குடிப்பழக்கம்! மார்கெட்டிங் ஹெட்டின் டார்ச்சர், காதலியின் டார்ச்சர் இந்த இரண்டாலுமே அடிக்கடி குடிக்கும் பாலா, ஒருநாள் குடிபோதையில் ஒரு கர்ப்பிணியின் மீது தன் வண்டியை ஏற்றிவிட, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவரது கணவரின் வருகைக்காக அஸ்வினும், அவரது காதலி சுவாதியும் காத்திருக்கின்றனர். அந்த கர்ப்பிணியின் கணவரும் ஒரு டாஸ்மாக்கில் மது அருந்தி கொண்டு இருக்கும்போது, அதே டாஸ்மாக்கில் சற்றுமுன் நடந்த ஒரு கொலைக்காக போலீஸ் விசாரணைக்கு போக, கர்ப்பிணி பிழைக்க வேண்டுமென்றால், ஒரு அரிய வகை இரத்தம் தேவை. அந்த வகை இரத்தம் சுமார் மூஞ்சி குமாருக்கு மட்டுமே அந்தப்பகுதியில் அப்போதைக்கு இருக்கிறது!

அப்புறம்.? அப்புறமென்ன? இரத்த வங்கி வழிகாட்டுதல் படி அந்த அரிய வகை இரத்தமுள்ள சுமார் மூஞ்சி குமார் - விஜய் சேதுபதியைத் தேடி அஸ்வினும், நண்பர்களும் அலைகின்றனர். விஜய்சேதுபதியோ, நண்பருடன் ஆப் சரக்கைத் ‌தேடி அலைகிறார். சுமார் மூஞ்சி குமார்-விஜய்சேதுபதியின் கையில் ஆப் கிடைப்பதற்கு முன், அஸ்வின்பாலா, அவரைத் தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து அடிபட்ட கர்ப்பிணிக்கு இரத்தம் வாங்கி கொடுத்தாரா? , கர்ப்பிணி உயிர் பிழைத்தாரா? இந்த நல்ல காரியத்தால் காதலி குமுதா, சுமார் மூஞ்சி குமாருக்கு கிடைத்தாளா? டாஸ்மாக் கொலையை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? கர்ப்பிணியின் கணவர் மீண்டாரா? அஸ்வின்-சுவாதி ஜோடி இணைந்ததா இல்லையா? என்பது உள்ளிட்ட இன்னும் பல சீரியஸ் கேள்விகளுக்கு காமெடியாக பதில் சொல்கிறது ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ திரைப்படம்!

விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி, பரோட்டா சூரி, வி.எஸ்.ராகவன், எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ‘பளிச்’ சென நடித்து பாலகுமாராவை தூக்கி நிறுத்துகிறது. அதிலும் விஜய் சேதுபதி இப்படி எல்லாம் நடிக்க எப்படி ஒப்புக் கொள்கிறார்? எனும் ஆச்சர்யத்தை தருகிறது அவரது பாத்திர படைப்பு! பரோட்டா சூரி, எம்.எஸ்.பாஸ்கர் மட்டுமல்ல... இயக்குநர் கோகுல் உள்ளிட்ட எல்லோருமே காமெடியாக படத்தில் நிறைய மெ‌ஸேஜ் சொல்லி இருக்கிறார்கள்!

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, சித்தார்த் விபினின் இசை, லியேர் ஜான்பாலின் படத்தொகுப்பு, கோகுல், கார்க்கியின் வசனங்கள், மதன்‌கார்க்கியின் பாடல்கள் எல்லாமே பாலகுமாரா படத்திற்கு பெரும்பலம்! குடி, குடி என குடியை காட்டி, குடிக்காதே எனும் மெஸேஜையும், இரத்த தானம் செய்யுங்கள் எனும் அட்வைஸையும் காமெடியாக, அதேநேரத்தில் கருத்தாழத்துடன் சொல்லியிருக்கும் விதத்தில் இப்படத்தை எழுதி இயக்கிய கோகுல் வெற்றி பெற்றிருக்கிறார்!

ஆகமொத்தத்தில், ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ - ‘‘ஏகப்பட்ட விருதுகளுக்கு ஆசைப்பட்டிருக்கிறது!’’

வணக்கம் சென்னை விமர்சனம்

கைவசம் நிறைய கதைகளை வைத்துக்கொண்டும், மனதில் இயக்குநர் ஆசையை வளர்த்துக் கொண்டும், நான் இயக்குநராக சம்மதித்தால் நீங்கள் கதாநாயகராக நடிக்க தடையேதுமில்லை... என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம், ‘‘ஒரு கல் ஒரு கண்ணாடி’’ ஆரம்பநேரத்தில் அவரது ஆத்துக்காரம்மா கிருத்திகா உதயநிதி சொல்லியிருப்பார் போலும், அதன் விளைவே, ‘‘வணக்கம் சென்னை!’’ ஆனாலும், ஆத்துக்காரம்மா இயக்கத்தில் உதயநிதிக்கு நடிக்கத் தயக்கம், அதனால் ‘மிர்ச்சி’ சிவாவை பிடித்து போட்டு, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை வளைத்துபோட்டு, தன் புருஷனையும் க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் இழுத்துபோட்டு துணிச்சலாக ‘‘வணக்கம் சென்னை’’ என்றிருக்கும் கிருத்திகா உதயநிதி, வரவேற்பிற்குரிய இயக்குநர்கள் பட்டியலிலும் இடம்பிடித்து விட்டிருக்கிறார் என்றால் மிகையல்ல!

கதைப்படி தேனி, பக்கத்து மிடில்கிளாஸ் கிராமத்து இளைஞர் ‘‘மிர்ச்சி’’ சிவா. சென்னையில் சாப்ட்வேர் உத்தியோகவாசியாகி சென்னைக்கு வருகிறார். அதற்கு ஒரு சில நாட்கள் பின்பு, லண்டனில் செட்டில் ஆன ஹைகிளாஸ் இந்தியர் நிழல்கள் ரவியின் ஒற்றை பெண் வாரிசு பிரியா ஆனந்த், தனது போட்டோகிராபி மோகத்தால் ஒரு ஆறு மாதகாலம் சென்னையில் தங்கி தமிழகத்தை விதவிதமாக போட்டோ எடுத்து, லண்டன் புகைப்பட போட்டியில் வெல்ல சென்னை வருகிறார். வந்த இடத்தில் இருவருக்கும் சந்தானத்தின் ஏமாற்று வேலையால் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் ஒரே வீட்டில் வசிக்க வேண்டிய சூழல்! ஆரம்பத்தில் மோதிக் கொள்ளும் இருவரும் அதன்பின் அவர்களை அறியாமலே காதலில் விழுகின்றனர். ஆனால், பிரியா ஆனந்துக்கோ லண்டனில் ஏற்கனவே ஒரு ஹைகிளாஸ் இளைஞருடன், பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கல்யாணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது! அந்த இளைஞரும் பிரியாவைத் தேடி சென்னை வருகிறார். தடை பல கடந்து சந்தானத்தின் உபத்திரத்தால் ஊருக்காக புருஷன்-பொண்டாட்டியான இவர்கள், உண்மையில் ஜோடி சேர்ந்தார்களா? இல்லையா..? அதற்கு உபத்திர சந்தானத்தின் உதவி என்ன? லண்டன் மாப்பிள்ளை ராகுல் ரவிந்தனின் நிலை என்ன? இதில் ரேணுகா, ஊர்வசி, சங்கீதா, ப்ளாக் பாண்டி, கிரேன் மனோகர் உள்ளிட்டோரின் ‌ரோல் என்ன என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், அதேநேரம் வியிறு குலுங்க வைக்கும் காமெடியாகவும் பதில் அளிக்கிறது ‘‘வணக்கம் சென்னை’’ படத்தின் மீதிக்கதை!

அஜய்யாக சிவா, அஞ்சலியாக பிரியா ஆனந்த் இருவரும் ‘மேட்பார் ஈச் அதர்’ எனும் அளவில் கனகச்சிதமாக பொருந்தி நடித்திருக்கின்றனர். ஆனாலும் பிரியா, புல் பாட்டிலில் பாதியளவு இருக்கும் விஸ்கியை ‘ரா’ வாக அடிப்பதெல்லாம் என்னதான் லண்டன் ரிட்டர்ன் என்றாலும் ரொம்பவே ஓவர்! ‘தில்லு முள்ளு’ ஹவுஸ் ஓனர் நாராயணனாக வரும் சந்தானத்தில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் வரும் உதயநிதி வரை ஒவ்வ‌ொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘‘வணக்கம் சென்னை’’யின் பெரிய ப்ளஸ்!

அனிருத்தின் இ‌ளமை துள்ளும் (வரிகள் புரியவில்லை என்றாலும்...) இசை, ரிச்சர்ட் எம்.நாதனின் ஓவிய ஒளிப்பதிவு, செல்வகுமாரின் கலைநயமிக்க (குறிப்பாக பாடல் காட்சிகளில்...) கலை இயக்கம் உள்ளிட்ட மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், எஸ்.திவ்யநாதனின் வசனம் மற்றும் இணை இயக்கமும் பக்க(கா) பலமாக இருந்து நம்பமுடியாத ஒரு கதையை, நம்புபடியான ஓர் திரைக்கதையாக்கி இயக்க கிருத்திகா உதயநிதிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்பதோடு, அவரை நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்கள் வரிசையிலும் தூக்கி நிறுத்தியிருக்கின்றன!

ஆக மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் ‘‘வணக்கம் சென்னை’’ - ‘‘ஒரு முறை பார்க்கலாம்ணே!’’

ரகளபுரம் விமர்சனம்

கருணாஸ், காமெடி போலீசாக ‘கடி‘, ஓ... சாரி, நடித்திருக்கும் திரைப்படம்!

அப்பா இறந்ததால் அவர் பார்த்த போலீஸ் வேலை கருணாஸுக்கு கிடைக்கிறது. கூடவே அப்பா வாங்கி வைத்து போன கடன்களும், தங்கைகளின் கல்யாண செலவுகளும் கூட காத்திருக்கின்றது. இதனால் போலீஸ் யூனிபார்மில் புலம்பியபடி திரியும் பயந்தாங்கொள்ளி கருணாஸுக்கு அதிர்ஷ்ட தேவதையின் அருள்பார்வை கிட்ட, அதன்மூலம் பிற போலீஸ் செய்த சாகசங்களுக்கெல்லாம் இவர்தான் காரணம்... என கொண்டாடப்படுகிறார். கூடவே, சம்பளமும் உயருகிறது! சந்தோஷமும் நிறைகிறது! அதே நேரம், குடிகார போலீஸ் டிரைவர் டெல்லிகணேஷின் தில்லுமுல்லால் கருணாஸுக்கு கேன்சர் இருப்பதாக அவருக்கே தெரியவர, அது முதல் நிஜமாகவே ஏதாவது சாதிக்க வேண்டும் என்னும் ஆசையில் களம் இறங்கும் கருணாஸ்., ரவுடிகளை ஒழித்து, ராஜ்ஜியத்தை நிலைநாட்டினாரா? அல்லது ரவுடிகளால் ஒழித்துக் கட்டப்பட்டாரா...?! என்பது க்ளைமாக்ஸ்! கூடவே கருணாஸுக்கு, தனக்கு கேன்சர் இல்லை என்னும் உண்மை தெரிந்ததா? கேன்சருக்காக காதலி அங்கனா ராயை சுற்றலில் விட்ட கருணாஸ், அவரை மீண்டும் கட்டித்தழுவினாரா? கரம் பிடித்தாரா? என்பது சிரி்ப்பு என்னும் பெயரில் சீரியசாக படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!

கருணாஸ், அங்கனாராய், கோவை சரளா, பவன், சஞ்சனாசிங், எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மநாபன் என ஒரு டஜன் நட்சத்திரங்கள் சீரியசாக நம்மை சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரித்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்களின் முகத்தில் சிரிப்புக்கு பதில் கடுப்பு மிஞ்சுவதுதான் பலவீனம்!

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுடுகாட்டு கானா சூப்பர்ப்! ஆர்‌.வேல்ராஜின் ஒளிப்பதிவு பெரிய ப்ளஸ்! ஆயிரமிருந்தும் வசதிகள் இருந்தும் மனோகரின் இயக்கத்தில் ரகளபுரம் - ரவுசுபுரம்! ரசிகர்புரமா..?!

சித்திரையில் நிலாச்சோறு விமர்சனம்

மனநிலை சரியில்லாத தாய்க்கு பிறக்கும் அழகு குழந்தை. அந்த குட்டி தேவதையை அரவணைக்கும் பணக்கார இளைஞன். அவனுக்கு துணையாகவும்,அந்த தேவதைக்கு தாயாகவும் மாறத்துடிக்கும் இளம்பெண்... ‘இவர்கள் அனைவரையும் இசைஞானி நிச்சயம் கரைசேர்த்து விடுவார்’ என்ற நம்பிக்கையில் ‘சித்திரையில் நிலாச்சோறு’ படைத்திருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன். நம்பிக்கை ஓரளவு வீண்போகவில்லை!

‘கதைக்காகவும்‌, காட்சி அமைப்புகளுக்காகவும், இயக்குனர் துளிகூட சிரமப்படவில்லை’ என்பது, படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பட்டமாக தெரிகிறது. தெளிவில்லா ஒளிப்பதிவு, கஞ்சா கருப்பின் ‘மொக்கை’ காமெடி, சிரிப்பை வரவழைக்கும் அரசியல்வாதி வில்லன், வீணடிக்கப்பட்டிருக்கும் பூமிகா, ராதாரவி என, நிலாச்சோறு கசக்க எண்ணற்ற காரணங்கள். என்றாலும்... கசப்பிற்கு ஊடே, அவ்வப்போது நிலாச்சோறு ருசிக்கிறது. காரணம்... இளையராஜா மற்றும் ஓவியா (பேபி சாரா).

‘‘எனக்கு எல்லாமே அப்பாதான்னு இருக்கறப்போ, நான் ஏன் சாமியை கும்பிடணும்?’’ என ஆரம்பக்காட்சியில் தந்தையிடம் கேட்கும் நொடியில்... பூவில் இறங்கும் பனித்துளியாய் நம் மனதிற்குள் இறங்குகிறாள் ஓவியா! அதற்குப்பின்... குட்டி நாயோடு கவுரி (வசுந்தரா) கொஞ்சி குலாவுவதைப் பார்த்து, ‘‘அது ரெண்டுல எது நாய்?’’ என மழலை ததும்ப கேட்டு நம் மனம் மயக்குகிறாள். கவுரியை கேலி செய்து தண்டனை பெறும் நேரத்தில்... கவுரியிடமிருந்து எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தால், தாய்ப்பாசம் உணர்ந்து உருகும் அந்த அழகில்... அழகு ஓவியமாய்... சொக்க வைக்கிறாள்! ‘‘எங்க அம்மா யாருன்னு ஊரே கேட்குது! ஆனா ஒரு நாளும் நான் உன்கிட்டே கேட்டதில்லையேப்பா!’’ என தந்தையிடம் மருகும்போது... தன் தந்தையோடு சேர்த்து, நம் கண்களையும் நனைக்கிறாள்!

‘‘கல்லாலே செஞ்சு வைச்ச சாமியல்ல நீ...’’ பாடல், படத்தில் இருமுறை ஒலிக்கிறது. ஆனாலும், மனம் திருப்தியடைய மறுக்கிறது. இசைஞானி... வழக்கம்போல் ஜெயித்திருக்கிறார்!

ரசிகன் குரல்: ஆர்.சுந்தர்ராஜன் படம்னு நம்பி வந்தேன். ச்சே... ஏமாத்திட்டாரே!

மொத்தத்தில் ‘சித்திரையில் நிலாச்சோறு’ - பழைய சோறு

நுகம் விமர்சனம்

சில வருடங்களுக்கு முன் சினிமாவிலும், சின்னத்திரையிலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக முகம் காட்டிய ஜெபி எனும் ஜெய்பாலா நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘நுகம்’. இப்பட நாயகியரில் ஒருவரான இனியாவும், சுருதி எனும் பெயரில் சுற்றி வந்த ஆரம்ப நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம், கஞ்சா கருப்பு காமெடி மார்க்கெட்டில் இருந்தபோது உருவான திரைப்படம்... என இன்னும் பல சிறப்பு‌களை(?) கொண்ட திரைப்படம் தான் ‘நுகம்’!

கதைப்படி ஜெய்பாலாவும், இன்னொரு நாயகர் விஜயகுமாருக்கும் இந்தியா வல்லரசு ஆவது பிடிக்காத அயல்நாட்டு சதிகாரர்களின் கையாட்கள்! காசுக்கு ஆசைப்பட்டு மத்திய அமைச்சர் ஒருவரை கொல்ல குறிவைக்கும் இருவருக்கும், இந்தியா வந்ததும் மத்திய அமைச்சரை கொல்ல வேண்டாம், ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல ‌வேண்டும் என்று ‘அசைமென்ட்’ மாற்றி தரப்படுகிறது. ஜெய்பாலா அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்கிறார். இனியாவை காதலிக்கும் விஜயகுமார், அவர் மீதான காதலால் இதற்கு நோ ‌சொல்கிறார். இதனால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது. அதனால் ஒருவரை ஒருவர் தீர்த்து கட்ட துணிகின்றனர். ஜெய், கதிர் எனும் விஜயகுமாரை கொன்றாரா? விஜய், ஜெய்யை கொன்றாரா? என்னும் கதையுடன், சுரேஷ் எனும் இளைஞரின் யாழினி - பீரித்தி மீதான காதலையும் அவர்கள் மீதான ஜெய்யின் காமத்தையும், குரோதத்தையும் கலந்து கட்டி இந்திய நகரங்களையும் படம்பிடித்து காட்டி, வெடிகுண்டு சம்பவங்களுக்கு வெடிகுண்டு வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெபி. ஆனால் அந்த குண்டு நமத்து போனதது தான் நகைச்சுவை!

ஜெய்யாக ஜெய்பாலா, கதிராக விஜயகுமார், சுரேஷாக சுரேஷ், பாண்டியனாக கார்த்தி, மக்கள் நல விரும்பியாக கஞ்சா கருப்பு, யாழினியாக ப்ரீத்தி இவர்களுடன் இனியாவும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட முயன்று அதில் பாதி வெற்றி அடைந்திருக்கின்றனர். இனியா, இப்படத்தின் விளம்பரங்களில் இடம் பிடித்த அளவிற்கு கூட இப்படத்தின் பாத்திரத்தில் இல்லாதது ஏமாற்றம்!

டி.ஜே.கோபிநாத்தின் பின்னணி இசை ஓ.கே. ஈ.கே.ரமேஷின் ஒளிப்பதிவு டபுள் ஓ.கே. ஜெபியின் எழுத்து-இயக்கத்தில் ஆயிரம்பேரை கொல்லத்திட்டமிடும் ஜெய், உடன் இருக்கும் கதிரை தீர்த்துகட்ட ஆள் தேடுவது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நுகத்தை ரசிகர்கள் நுகரலாம்!

ஆகமொத்தத்தில் ‘நுகம்’ தங்களை கேவலப்படுத்தியதாக தீவிரவாதிகளை கேஸ் போட வைக்கும் ‘ரகம்!’ ஹீ... ஹீ...!!

Monday, September 30, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - விமர்சனம்

ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்பதனையே மக்களுக்கு சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

தனக்கென்று தனிபானி, தனி பாதை என்று பயணிக்கும் இயக்குனர்களில், தான் முக்கியமானவன் என்று தனது ஒவ்வொரு படங்களிலும் நிரூபிக்கும் மிஷ்கின் இந்த படத்தையும் அவ்வாரே இயக்கியுள்ளார். 

மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, நண்பருடைய வீட்டில் படித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் வேளையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கும் மிஷ்கினை பார்க்கிறார். 

அவரை காப்பாற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க முயல்கிறார். ஆனால் அந்த உயிர் மீது அனைவரும் அலட்சியம் காட்டுகின்றனர். 

இதனால் தன் வீட்டிலேயே கொண்டு போய் அவருக்கு ஆபரேஷன் செய்கிறார். இதற்கு உதவியாக இவருடைய பேராசிரியரும் துணைபுரிகிறார். ஆபரேஷன் செய்த மறுநாள் மிஷ்கின் அங்கிருந்து தப்பித்து போய்விடுகிறார். அதன்பிறகு சிபிசிஐடி பொலிசார் ஸ்ரீயின் வீட்டிற்கு வந்து மிஷ்கின் ஒரு பயங்கர ரவுடி என்று சொல்கின்றனர்.

ஒரு கொலையாளிக்கு உதவி செய்தற்காக அவரது குடும்பத்தையே கைது செய்கிறது. பொலிஸ் காவலில் இருக்கும் ஸ்ரீயின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. அதில் மிஷ்கின் பேசுகிறார்.

அதில் ஸ்ரீயை சந்திக்க வேண்டும் என மிஷ்கின் கூறுகிறார். இந்த சூழலை பயன்படுத்தி மிஷ்கினை என்கவுன்டர் செய்ய பொலிஸ் திட்டமிடுகிறது. அதற்கு ஸ்ரீயிடம் துப்பாக்கியைக் கொடுத்து மிஷ்கினை நீயே சுட்டுவிடு என்று கூறுகின்றனர். ஸ்ரீ தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக இந்த அசைன்ட்மென்டுக்கு ஒத்துக் கொள்கிறார். 

ஸ்ரீயை சந்திக்கும் மிஷ்கின் மிகவும் சாதுர்யமாக ஸ்ரீயை எலெக்ட்ரிக் ரெயிலில் கடத்திச் செல்கிறார். இறுதியில் பொலிஸ் ஸ்ரீயை மீட்டு மிஷ்கினை கொன்றதா? அல்லது மிஷ்கினை ஸ்ரீ கொன்றாரா? என்ற மீதிக்கதையுடன் படம் நகர்கிறது. முகமூடி படத்திற்கு பின்பு மிஷ்கின் எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் இது. தனது இயல்பான கதை, எதார்த்தம் குறையாத காட்சிகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 

படத்தில் பாடல் இல்லாமல், கொமடி, நடிகர் கூட்டம் இல்லாமல் ஒரு ஆங்கில படத்திற்கு இணையான கதையையும், காட்சிகளையும் ரசிக்கும் படியாகவும், பிரமிக்கும்படியாகவும் அமைத்திருப்பது இவருக்கு உரிய பாணி. 

குறிப்பாக படத்தில் ப்ளாஷ்பேக்கை காட்சிப்படுத்தாமல் ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் பார்ப்பவர்களுக்கு தனது நடிப்பையும் சேர்த்து கதையை சொல்லும் விதம் மிகவும் சிறப்பு. அதில் பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்திருப்பது காட்சியின் உச்சக்கட்டம். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எண்ணில் அடங்காமல் இடம்பெற்றுள்ளன. ஆக்ஷன் காட்சிகளில் மிஷ்கின் மின்னலென சுழல்கிறார். 

வழக்கு எண் 18/9 படத்திற்கு பின்பு ஸ்ரீ நடிக்கும் படம் இது. அப்படத்தில் இருந்து இதில் ஒரு மாறுபட்ட நடிகராக தெரிகிறார். இந்த படத்தின் விறுவிறுப்பை சுமக்கிற பொறுப்பு இவருக்கு. அதை சிறப்பாக செய்திருக்கிறார். இசைஞானியின் பின்னணி இசை தென்றல் போல் மனதை தொடுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய பின்னணி இசைதான். 

இதற்கு மிஷ்கின் டைட்டிலிலேயே முன்னணி இசை என்று இசைஞானிக்கு கௌரவம் சேர்க்கிறார். பாலாஜி வி ரங்காவின் ஒளிப்பதிவு மிக நுணுக்கமான உணர்ச்சிகளைக்கூட அவசரமில்லாமல் நிறுத்தி, நிதானமாக உள்வாங்குகிறது. இவருடைய கமெரா வியப்பை மட்டுமே அளிக்கிறது. 

தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக கோடிகளை சம்பாதிக்க மிஷ்கின் தவறியிருந்தாலும், அவ்வபோது வழி தவறி பயணிக்கும் தமிழ் சினிமாவை சரியான பாதையில் பயணிக்க வைக்க தவறியதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். 

மொத்தத்தில் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் காத்திருந்த ரசிகர்களுக்கு த்ரில்லர் வேட்டை. 


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

முதன்முதலாக ‘சித்திரம் பேசுதடி’ என்னும் கலர்புல் காதல் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பின் ‘இது மிஷ்கின் படம்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே ‘‘அஞ்சாதே’’, ‘‘நந்தலாலா’’, ‘‘யுத்தம் செய்’’, ‘முகமூடி’ என.. பிலிம் பெஸ்டிவலில் மட்டுமே இடம்பிடிக்கும், நமக்கும் பிடிக்கும் படங்களை இயக்கி... மேலைநாட்டு படங்களுக்கு தமிழ்முலாம் பூசுவதை விடுவதாக இல்லை... என்பதற்கு சான்றாக வெளிவந்திருக்கும் மற்றும் ஒரு படம்தான் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்!’

சென்னையின் நிசப்தமான ஓர் நள்ளிரவில் ரோட்டில் குண்டடிபட்டு உயிருக்கு போராடியபடி கிடக்கிறார் மிஷ்கின். அதை பார்க்கும் ஒன்றிரண்டுபேர் கண்டும் காணாமல் போய்விட, இளம் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் ஒருவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் இலவச 108 ஆம்புலன்ஸ், இன்னும் பிற தனியார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எதற்கும் போன் செய்யாமல் குண்டடிபட்டு சுயநினைவின்றி கிடக்கும் மிஷ்கினை தன் டூவீலரில் பின்பக்கம் அமர்த்தி வைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல், ஹாஸ்பிட்டலாக கதவை தட்டுகிறார். யாரும் இவர் அபயக்குரலுக்கு காது கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து தள்ளுகின்றனர்.

உடனடியாக தன் வீட்டிற்கு மிஷ்கினை தூக்கி செல்லும்‌ அந்த மெடிக்கல் மாணவர், மிராக்கிளாக வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியாமல் மிஷ்கினுக்கு தேவையான முதலுதவிகள் செய்து அவரது உடம்பை அறுத்து துப்பாக்கி தோட்டாவை வெளியில் எடுக்கிறார். அதுவும் ‘கேட்டமைன்’ என்னும் போதை மருந்தை உட்கொண்டு தனது மருத்துவ கல்லூரி பேராசிரியரின் செல்போன் ஆலோசனைப்படி மிஷ்கினுக்கும் சிலைன் குளூக்கோஸ் வாட்டரில் கேட்டமைனை செலுத்தி அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து, அவர் அருகிலேயே படுத்தும் உறங்குகிறார். விடிந்து எழுந்து பார்த்தால் ஆபரேஷன் முடிந்து அருகில் உறங்கிய அல்லதுமயங்கிக்கிடந்த மிஷ் ‘எஸ்’ஸாகி இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன...? மிஷ்கின் 14 கொடூர கொலைகள் செய்த உல்ப் (ஓநாய்) என்றும், அவரை போலீஸ்தான் துப்பாக்கியால் சுட்டது என்றும், அவர‌ை காப்பாறிய குற்றத்திற்காக அந்த இளம் மருத்துவ கல்லூரி மாணவ‌ர் ஸ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கூண்டோடு தூக்கிப் போகிறது போலீஸ்!

மிஷ்கினை காப்பாற்றிய ஸ்ரீயின் கையிலேயே துப்பாக்கியை கொடுத்து மிஷ்கினை சுட்டு பொசுக்கவும் சொல்கிறது போலீஸ்! அவரை இவர் சுட்டாரா? அல்லது இவரை அவர் சுட்டாரா என்னும் மீதிக்கதையுடன், வில்லன் தம்பாவின் ரோல் என்ன? போலீசின் கோல் என்ன? என்பது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி, கண் தெரியாத ஒரு குடும்‌பத்திற்கு மிஷ்கின் இழைத்த கொடூரத்தையும், அதற்கு பிராயச்சித்தமாகத்தான் இவ்வளவும் செய்கிறார் என்னும் கதையும் கலந்துகட்டி ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள்! என்ன? விமர்சனத்‌தைப் படிக்கும்போதே கண்ணை கட்டுகிறதா..? படத்தை பார்த்தீர்கள் என்றால் இ‌தைவிட இருபது மடங்கு ரத்தவாடை, துப்பாக்கி சத்தம், சுடுகாட்டு நாற்றம், சைக்கோத்தனம் இன்னும், இன்னும், இன்னும் என்னவெல்லாமோ தெரியும்!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படக்கதையுடன் படத்தில், அந்தகண் தெரியாத குடும்பத்திற்கு தான் இழைத்த கொடூரக்கதையை மிஷ்கின் இமை கொட்டாமல் காமிராவை பார்த்தபடி 5 நிமிடத்திற்கு மேல் உருக்கமாக சொல்லி முடிக்கும் கதை சூப்பர்ப்! அதே மாதிரி ரயில் இன்ஜின் டிரைவரை துப்பாக்கி முனையில் பிணையக்கைதியாக்கியபடி, ரயிலில் போலீஸ் எதிர்பாராமல், தம்பாவின் ஆட்கள் கண்ணிலும் மண்ணை தூவியபடி வந்து தன் உயிரை காப்பாற்றிய மாணவனை கடத்தி செல்லும் காட்சி மயிர் கூச்செரியும் ரகமென்றாலும், தன் உயிரை காப்பாற்றிய மிஷ்கின் சந்திக்க துடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னும் கேள்வியும் எழும்பாமல் இல்லை!

அது மாதிரி குண்டடிபட்டு உயிர் போகும் நிலையில் மயங்கிக்கிடக்கும் மிஷ்கின் அறுவை சிகிச்சை, அதுவும் அப்பரண்டீஸ் மாணவனால் அரை குறையாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘எஸ்’ ஆவது நம்பமுடியாத லாஜிக் மிஸ்டேக் என்பதும், அந்த பார்வையற்ற குடும்பத்தின் ஒரு குழந்தையை தன் அஜாக்கிரதையால் தீர்த்துக் கட்டிய மிஷ்கின், அந்த குடும்பத்தை தூக்கிக்கொண்டே திரிந்து, அந்த சிறுமி கார்த்தியை தவிர்த்து மொத்த குடும்பமும் பலியாக காரணமானவனும் ஏன் என்பது புரியாத புதிர்! அதே மாதிரி, ஒரே குடும்பத்தில் எட்வர்டு, கார்த்தி என பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதும் அது இந்து குடும்பமா? கிறிஸ்தவ குடும்பமா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

தீபாவளி நேரத்தில் குழந்தைகள் விதவிதமான பொம்‌மை துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ‘ரோல் கேப்’ வெடிப்பது மாதிரி ‘ஓநாய்’ மிஷ்கினும், தம்பாவின் கையாட்களும் துப்பாக்கியும் கையுமாக திரிவது, நாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருக்கிறோமா? இந்தியாவில், சென்னையில் இருக்கிறோமா? என்னும் சந்தேகத்தை கிளப்புவதும் பலவீனம்!

இளையராஜாவின் பாடல்களே இல்லாத பின்னணி இசை, ஜுனியர் ரங்காவின் ஒளிப்பதிவு, மிஷ்கின், ஸ்ரீயின் நடிப்பு உள்ளிட்ட பிளஸ் பாய்ண்ட்கள் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை தூக்கி நிறுத்த முயன்றாலும், லாஜிக் மிஸ்டேக் கதையும், நம்பமுடியாத திரைக்கதையும், சுடுகாட்டு பின்னணியும் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை ஒருவழி ஆக்கிவிடுகின்றன.

ஆக மொத்தத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்‌’, ‘மிஷ்கினும் அவரது ரசிகர்களும்’ என்றால் மிகையல்ல.

ராஜா ராணி விமர்சனம்

காதலிச்சு ஏதோ ஒரு வகையில் காதலர்கள் சேராமல் போய்விட்டால் அதன்பிறகு வாழ்க்கையே கிடையாது என நினைக்க கூடாது. அதற்கு பிறகு அமையும் வாழ்க்கையை, வாழ்நாள் முழுக்க சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். காதல் ‌தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இருக்கு... காதலும் இருக்கு... என்ற கருத்தை புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் படம் தான் ராஜா ராணி. இந்த கதையை புதுமுகம் அட்லீ, அவ்ளோ அழகாக சொல்லியிருக்கிறார்.

கதைப்படி ஜான் எனும் ஆர்யாவுக்கும், ரெஜினா எனும் நயன்தாராவுக்கும், பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்வது கிடையாது. எலியும்-பூனையும் போல் எப்போதும் முறைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒருநாள் இரவு நயன்தாராவுக்கு திடீரென வலிப்பு வர குடிபோதையில் இருக்கும் ஆர்யா, எப்படியோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அங்கு அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை பார்த்து கண்ணீர் விடும் ஆர்யா அவர் மீது பாசம் கொள்கிறார். எதனால் இப்படி வலிப்பு ஏற்பட்டது என்று நயனிடம், ஆர்யா விசாரிக்கையில் பிளாஷ்பேக் விரிகிறது. நயன்தாரா ஏற்கனவே சூர்யா எனும் ஜெய்யை காதலித்து, பதிவு திருமணம் செய்யும் வேளையில் ஜெய் திடீரென அமெரிக்காவுக்கு சென்று அங்கு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக வந்த தகவலால் அந்த அதிர்ச்சியில் இதுபோன்று ஏற்பட்டுவிட்டதாக சொல்ல, நயன் மீது ஆர்யாவுக்கு இன்னும் அன்பு கூடுகிறது.

இதுஒருபுறம் இருக்க ஆர்யா, நஸ்ரியாவை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ஒரு கோயிலில் கல்யாணம் பண்ணி, மறுநாள் அவுட்டிங் போகும் போது எதிர்பாரா விதமாக நஸ்ரியா சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இதனால் ஆர்யாவும் இடிந்து போய் 4 வருடமாக நஸ்ரியா நினைப்பாகவே இருக்கிறார். ஆர்யாவின் காதல் கதையை கேட்டு நயன்தாராவுக்கும் அவர் மீது பாசம் ஏற்படுகிறது. ஆனால் இந்த பாசத்தை இருவருமே வெளிக்காட்ட நினைக்கும்போது ஒவ்வ‌ொரு முறையும் ஏதாவது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இவர்களுக்குள் ‌ஏற்படுகிறது. இதற்கிடையே ஜெய், உயிரோடு இருக்க  கடைசியில் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்தாரா? அல்லது ஆர்யாவுடனேயே தனது வாழ்க்கையை தொடர்ந்தாரா? என்பது மீதிக்கதை!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என நான்கு பேர் இருந்தாலும் நால்வருக்கும் சமமான ரோல் கொடுத்துள்ளார் இயக்குநர். ஆர்யா வழக்கம் போல் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

ஆர்யாவைக்காட்டிலும் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் அசத்தி விட்டார் ஜெய். பயந்தசுபாவம் உடைய ஜெய்யை, நயன்தாரா போனில் கலாய்க்கும் போது அவர் அழுவது தொடங்கி, கடைசி காட்சியில் ஆர்யாவை, ஏய்... போடா என்று சொல்லும் காட்சிகள் வரை தனக்கான ரோலை பக்காவாக பண்ணியிருக்கிறார் மனிதர்.

யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். ஜெய்யுடனான ரொமான்ஸ் காட்சியிலும் சரி, கணவர் எனும் பெயரில் இருக்கும் ஆர்யாவுடன் எப்போதும் முறைத்து கொண்டு திரியும் காட்சிகளிலும் சரி முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் சூப்பர். அதிலும் வலிப்பு ஏற்படும் போது, கண்ணின் கருவிழியே தெரியாத அளவுக்கு கண்ணில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப்...!!

ஏய் ரிங்கா ரிங்கா... எனும் பாட்டுக்கு நைட்டியை மடித்து கட்டி, வாயில் டூத்பிரஸ் உடன் ஆடியபடி அறிமுகமாகும் நஸ்ரியா, தொடர்ந்து பிரதர் பிரதர்... என ஆர்யாவை கடுப்பேற்றும் காட்சிகளிலும் சரி, பின்பு அதே ஆர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி கொள்ளை அழகு. ஒவ்வொரு காட்சிக்கும் முகத்தில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஆஸம்...!

வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் தியேட்டரை அதிரவைக்கின்றன. சந்தானம் தவிர ஜெய்யின் நண்பராக வரும் சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மணிரத்னத்தின் ‘மெளனராகம்’ ஸ்டைல் கதை என்றாலும், அதை இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டைலாக கொடுத்து இருப்பதில் புதியவர் அட்லீ மிளிர்கிறார்.
‘‘உலகத்துல யாருமே மேட் பார் ஈச் அதரா பொறக்கிறது இல்ல; வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு’’,,‘‘நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போய்ட்டாங்கன்னா, நாமளும் போகணும்னு அவசியம் கிடையாது. என்னைக்காவது ஒரு நாள் நாம் ஆசப்பட்ட மாதிரி லைப் மாறும்’’ போன்ற வசனங்களுக்கு தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது.

ஆஸ்பத்திரியில், நயன்தாராவை சேர்த்திருக்கும்போது, டாக்டர் வந்து ஆர்யாவிடம், மனைவி பெயர் என்ன என கேட்கும்‌போது தெரியாது என்று ஆர்யா சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இதேபோல் ஜெய், நயன்தாராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு பதிவு அலுவலகத்திற்கு வராமல், ‌சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா பறப்பது ஏன், அதற்கான காரணத்தை ஒரு சில காட்சிகளிலாவது டைரக்டர் காட்டியிருக்கலாம், அட்லீஸ்ட்  நயன்தாராவுக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கலாம் உள்ளிட்ட ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் அசத்தல் இசை, ஜார்ஜ் சி.வில்லியம்சின் ரம்மியமான ஒளிப்பதிவு, அந்தோணி எல்.ரூபனின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ராஜா ராணி அழகிய ஓவியமாய் மிளிர்ந்து இருக்கிறது.

மொத்தத்தில், ‘‘ராஜா ராணி’’ - ரசிகர்களின் இதய அரண்மனையில் ‘மகுடம்’ சூடப்போவது நிச்சயம்!!

Sunday, September 22, 2013

மத்தாப்பூ விமர்சனம்

‘தினந்தோறும்’ நாகராஜின் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ படத்தின் வெற்றிக்கும் நீண்ட இடைவெளிக்கும் பின் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ‘மத்தாப்பூ’.

ஆண்களையே பிடிக்காத நாயகி ‌காயத்ரி, அவரையே சுற்றிவரும் அறிமுக நாயகர் ஜெயன். இவர்களது காதலுக்கு இரு வீட்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தும் காயத்ரி காதலுடன் ஜெயனை பார்க்க மறுக்கிறார். அது ஏன்? அவருக்கு ஆண்களையே பிடிக்காத காரணம் என்ன? என்பதுதான் ‘மத்தாப்பூ’ படத்தின் மொத்த கதையும்! இறுதியில் ஆண்களை வெறுக்கும் காயத்ரி ஜெயனின் நற்குணங்களைக் கண்டு ஜெயனை காலித்தாரா? கரம் பிடித்தாரா?! என்பது க்ளைமாக்ஸ்!

புதுமுகம் ஜெயின், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ காயத்ரி, அம்மா, சின்னம்மா (!) கேரக்டரில் மாஜி நாயகிகள் ரேணுகா, கீதா, சித்தாரா, அப்பா, சித்தப்பா கேரக்டரில் கிட்டி, இளவரசு மற்றும் செஞ்சி, உதய், சங்கர்குருராஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படம் முழுக்க பவனி வருகிறது! கார்த்திக் என்னும் கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் புதுமுகம் ஜெயன் சூப்பர்ப்!

கே.வேலாயுதத்தின் பாடல்கள் இசை, சபேஷ் முரளியின் பின்னணி இசை, சி.ஆர்.மாறவர்மனின் ஒளிப்பதிவு, சி.கே.மகேஷின் படத்தொகுப்பு என ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும் ‘தினந்தோறும்’ நாகராஜின் எழுத்து, இயக்கத்தில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘மத்தாப்பூ’ வெளிவந்திருந்ததென்றால், தமிழ் சினிமாவின் ‘காதல் பூ’வாக இருந்திருக்கும்! சற்றே காலதாமதமாக வந்திருப்பதால் இன்றைய இளைஞர்களுக்கு ‘காதுல பூ’வாக தெரிகிறது!

ஆக மொத்தத்தில் ‘மத்தாப்பூ’ - நிறைய காதல் பூ; கொஞ்சம் காதுல பூ’.

மூடர்கூடம் விமர்சனம்

‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கும் திரைப்படம்தான் மூடர்கூடம். சிஷ்யருக்காக இந்தப்படத்தை தனது ‘பசங்க’ புரடக்ஷன்ஸ் மூலம் வாங்கி வெளியிட்டும் இருக்கிறார் பாண்டிராஜ் என்பது சிறப்பு!

‘மூடர்கூடம்’ படத்தில் கதை என்று பார்த்தால் பெரிதாக எதுவும் கிடையாது... ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்!’’ என்பது மாதிரியான ‘ஜென்’ குட்டி கதைகள் போன்றதொரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!. ஆனால், இந்த கதையில் ஏகப்பட்ட முன்கதைகள், முழுக்கதைகளை(?) கலந்துகட்டி காமெடியாக கலர்புல்லாக ‘மூடர்கூடம்’  படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி  இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்! ஆமாம் பின்னே, இதுமாதிரி இதுவரை தமிழ் ‌சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்!

கரடு முரடான முகபாவங்கள், உருவ அமைப்புகள், சில்லறை சேட்டைகளைக் கொண்ட வெள்ளை ராஜாஜ், நவீன் என்னும் நவீன், குபேரன் மற்றும் சென்றாயன் நால்வரும் வெவ்வேறு சில்லறை நோய்களுக்காக போலீஸ் ‘லாக்-அப்’பிற்கு போக, அங்கு நண்பர்களாகின்றனர். நால்வரும் சேர்ந்து, வெளியூருக்கு போக இருக்கும் வெள்‌ளையின் பணக்கார மாமா ஜெ.பி.யின் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளே போகின்றனர். தன் பைனான்ஸ் கம்பெனி திவாலாகிவிட்டதாக பொய் கணக்கு காட்டி ‌ஊரைவிட்டு குடும்பத்தோடு ‘எஸ்’ ஆக இருக்கும் ஜெயப்பிரகாஷ், சின்ன டைமிங் மிஸ்டேக்கால், இவர்களிடம் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பப்பா.... அதைத்தான் எத்தனை நகைச்சுவையாக சீன் பை சீன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் மூட் தெரிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக ‘நச்’சென்று ‘டச்’ செய்கிறார். படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு ‌சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதை(!)களும்தான் செம ஜோர்!

நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரமாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்! நவீனின் எழுத்து, இயக்கத்தில் முன்கதை, பின்கதை, முழுக்கதை, கிளைக்கதை என்று ஏகப்பட்ட கதைகள் இடைச்செருகலாக படத்தில் இடம்பெறுவது என்னதான் சுவாரஸ்யம் என்றாலும் படத்தின் நீளத்தை வெகுவாக கூட்டிவிடுவதை மட்டும் இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்து மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். மற்றபடி மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மூடத்தனமாக, முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’

6 மெழுகுவர்த்திகள் விமர்சனம்

‘12பி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் எதிர்பார்த்த இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கும் கதாநாயகர் ஷாமுக்கு முன்னணி இளம் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்க ஏதுவாக வெளிவந்திருக்கும் படம். ‘முகவரி’ படத்திற்குப்பின் எத்தனையோ படங்களை இயக்கி இருந்தும் தனக்கென சரியான ஓர் இடத்‌தை பிடித்து வைத்துக்கொள்ளாத இயக்குநர் வி.இசட்.துரைக்கு சரியான ஒரு இடத்தை பெற்றுத்தர வெளிவந்துள்ள திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மேலாக பூர்த்தி செய்யும்படியாக பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்திருக்கிறது ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் என்றால் மிகையல்ல!

இந்திய அளவில் ‘நெட்வொர்க்’ அமைத்து குழந்தை கடத்தும் கும்பலை பற்றிய கதைதான் ‘6 மெழுகுவர்த்திகள்’ மொத்த படமும்! குழந்தைகள் எதற்காகவெல்லாம் கடத்தப்படுகின்றன... எங்கெல்லாம் விற்கப்படுகின்றன... எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்படுகின்றன என்னும் விஷயங்களை இதுவரை இந்திய மொழிப்படங்களில் இவ்வளவு விலாவாரியாக யாரும் சொல்லியிருப்பார்களா? தெரியவில்லை! அந்த ஒரு விஷயத்திற்காகவே இயக்குநர் வி.இசட்.துரைக்கு இந்திய அளவில் சிறந்த இயக்குநர் என்னும் தேசிய விருதினை கொடுக்கலாம்!

‘6 மெழுகுவர்த்திகள்’ கதைப்படி, தங்கள் ஒற்றை ஆண் குழந்தையின் 6வது பிறந்த தினத்தின்போது கேக் எல்லாம் வெட்டிமுடித்தும் முடிக்காமலும் ஹாயாக ‌குழந்‌தையுடன் மெரீனா பீச்சுக்கு போகிறது ஷாம்-பூனம் கவுரின் அழகிய சிறு குடும்பம்! அங்கு சின்னதாக ஒரு கவன பிசகலில் இருவரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேட, எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை! இவர்களின் கதறலை பார்த்துவிட்டு ஓடிவரும் சுற்றமும் நட்பும் கூறும் ஆலோசனையின்படி போலீசுக்கு போகின்றனர். முதலில் போக்கு காட்டும் போலீசும் பிறகு சமூக விரோதிகளை சட்டத்திற்கு தெரியாமல் அடையாளம் காட்டி அவர்கள் கேட்பதை கொடுத்து குழந்தையை மீட்டுக்கொள்ளும்படி ‘எஸ்’ ஆகிறது! அப்புறம்? அப்புறமென்ன? குழந்‌தையைத் தேடி ஷாம், ஆந்திரா நகரி, வாரங்கல், போபால், மும்பை, கோவா, கொல்கத்தா என அவர்கள் கைகாட்டும் இடங்களுக்கு எல்லாம் போய் பல இடங்களில் எந்த எதிர்ப்பும் காட்டாமலும் சில இடங்களில் ஆக்ஷனிலும் இறங்கி, 50 லட்சம் காசையும் கொடுத்து, குழந்தையை மீட்டாரா, இல்‌லை மீட்டெடுக்க முடியாது மாண்டாரா?! என்பது திக்திக்திக் க்ளைமாக்ஸ்!

ஷாம், ராம் என்னும் அப்பா கேரக்டரில் நடிக்கவில்‌லை. வாழ்ந்திருக்கிறார். அவரும் பூனம் கவுரும் குழந்தையை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் ஏதோ படம் பார்க்கும் நாம், நமது குழந்தை செல்வத்தை தொலைத்துவிட்டு தேடுவது போன்றதொரு பிரமை, பயம், திகில் நம்முள் புகுந்துகொண்டு நம்மையும் ராம் என்னும்‌ ஷாமாகவே மாற்றி குழந்தையை தேடவைக்கும் கதை ஓட்டமும் காட்சி பதிவுகளும் 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் பெரிய ப்ளஸ்! ஷாம் தைரியமாக இருங்கள். இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருதுகளும் விழாக்களும் ஏராளம் காத்திருக்கிறது!

நாயகி பூனம் கவுர் லிஸியாக வாழ முற்பட்டிருக்கிறார். மற்றபடி ஷாம்-பூனம் ஜோடியின் நண்பர் குடும்பம் தவிர யாரென்றே தெரியாமல் போலீசுக்கு போகச்சொல்லி உதவ வரும் நபரில் தொடங்கி, போலீஸ் இன்ஸ், கான்ஸ்டபிள், கார் டிரைவர், போபால் மலையாளி வில்லன்‌, கொத்தா பொட்டுவைத்த தாதா வரை எல்லோரும் மறைமுகமாகவோ நேர்முகமாகவோ குழந்தை கடத்தலில் சம்பந்தப்பட்ட கொடூரமானவர்கள். க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் அந்த ‘பாயை’ தவிர மற்ற அனைவரும் மிக மோசமானவர்கள். ஒவ்வொரு படத்திலும் தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்களை காட்டும் நம் சினிமாக்காரர்களுக்கு சவுக்கடி தரும் விதமாக அந்த இஸ்லாமிய பெரியவரை நல்லவராக காட்டி குழந்தை கடத்துபவர்களும் தீவிரவாதிகள்தான்... என தங்கள் மதத்தினருக்கு ஆறுதலை தர முயன்றிருக்கிறார்கள் இயக்குநர்  வி.இசட்.துரை, நாயகர் ஷாம், தயாரிப்பாளர் மீடியா இன்ஃபினிட்டிவ் நிஜாம் உள்ளிட்டவர்கள்! இவர்களின் முயற்சிக்கு ஸ்ரீகாந்த் தேவாவின் மிரட்டல் இசையும், கிருஷ்ணசாமியின் பிரமாண்ட ஒளிப்பதிவும் பக்க(கா)பலமாக இருந்து 6 மெழுகுவர்த்திகளை ஒளிரவைத்திருக்கின்றன.!

ஆக மொத்தத்தில் ‘6 மெழுகுவர்த்திகள்’ உருகவில்‌லையே! நம்மை உருக்கிவிடுகின்றது!

மெளன மழை தினமலர்

‘ஒத்தவீடு’ அறிமுகநாயகன் திலீப்குமார் நடித்து இரண்டாவது வீடாக வெளிவந்திருக்கும் படம்தான் ‘மெளன மழை’

முதலாளி காதல் தண்டபாணியின் கையாள் சேரா என்னும் திலீப்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகராஜினின் மகள், வில்லன் சசியின் மாமன் மகள் என இரண்டு பெரும் எதிர்பார்ப்பாளர்களின் வீட்டு பெண் கயல் என்னும் மனிஷாஜித்! சேரா - திலீப்புக்கு கயல் - மனீஷா மீது காதல்! காதல் தண்டபாணியின் தயவுடன் வில்லன் மற்றும் ‘இன்ஸ்’ அப்பாவின் எதிர்ப்பை மீறி கயலை, திலீப் கரம் பிடித்தாரா? இல்லையா? என்பது ‘அடிதடி’ அதிரடி நிறைந்த மீதிக்கதை. இதில் எங்கிருந்து ‘மெளன மழை’ பெய்தது என்பது இயக்குநர் ஆனந்துக்கே வெளிச்சம்!

நாயகன், நாயகி மாதிரியே காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், வில்லன் சசி, ‘ஆடுகளம்’ ஸ்டெல்லா, நட்சத்திரா, பாட்டி மதுரை சரோஜாம்மாள், ‘மைனா’ நாகு, ரவிராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திறமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஆதிஸின் இசையில், வி.எம்.ஆறுமுகத்தின் 5 பாடல்களுக்கான வரிகளும், விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் ர(ரா)கம்! டி.மகிபாலனின் ஒளிப்பதிவில் அந்த ஊர் அழகு! ஆனந்தின் எழுத்து, இயக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் ‘மெளன மழை’ திரையரங்குகளில் பெய்திருந்ததென்றால் - ரசிக பயிர்களால் திரையரங்குகள் நிரம்பி இருந்திருக்கும்.!

‘மெளன மழை’ - பெரிதாக பெய்யவுமில்லை; சிறிதாக பொய்க்கவுமில்லை.

யா யா விமர்சனம்

‘டைமிங்’ நடிகர்கள் ‘மிர்ச்சி’ சிவாவும் சந்தானமும் இணைந்து கலக்கி கலகலக்க வைத்து, களகளத்து, களைத்து, கலைந்து போயிருக்கும் படம்தான் ‘யா... யா...’

அதாகப்பட்டது, அம்மா ரேகா, ராமராஜன் ரசிகை என்பதால் மகன் சிவாவுக்கு ராமராஜன் எனப்பெயர் சூட்டி அவரது முறைப்பெண் ‘காதல்’ சந்தியாவுக்கு கனகா எனப்பெயர் (நல்லவேளை ‘கரகாட்டக்காரன்’ கனகா எனப் பெயர் சூட்டவில்லை..) சூட்டி இவருக்கு அவர், அவருக்கு இவர் என வளர்த்து ஆளாக்குகின்றனர். ஆனால், ‘போனால் அரசு வேலைக்குத்தான் போவேன்..’ என்று வைராக்கியத்துடன் வேலை வெட்டி எதற்கும் போகாம அப்பா காசிலும் அடுத்தவங்க பணத்திலும் குவாட்டர், கட்டிங், சைடிஸ் என ஜபர்தஸ்துடன் வாழுகின்ற சிவா, தன் பெயரை தோனி என மாடர்னாக மாற்றிவைத்துக் கொண்டு கீதா-தன்ஷிகா பின் காதல் கத்திரிக்காய் என்று அலைகிறார்.

மற்றொரு பக்கம் சந்தானத்தின்  அப்பா ராஜ்கிரண் ரசிகர் என்பதால் அவருக்கு ராஜ்கிரண் எனப் பெயர்சூட்டி வளர்த்து ஆளாக்க, வெட்டி ஆபீசராக திரியும்‌ அவரும் ஷேவாக் என்னும் கிரிக்கெட் பிளேயர் மீதுள்ள அபிமானத்தில் பெயர் மாற்றத்துடன் தோனியின், அதாங்க ராமராஜன் என்னும் சிவாவின் நண்பராக அவருக்கு தன்ஷிகாவுடனான காதலுக்கு உதவுவதுபோல் சில சுயலாபங்களுக்காக உபத்திரவம் செய்கிறார். கூடவே, சிவாவின் மாமன் மகள் ‘காவலர்’ சந்தியாவை (‘காதல்’ சந்தியாவேதன் படத்தின் இவர் பெண் கான்ஸ்டபிள்...) ‘லவுஸ்’ வயப்படுகிறார். (நல்லவேளை ‘ராஜ்கிரண்’ சந்தானத்திற்கும் ராமராஜனின் முறைப்பெண் கனகா மாதிரி மீனா, சங்கீதா என இரண்டு அத்தை, மாமா மகள்கள் இல்லை..)! அப்புறம்? அப்புறமென்ன? சந்தானம் அவருக்கு பின்னால் இருக்கும் தேவதர்ஷினி உள்ளிட்டவர்களின் தடை பல கடந்து சிவா - தன்ஷிகாவின் காதல் கைகூடியதா? சந்தானம் - சந்தியாவின் திடீர் காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா?! என்பது க்ளைமாக்ஸ்!

‘மிர்ச்சி’ சிவா ராமராஜன் ‘அலைஸ்’ தோனியாக நிறைய பேசுகிறார். நிறைய குடிக்கிறார். கொஞ்சமாக காதலிக்கிறார். கொஞ்சம் கொஞ்சம் சந்தானம், சந்தியா, டாக்டர் சீனிவாசன், அப்பா இளவரசு, அம்மா ரேகா, உடன்பிறப்பு ஸ்டெபி உள்ளிட்டவர்களையும் சேர்த்து நம்மையும் கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். ஆங்காங்கே ‘கடி’க்கவும் செய்கிறார். இனியும் சிவா, இது மாதிரி கதைகளில் ‘காமெடி’, ‘கடி’ படங்களில் நடிப்பதைக் குறைத்து கதையம்சம் நிறைந்த படங்களில், பேச்சைக்குறைத்து நடிப்பது நலம் பயக்கும்!

சந்தானம் ராஜ்கிரண் ‘அலைஸ்’ ஷேவாக் ‘அலைஸ்’ சச்சினாக (அது ‌எப்போ?) பேசும் வசனங்கள் கண்டு தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. ‘புலிக்கு முன்னாலேயே போன மானும், பொண்ணுங்க பின்னாடி போன ஆணும் தப்பி பிழைத்ததா சரித்திரம் கிடையாது...’ என்னும் வசனத்தில் தொடங்கி, ‘புல்லா  தண்ணி அடிச்ச பசங்களைகூட நம்பிடலாம். ஆனா புள்ள பூச்சியாட்டம் இருக்கும் பொண்ணுங்களை நம்பமுடியாது என்பது வரை படத்திற்கு இருநூறு, முந்நூறு காமெடி ‘பன்ச்’ வசனங்களை எங்குதான் சந்தானம் கவ்வி பிடிக்கிறாரோ?! எல்லாமே காமெடி சரவெடி!

‘பவர் போன ஸ்டார்’ சீனிவாசன், தனுஷ், அஜீத், விஜய், கமல், ரஜினி கெட் அப்புல வந்து பயமுறுத்துகிறார். ரசிகர்கள் பாவம்!

தன்ஷிகாவின் கவர்ச்‌சி சந்தியாவின் நடிப்பு முதிர்ச்சி இரண்டும் படத்திற்கு பெரும்பலம். ரேகா, ஸ்டெபி, தேவதர்ஷினி, இளவரசு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.. அதில் சிவாவுக்கு ரூட்டு போட்டு சீனிவாசனை பிக்அப் பண்ணும் தேவதர்ஷினியின் ‘பல்’லும் சொல்லும்‌ திகிலூட்டுகின்றன என்றாலும் காம நெடியில்லா காமெடி!

விஜய் எபினேசரின் இனிய இசை, வெற்றியின் அழகிய ஒளிப்பதிவு என எல்லாம் இருந்தும் ஐ.ராஜசேகரின் எழுத்தும் இயக்கமும் வெறும் காமெடியை மட்டுமே நம்பி இருப்பது சற்றே திகட்டுகிறது!

மொத்தத்தில் ‘யா... யா...’ - ‘சும்மா ‘வாய்யா’ - சிரிச்சுட்டு ‘போய்யா’!’ என்னும் அளவிலேயே இருக்கிறது!

Tuesday, September 3, 2013

சும்மா நச்சுன்னு இருக்கு விமர்சனம்

‘மகாபிரபு’, ‘பகவதி’, ‘ஏய்’ போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களின் இயக்குனர் ‘ஏ’ வெங்கடேஷ், அதிரடி, காமெடி என களமிறங்கியிருக்கும் திரைப்படம்தான் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’. தன் பாணியில் இருந்து விலகி ‘சாக்லெட்’ எனும் காதல் படத்தில் ஜெயித்த வெங்கடேஷ், இந்தகாமெடி படத்தில் கோட்டை விட்டாரா? கோட்டையை பிடித்திருக்கிறாரா? பார்ப்போம்!

25 லட்ச ரூபாய் அவசர, அவசிய தேவை பணத்திற்காக லட்சியம் எதுவுமில்லாமல் புதுக்கோட்‌டையில் இருந்து சென்னை வந்து ஆட்டோ ஓட்டுகிறார் ஹீரோ தமன்! ஓர் நாள் இரவு ஐந்தாறு இளைஞர்கள் துரத்த ஓடிவரும் ஒரு நாயகி விபா, அவரது ஆட்டோ முன் விழுந்து காப்பாற்ற சொல்லி கதறுகிறார்.விடுவாரா ஹீரோ? வித்தியாசமான(!) ஸ்டைலில் துரத்தி வந்தவர்களை விரட்டி அடிக்கிறார். ஆனால், அதில் ஒருவன் விட்டெறிந்த கல், ஹீரோயின் விபாவின் மண்டையை பதம் பார்க்க, வழிந்தோடு்ம் ரத்தத்துடன் அம்மணியை அலேக்காக தூக்கி ஆட்டோவில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் ‘அட்மிட்’ செய்கிறார். தவிர்க்க இயலாத சூழலில் விபாவின் கணவர் என்னும் இடத்தில் கையெழுத்தும் போடுகிறார். சுயவினைவின்றி விபா படுத்த படுக்கையாக இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன., விஷயம் கேள்விப்பட்டு விபாவின் மலேசிய கோடீஸ்வரர் ‘டத்தோ’ அப்பா ஏ.வெங்கடேஷ், குடும்ப சகிதமாக தனி விமானத்தில் சென்னை வந்து மகளையும் மகளது காதல் கணவனாக நடிக்கும் தமனையும் அவரது நண்பர்களையும் அதே விமானத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு மலேசியா திரும்புகிறார். அங்கு ராஜ வாழ்க்‌கை வாழும் தமன் அண்ட் கோவினர் யார்? என்னும் உண்மை தெரியவந்ததா? இதில் இன்னொரு நாயகி அர்ச்சனாவின் ரோல் என்ன? ‘பவர்’ சீனிவாசனின் பங்கென்ன? ‘பவர்’ என்ன? தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ் போன்றவர்களின் வேலை என்ன? என்பதற்கெல்லாம் காமெடி என்னும் பெயரில் அடித்து, பிடித்து, கடித்து விடை சொல்கிறது ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ படத்தின் வழவழ... கொழ,கொழ... மீதிக்கதை!

தமன் ஹேண்ட்ஸமான ஹீரோவாக தெரிகிறார். ஆனால், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ இப்படி அடுத்தடுத்து படு லோக்கலான கதைகளை தேர்ந்தெடுத்து படுகுழியில் விழுவதை தவிர்ப்பது நலம் பயக்கும்! ப்ளாஷ்பேக்காக இவர் ரஜினியின் ‘பாட்ஷா’ கதையை சொல்வதும், ‘பவர்’ சீனிவாசன் மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ கதையை அளப்பதும், ‘எத்தினி படத்தில...?! இன்னும் நல்லா யோசித்திருக்கலாம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்! அவர் எங்கே?      யோசிக்க? அவர்தான் கோடீஸ்வர டத்தோவாக தனி ஹெலிகாப்டர்ல பறக்கிறதும், இவர் கீழே நிக்கிறப்போ பேக்-ரவுண்டில் ஹெலிகாப்டர் பறக்கிறதுமா... இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டிருக்கிறாரே பாவம் (நமக்கெல்லாம் வெங்கடேஷ் சார்., ‘அங்காடிதெரு’ அண்ணாச்சி கடை காரியதரிசி கேரக்டருதாங்க கச்சிதம்‌, என்பதை கவனத்தில் கொள்ளவும்‌)!

தமன், தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ், ‘பவர்’ சீனி எல்லோரையும் காட்டிலும் ஹீரோயின்கள் விபா, அர்ச்சனா, இசையமைப்பாளர் அச்சு, ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், படத்தொகுப்பாளர்கள் வி.டி.விஜயன் - என்.கணேஷ்குமார் எல்லோரும் இருந்தும், ஏ.வெங்கடேஷின் எழுத்து இயக்கத்தில் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’  - ‘சுமாராத்தான்’ இருக்கு!.

Thursday, August 15, 2013

'தலைவா' : இதுவரை நடந்ததென்ன? - ஒரு 'ரியர் மிரர்' பார்வை

'நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது' என்பார்கள் கிராமத்தில்.அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த 'பலி நேரம்' இப்போதுதான் வந்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் 'தலைவா' திரைப்படம் துவங்கப்பட்ட போது கூட எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லை. ஆனால் ரிலீசுக்கு நெருங்குகிற நாளில்தான் குழப்பமும், கூத்தும்! ஒரு தலைவன் யாராலும் உருவாக்கப்படுதில்லை, அவன் தானாக உருவாகிறான் என்கிற கருத்தை மையமாக கொண்ட பட(மா)ம் இது. மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். பிரபல சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்திருக்கிறார்.

தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்டாலும் அவ்வப்போது 'சுறா' புட்டையும் விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து அதிர வைப்பார் விஜய். நஷ்டத்தை திருப்பிக் கொடு என்கிற கோஷம் சில காலம் கேட்கும். அதற்கப்புறமும் விஜய் படம் ரிலீசாகிற நேரத்தில் கோடிகளை வைத்துக் கொண்டு ஆலாய் பறப்பார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும். அதுதான் விஜய் படங்களின் கவர்ச்சி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'துப்பாக்கி' வசூல் மழையை கொட்டிய காரணத்தால் 'தலைவா' ரிலீசுக்காக காத்துக்கிடந்தார்கள் சினிமா வியாபாரிகள்.

விஜய் படங்களால் கோடி கோடியாக சம்பாதித்த அதே தியேட்டர்காரர்கள்தான் இப்போது விஜய் படத்தை வெளியிட மாட்டோம் என்று கொடி பிடிக்கிறார்கள். அப்படியென்றால்...? இந்த சந்தேகத்திற்கு இறக்கை முளைத்து நாலா திசையிலும் பறந்து கொண்டிருக்கிறது. உண்மையான விடைதான் யாருக்குமே தெரியவில்லை.

இம்மாதம் 9 ந் தேதி படம் வெளியாவதாக நாள் குறித்து அதற்கான விளம்பரங்களும் வந்து கொண்டிருந்த நிலையில் 7 ந் தேதி பிற்பகல் 'தலைவா' படத்தின் டிக்கெட் முன்பதிவை நிறுத்தி அதிர்ச்சியளித்தது தியேட்டர் நிர்வாகம். அதற்கு காரணம் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 'தலைவா படத்தை திரையிட வேண்டாம். அப்படி திரையிட்டால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்' என்று திரையரங்கங்களுக்கு அறிவுறுத்தினார்கள். நேரம் செல்ல செல்ல படம் வெளியாகுமா என்கிற பரபரப்பு நிலவியது.

இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படுவது ஒரு மொட்டை கடிதம்தான். சென்னையிலிருக்கும் ஒரு தியேட்டருக்கு வந்த அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள்தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். 'தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களிடம் அட்டை பூச்சியை போல பணத்தை சுரண்டி வரி ஏய்ப்பு செய்து சேர்த்து வைத்த கறுப்பு பணத்தில் கறுப்பு பண முதலையான பாரிவேந்தன் தலைவா படத்தை 70 கோடியில் எடுத்துள்ளான். இது யார் பணம்? முழுக்க முழுக்க ஓடுக்கப்பட்ட மாணவர்களிடம் சுரண்டப்பட்ட பணம்'.

'இந்த படத்துக்கு ரூ 20 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அரசுக்கு கணக்கு காட்டிய பணம் எவ்வளவு? பாரிவேந்தன், பூரிவேந்தன் என நக்கலடித்த விஜய் ரூ20 கோடி சம்பளம் கொடுக்கிறான் என்றவுடன் அதே பூரிவேந்தனிடம் சரணடைந்த மர்மம் என்ன?'

'மாணவர்களிடம் சுரண்டும் போக்கை தடை செய்ய வேறு வழியில்லை. இந்த படத்தை திரையிட முடிவு செய்த நீயும் ஒரு கறுப்பு பண முதலை என்பது நாட்டுக்கே தெரியும். படத்தை திரையிட்டால் தியேட்டரில் அல்லது உன்னுடைய வீட்டில் வெடிகுண்டு வைப்பதை தவிர வேறு வழியில்லை. வெடிக்கப் போகும் குண்டு எதிர்காலத்தில் பண முதலைகளுக்கு வைக்கப்போகும் ஆப்பாக இருக்கும். நீ போலீசுக்கு போனாலும் இதை தடுக்க முடியாது. உன்னுடைய நடவடிக்கைகளை பின் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தலைவா படத்தை வெளியிட்டு உன் தலையை இழந்து விடாதே. இறுதி எச்சரிக்கை. இப்படிக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை' என்று முடிகிறது அந்த கடிதம்.

இதையடுத்து பிலிம்சேம்பரில் கூடிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினரும் தயாரிப்பு தரப்பும் கூடி பேசினர். பேச்சு வார்த்தை நீண்டு கொண்டே போனதே தவிர ஒரு முடிவுக்கு வரவில்லை. கூட்டத்தை மறுநாள் தள்ளி வைத்து விட்டு கிளம்பினார்கள். அதே நேரத்தில் இன்னொரு ஆறுதல் செய்தி தயாரிப்பு தரப்புக்கு கிடைத்தது. ஒரு வார காலமாக தலைவா படத்தை பார்க்க வருவதாக கூறிக் கொண்டே இருந்த வரிவிலக்கு குழுவினர் 8 ந் தேதி காலை பதினொரு மணிக்கு படம் பார்க்க வருவதாக உத்தரவாதம் கொடுத்தார்கள். அதன்படி காலை பதினொரு மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகிலிருக்கும் ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் தலைவா திரையிடப்பட்டது.

தயாரிப்பாளர் தாணு, டைரக்டர் விஜய்யின் அப்பா ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் இவர்களை வரவேற்றார்கள். இந்த நேரத்தில் 'நிமிர்ந்து நில்' படத்திற்காக டப்பிங் பேசுவதற்காக அங்கு வந்திருந்தார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இவரும் தாணுவும் வெகுநேரம் தனியே சென்று பேசிக் கொண்டிருக்க, படம் முடிந்து வெளியே வந்த வரிவிலக்கு குழுவினர் எவ்வித உத்தரவாதமும் கொடுக்காமல் அவரவர் காரில் ஏறி சென்றுவிட்டார்கள். தனியாக நின்று கொண்டிருந்த ஏ.எல்.அழகப்பனை சூழ்ந்து கொண்டது மீடியா. 'படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகும். அதுக்கான பேச்சு வார்த்தைகள் நல்லபடியா போயிட்டு இருக்கு' என்று கூறிவிட்டு அவரும் பறந்தார்.

இங்கு வரிவிலக்கு ஷோ நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொடநாட்டில் இருந்தார்கள் நடிகர் விஜய்யும், டைரக்டர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ்ஜெயினும். ஆனால் அவர்கள் முதல்வரை சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இவர்கள் திருப்பி அனுப்பட்ட விஷயம் அன்று மாலை நடந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க கூட்டத்தில் வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. 'அரசுக்கும் உங்களுக்கும் இடையிலான சச்சரவை நீக்கிவிட்டு வந்தால் படத்தை ரிலீஸ் செய்கிறோம்' என்று வாய்மொழியாக பேச ஆரம்பித்தார்கள் சங்கத்தினர். அதற்கு அடையாளமாக நாங்கள் கருதுவது வரிவிக்கு வழங்கப்பட்ட சான்றுதான் என்றும் அவர்கள் கூறினார்கள். இறுதியாக 'நாளைக்கு படம் ரிலீஸ் இல்லை' என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியது திரையரங்க உரிமையாளர் சங்கம்.

இதற்கிடையில் கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பும் போது வழியில் கோயமுத்துரிலேயே தங்கிவிட்டார் நடிகர் விஜய் மட்டும். 'நீங்க போங்க. நான் பிறகு வர்றேன்' என்று அவர் கூறிவிட வேறு வழியில்லாமல் அரை மனசோடு சென்னை திரும்பினார்கள் டைரக்டர் விஜய்யும் சந்திரபிரகாஷ் ஜெயினும்.

அன்றிரவே தமிழக அமைச்சர்கள் சுமார் ஏழு பேருக்கு சத்யம் திரையரங்கில் தலைவா திரையிடப்பட்டதாம். இவர்களுடன் உளவுத்துறை அதிகாரிகளும் படம் பார்த்தாக தகவல்.

இவ்வளவு கோபத்தை அரசு விஜய் மீதும், அவரது படத்தின் மீதும் காட்டுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஆங்காங்கே மூக்கை நுழைத்தால் கிடைக்கிற தகவல்கள் அடேயப்பா ரகம். முதலில் இந்த படத்தில் வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள்தான் என்றார்கள். டான்ஸ் ஆடும் விஜய்யை பார்த்து, 'இப்படி ஆடிகிட்டு இருந்தவங்கதான் முதல்வரா ஆகியிருக்காங்க. நீ அவங்களை விட நல்லா ஆடுற. நீயும் முதல்வராகலாம்' என்று ஒரு டயலாக் பேசுகிறாராம் சந்தானம். அரசு தரும் இலவசங்களை ஒரு காட்சியில் கிண்டல் அடிக்கிறார்களாம் இருவரும்.

இப்படியெல்லாம் சொல்லப்பட்டாலும், படத்தில் விஜய் முதல்வராகிற காட்சி ஒன்றும் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் 'தலைவா' ரிலீஸ் ஆகிவிட்டதால் இப்படத்தின் விமர்சனங்கள் இணையதளங்களில் வர ஆரம்பித்துவிட்டது. ஆனால் எந்த விமர்சகரும் விஜய் சி.எம் ஆவது மாதிரி காட்சி இருப்பதாகவோ, சந்தானம் சொல்கிற டயாலாக்குகள் இருப்பதாகவோ எழுதவேயில்லை. எனவே அரசுக்கு தலைவலி தருகிற மாதிரி படத்தில் எதுவும் இருப்பது மாதிரியும் தெரியவில்லை.

பிறகு ஏன்?

நாம் கேள்விப்பட்ட வரையில் விஜய் அடுத்து நடித்துக் கொண்டிருக்கும் படமான ஜில்லாவை ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். அதற்கப்புறம் விஜய் கால்ஷீட் கொடுத்திருப்பது அரசு தலைமைக்கு பிடிக்காத சேனல் ஒன்றுக்குதானாம். அதுமட்டுமல்ல, முதலில் தலைவாவை விலை பேசியதும் அரசுக்கு நெருக்கமான சேனலுக்குதான். ஏனோ படம் அவர்களுக்கு தரப்படவில்லை. மாறாக அதே பிடிக்காத சேனலுக்குதான் போய் சேர்ந்திருக்கிறது.

முக்கிய குறிப்பு & விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட மற்றும் கிளை மன்றங்களுக்கு அவசரம் அவசரமாக ஒரு குறிப்பு போயிருக்கிறது. அதில், இனிமேல் விஜய் பெயரை போஸ்டர்களில் அச்சடிக்கும் போது 'இளையதளபதி' என்று மட்டும் போடவும். வருங்கால முதல்வரே, நாளைய நம்பிக்கை நட்சத்திரமே என்றெல்லாம் அச்சடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம்.

இந்த ஒரு வார பரபரப்பு விஜய்க்கு இரண்டு விஷயத்தை கற்றுக் கொடுத்திருக்கும். ஒன்று நாற்காலிக்கு ஆசைப்பட்டால் ஆணி கிழிச்சாலும் அசரக்கூடாது. அல்லது நாற்காலிக்கே ஆசைப்படக் கூடாது.

விஜய் சாய்ஸ் எதுவோ?