ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் 
போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 
மோதுகின்றன.
ஹைதராபாத் அணி வெளியூர் மைதானங்களில் தோற்றிருந்தாலும், உள்ளூர் 
மைதானமான ஹைதராபாதில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது.
 எனவே அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர போராடும். 
ஆனால் சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆட்டத்தில் மும்பையிடம் படுதோல்வி 
கண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வெற்றிபெற முயற்சிக்கும். மும்பையிடம் 
தோல்வி கண்டது குறித்துப் பேசிய சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, "இந்த 
தோல்வியை எங்களுக்கு விடுக்கப்பட்ட சரியான எச்சரிக்கை மணியாகக் 
கருதுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார். 
அதனால் இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி உள்ளூர் ûமானத்தில் தொடர் 
வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுமா? இல்லை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாதை வீழ்த்தி
 வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே 
அதிகரித்துள்ளது. 
சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் 
பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும்
 பெüலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கிறிஸ் மோரிஸ், மோஹித் 
சர்மா, அஸ்வின் ஆகியோர் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். 
ஹைதராபாத் அணியில் ஷிகர் தவனைத் தவிர வேறு யாரும் பேட்டிங்கில் பெரிய 
அளவில் ஜொலிக்கவில்லை. எனினும் டேல் ஸ்டெயின், இஷாந்த் சர்மா, அமித் 
மிஸ்ரா, கரண் சர்மா என பலமான பந்துவீச்சைக் கொண்டுள்ளது. இவர்கள் 4 பேரும் 
சூப்பர் கிங்ஸ் பேட்மேனுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்பதில் 
சந்தேகமில்லை.
நன்றி தினமணி  
 
No comments:
Post a Comment