Blogger Widgets

Total Page visits

Friday, May 10, 2013

மாணவர்கள் தற்கொலை யார் காரணம்?

பள்ளி மாணவர்கள் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகளின் பொழுது நாம் தினசரிகளின் அன்றாடம் பார்க்கும் செய்தி மாணவர்கள் தற்கொலை. நம்மில் பலர் இதை ஒரு அன்றாட செய்தியாக படித்து சென்றது உண்டு,  பலர் இதை படிக்காமல் அடுத்த செய்திக்கு செல்வதும் உண்டு, இன்னும் சிலரோ இதை படித்து விட்டு கருத்துகள்/விமர்சனம்கள் செய்வது உண்டு, ஆனால் நம்மில் எத்தனை பேர் உணர்த்து/ யோசித்து இருக்கிறார்கள். இது போன்ற யோது ஒரு மாணவனின் மரணத்திற்கு நாமும் ஒரு காரணம் என்று.   

ஒரு மாணவன் என்று நம் சமுதாயத்தில் மாணவராக அல்லது குழந்தையாக பார்க்கபடுகிறார்கள், அவர்கள் என்றுமே அவர்களின் தந்தையின், தாயின்  அல்லது யாரேனும் ஒரு குடும்ப உறவின் கௌரவ சின்னமாக தான் பார்க்க படுகிறார்கள். ஒரு மாணவன் எதோ ஒரு தேர்வில் தோற்று விட்டால் அவனின் தந்தையோ தாயோ அதை ஒரு அவமானமாக தானே பார்கிறார்கள்.  

நான் அறிந்ததில் இருந்து, தோல்வி அடைந்த எந்த ஒரு மாணவனின் பெற்றோரும், தோல்வியும் வாழ்கையின் ஒரு அங்கமே என்று அறிவுரை கூறி அவனை தேற்றியதாக பார்த்ததோ கேள்வி பட்டதோ இல்லை, என் சொந்த வாழ்கை உட்பட.

ஒரு மாணவனுக்கு இந்த சமுதாயத்தில் இருந்து பல விதங்களில் அழுத்தம் தரபடுகிறது. மாணவனின் வெற்றி அல்லது தோல்வி அந்த மாணவன் படிக்கும் பள்ளியின் மானம், அவனை பெற்றெடுத்த தாய் தந்தையின் மானம், உடன் பிறந்த சகோதரன்/ சகோதரியின் மானம், உற்றார் உறவினரின் மானம் உள்ளதாக மாணவன் இந்த சமுதாயத்தல் நம்ப வைக்கபடுகிறான். இது அவனின் மன அழுத்தத்திற்கு முதல் காரணம்.

அதிக மதிப்பெண் பெரும் மாணவன் அறிவு உள்ளவன் என்றும், தேர்வில் மதிப்பெண் பெறாத அல்லது குறைவாக பெற்ற மாணவனின் வாழ்கை ஏதோ  இந்த மதிப்பெண் மட்டுமே வைத்து அமைய போவதை போன்று ஒரு தோற்றம் / மாயை உருவாக்க பட்டு உள்ளது. இதை பொருட்படுத்தாத மாணவன் அணைத்து அவமனக்களையும் மறந்து, பொருத்து இங்கு வாழ்கிறான், இதை செய்யாதவன்/செய்ய முடியாதவன் வேறு முடிவுக்கு போகிறான்.

எனது கருத்து, ஒரு மாணவன் தேர்வில் தோற்றதற்காக தற்கொலை செய்யும் முடிவுக்கு போகிறான் என்றால், அது அவனின் பெற்றோர் அந்த மாணவனுக்கு மன தைரியத்தை ஊற்றி வளர்க வில்லை என்று தான் அர்த்தம்,  ஆசிரியர்கள் ஒரு மாணவன் இந்த சமுதாயத்தில் வாழ கற்று கொடுக்க வில்லை என்று தான் அர்த்தம், இந்த சமுதாயம் வெற்றி பெற்றவனை மட்டுமே போற்றும், தோல்வி பெற்றவனை துற்றும் என்ற மோசமான என்னத்தை விதைத்து இருக்கிறது இந்த சமுதாயம் என்று தான் அர்த்தம்.  
   
ஒரு மாணவன் வெற்றி பெற்றால், இவன் என் மகன் / மகள் என பெருமை படும் பெற்றோர், தோல்வி பெற்ற  மகனையோ/மகளையோ  என் மகள்/மகன் என வெளியே குறும் தைரியம் உண்டா? என்று அந்த தைரியம் வருமோ அன்று நாம் இது போன்ற செய்திகளை பார்ப்பது அரிதாக இருக்கும்.

பெற்றவர்களே ஒரு குழந்தையின் அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடும் பொழுது, அவன் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் பொழுது, அவனின் தோல்வியையும் , அதற்காக அவன் எடுக்கும் முடிவுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் - பெற்றோர்களே!            

1 comment:

Anonymous said...

மிக அருமையான பதிவு, தொடருங்கள்.