இன்ஜினியரிங் படிப்பு மவுசு குறைந்ததால் கலை-அறிவியல் கல்லூரிகளில்
 சேர மாணவர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 
பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது.
பொறியியல் 
மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த  4 ம்  தேதியும், மருத்துவ மாணவர் 
சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 9 ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு 
வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும்  பெரும்பாலான கலை -அறிவியியல் 
கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்க தொடங்கி விட்டன. 
தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.25 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் 
இன்ஜினியரிங் படித்து முடிக்கின்றனர். அவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் 
மதிப்பெண்  பெறுபவர்கள் மட்டுமே நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் 
வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலைக்காக போராட வேண்டியுள்ளது. 
ஆண்டு 
 தோறும் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏராளமானோர் வேலைக்காக அலைந்து 
வருகின்றனர். அதனால், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதை விட 
பி.காம், பி.எஸ்சி, பிபிஏ போன்ற பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வமாக 
உள்ளனர்.  அதனால் கலை-அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வாங்க 
மாணவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 
மருத்துவம், இன்ஜினியரிங் விண்ணப்பங்களை வாங்கியுள்ள மாணவர்கள், கலை- அறிவியல் கல்லூரிகளிலும் 
விண்ணப்பங்களை வாங்கி வருகின்றனர். இதுத்தொடபாக விண்ணப்பம் வாங்க வந்த 
மாணவர்கள் கூறுகையில், ‘‘மருத்துவம், இன்ஜினியரிங் படிக்க அதிக செலவு 
ஆகிறது.  இன்ஜினியரிங் படித்துவி ட்டு பலர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். 
பி.காம், பி.எஸ்சி படிக்க அதிக செலவு ஆகாது. முடித்தவுடன் ஏதாவது ஒரு 
வேலைக்கு சென்றுவிடலாம். மேலும், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கி 
தேர்வுகள் போன்ற போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு செல்ல முடியும். 
அதனால், கலை-அறிவியல் கல் லூரிகளில் சேர விண்ணப்பம் வாங்க வந்து 
இருக்கிறோம்’’ என்றார்.
பி.காம் படிப்புக்கு மவுசு
கலை-அறிவியல்
 கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பிபிஏ போன்ற பல்வேறு பட்டப்படிப்புகள் 
இருந்தாலும், பி.காம் படிப்புக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.  இதனால், 
பி.காம் சீட்டுக்கு மாணவர்கள் போட்டி போடுகின்றனர். இதனை அறிந்து கொண்ட பல 
தனியார் கல்லூரிகள் பி.காம் படிப்பை பி.காம் (பொது), பி.காம்  (ஹானர்ஸ்) என
 பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஆனாலும் ஆண்டு தோறும் கல்லூரிகளில் 
பி.காம் சீட்டு கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது. பி.காம் படிப்புக்கு 
அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை எடுப்பதில் மாணவர்கள் அதிக 
ஆர்வம் காட்டுகின்றனர்.
நன்றி  Dinakaran 
 
No comments:
Post a Comment