இந்திய
திருநாட்டில் வாழும் மக்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பை கூர வேண்டுமானால்
அதற்கு ஒரு தனி கட்டுரையே எழுத வேண்டும். மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு இந்திய
குடிமகனின் ரத்தத்தில் உள்ள சுரபி நாளங்கள் போன்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள்
நடக்கும் போது சச்சின் அவுட் ஆனார் என்று தெரிந்து உயிர் விட்டவர்கள் எத்தனை பேர். சச்சின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் அடித்தால்
அதை தன் வாழ் நாள் சாதனையாக கொண்டாடிய மக்கள் எத்தனை பேர். மக்களின் இந்த உணர்சிகளுக்கு
மேலும் விருந்தாக 2008 - இல் ஆரம்பிக்கபட்டது தான் இந்தியன் பிரிமியர் லீக்.
இந்தியன்
பிரிமியர் லீக் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்ட காலத்திலிருந்து பல மாற்றங்கள் நடந்து
வருகிறது. போட்டியின் இடையே இடைவேளை விடும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.சியர் லீடர்/கேர்ள்
அறிமுகபடுத்தபட்டார்கள். இதற்கு கூரப்பட்ட காரணம் போட்டியில் சுவாரசியம் அதிகபடுத்த
என்று கூரப்பட்டது. போட்டியின் நடுவில் விடப்படும் இடைவேளையில் வீரர்களுக்கு அவர்களின்
அணியின் பயிற்சியாளர் சில தகவல்களை தருகிறார்.
அளவுக்கு
மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப மக்களின் அளவுக்கு அதிகமான கிரிக்கெட்
போட்டியின் மீதான மோகத்தினை பயன்படுத்தி வளர்ந்த இந்தியன் பிரிமியர் லீக் போட்டியும்
இப்போது நஞ்சாக மாரி உள்ளது. போட்டியில் ஆர்வத்தை அதிகபடுத்துகிறேன் என்று இவர்கள்
செய்த பல செய்கைகள் இப்போது அதன் விழ்சிக்கும்
வழி ஏற்படுத்தி தந்து உள்ளது.
கிரிக்கெட்
நிர்வாகிகள் மட்டும் தான் போட்டிகளில் சுவாரசியம் ஏற்படுத்த முடிவுகள் எடுக்க வேண்டுமா
என்ன, நாங்களும் முடிவுகள் எடுப்போம் என்று களத்தில் குதித்து உள்ளனர் சில வீரர்கள்.
ஒரு சில ஓவர்களில் அதிக ரன்களை விட்டு கொடுத்து
போட்டியில் சுவாரசியத்தை அதிக படுத்த முடிவு எடுத்து உள்ளனர். போட்டியின் நிர்வாகிகள்
சில முடிவுகள் எடுத்து சுவாரசியத்தை கூட்டி அதன் மூலம் மக்களை மைதானத்திற்கு வரவைத்து பணம் பார்க்கும் போது, ஒரு சில ஓவர்களில் ரன்களை
விட்டுகொடுத்து அதன் மூலம் பணம் பார்க்கின்றனர் கிரிக்கெட் சில வீரர்கள். எனது பார்வையில்
இருவரும் ஒருவர்களே.
வீரர்கள் செய்தது தவறு என்றால்
அதன் நிர்வாகிகள் செய்ததும் தவறே. நிர்வாகிகள் செய்தது சரி என்றால் வீரர்கள் செய்ததும்
சரியே. தண்டிப்பதானால் இருவரையும் தண்டிங்கள்.
IPL போட்டிகளில் வீரர்களை சேர்க்க ஏலம் முறையே தவறு தான். மனிதர்கள் மனிதர்களாக
நடத்த பட்டார்களா? அவர்களும் ஒரு பொருள்களை போல விற்கபட்டனர். அதிக விலைக்கு போனவர்கள் மகிழ்ச்சியோடும், சுமாரான விலைக்கு போனவர்கள்
ஆறுதலோடும், அடி மாட்டு விலைக்கு போனவர்கள்
மன நிம்மதி இன்றியும் இருந்து இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழ வாய்ப்பை
ஏற்படுத்தி உள்ளது.
எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க போகிறதோ அதுவும்
நன்றாகவே நடக்கும் என்று நம்புவோமாக.
இனி வரும் களங்களில்
வீரர்களை வீரர்களாக மதியுங்கள்.அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குங்கள். மைதானங்களின்
தரத்தை மேம்படுத்துங்கள். வீரர்களுக்கு பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தாருங்கள். இளம் வயது வீரர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க முயற்சி செயுங்கள்.ஓய்வு பெற்ற வீரர்களை
கொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி தாருங்கள்.மற்ற வீரர்களை இங்கு விளையாட அழைப்பதை
போல நம் வீரர்களை மற்ற நாட்டின் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்குங்கள்.
No comments:
Post a Comment