தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 3 நாள்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் 552 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம்
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் சென்னை அண்ணா
பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.
2013-14-ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை
நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள்
தொடங்குகின்றன.
இந்தக் கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை
தொடங்கியது. முதல் நாளில் 87,712 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 16,676 விண்ணப்பங்களும், திங்கள்கிழமை
46,949 விண்ணப்பங்களும் விற்பனையாகின. மொத்தம் 1,51,337 விண்ணப்பங்கள்
இதுவரை விநியோகிப்பட்டுள்ளன.
நன்றி தினமணி
No comments:
Post a Comment